Sunday, August 11, 2013

தலைவா

இயக்குனர் விஜய் படங்களில் ஒரு கிளாஸ் இருக்கும். அந்த க்ளாஸை பெருமளவு கொண்டுவருவது, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷும் நல்லா மியூசிக் பண்ணியிருப்பார். அஜயன் பாலா போன்றவர்கள் பங்களிப்பு இருக்கும். வசனங்களும் கொஞ்சமா இருக்க, காட்சிபூர்வமா நிறைய கன்வே பண்ணுவார், இயக்குனர் விஜய். இதுக்கு மேலே, இவரு இன்ஸ்பயர் (!) ஆகுற படங்கள், நல்ல படங்களா இருக்கும். அதுக்காகவே, இவருடைய படங்களைப் பார்க்க ஒரு ஆர்வம் இருக்கும்.



இந்த படமும் அப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தில் இருக்க, இந்த படம் இங்கு ரிலீஸ் ஆகியிருப்பது, எங்கள் வீட்டில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள திரையரங்கில். வியாழக்கிழமையே ரிலீஸ் ஆனாலும், 15 டாலர் என்பதால், ஒருநாள் கழித்து பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். வெள்ளிக்கிழமை மழை. அதனால், இன்று தான் போக முடிந்தது. இதற்குள் பாசிடிவ், நெகடிவ் விமர்சனங்கள் கவனத்திற்கு வந்து சேர்ந்தன.

போகும் வழியில், ஒரு இந்திய மளிகை கடைக்கு, முறுக்கு, சிப்ஸ், சமோசா வாங்கி வர சென்றேன். (என்ன தான், அமெரிக்காவில் படம் பார்த்தாலும், பார்க்குறது தமிழ் படமில்லையா? நம்மூர் பீலிங் வேண்டாம்?) சமோசா கொள்ளை விலை சொன்னதால், அதை மட்டும் வாங்கவில்லை. அந்த கடையில் ஒரு தமிழ் பையன் வேலை பார்க்கிறான். பார்த்து ரொம்ப நாள் ஆனதால், கொஞ்ச நேரம் பேசினோம். தலைவா போகிறேன் என்றதும் ‘வேண்டாம்’ண்ணா’ என்று எச்சரித்தான். ’கிளம்பியாச்சு, ஒரு டைம் பாஸ்’ என்று சொல்லிக்கிளம்பினேன்.

இன்று காலையில் ஜீன்ஸ் படத்து ‘அதிசயம்’ பாடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒன்று தோன்றியது. அந்த படம் வந்த புதிதில், அந்த பாடலின் ஒளிப்பதிவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இன்று ஏனோ அப்படி தோன்றவில்லை. அசோக்குமார் பெரிய ஒளிப்பதிவாளர் தான். இருந்தாலும், இன்றைய ஒளிப்பதிவாளர்கள் வைக்கிற கோணங்களும், வண்ணங்களும், கண்ணில் ஒத்திக்கொள்வது போல் இருக்கும். குறிப்பாக, நீரவ்ஷாவை சொல்லலாம். ஒவ்வொரு ஷாட்டும் அருமையான புகைப்படத்தரத்தில் இருக்கும். அதற்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் காரணமாக சொல்லலாம். என்னவோ, எனக்கு உலக அதிசயங்களை காட்டும் அந்த ஜீன்ஸ் பாடல், இப்போது முழுமையாக ஒளிப்பதிவு தரத்தில் இல்லை என்று தோன்றியது. உடனே, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவை பெரிய திரையில் காண வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. ’தலைவா’ - நான் காண இதுவும் ஒரு காரணம். (விஜய் படம் பார்க்குறதுக்கு என்னலாம் காரணம் சொல்ல வேண்டி இருக்குது??!!!)

இயக்குனர் விஜய், இப்ப இன்ஸ்பயர் ஆகியிருப்பது, நாயகன், தேவர் மகன், ஹிந்தி ராம் கோபால் வர்மாவின் டான் படங்களைப் பார்த்து. அதற்காக, முதலிலேயே மணிரத்னம், ராம் கோபால் வர்மா, ப்ரியதர்ஷன் போன்றோர்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறார். ரொம்ப நல்லவராம்!!!

மும்பைக்கே போகாமல், தமிழில் வந்த மும்பையில் எடுக்கப்பட்ட படங்களை மட்டும் பார்த்தால், என்ன தோன்றும்? மும்பை போலீஸ் வேஸ்ட். எதுவென்றாலும், அங்குள்ள தாதாவிடம் சென்று தான் முறையிட வேண்டும். நல்லவர்கள் நல்ல டானிடமும். கெட்டவர்கள் கெட்ட டானிடமும். மாதமொருமுறை மத கலவரம் நடக்கும். தெருக்கொரு தீவிரவாதி இருப்பான். இந்த படமும் அப்படிப்பட்ட தோற்றத்தைதான் அளிக்கிறது. புதிதாக, மொழி சார்ந்த பிரச்சினைகள் வேறு சேர்ந்திருக்கிறது.

விஜய் அரசியலுக்கு வந்தால், இப்பட கிளிப்பிங்ஸ், சாங்ஸ் ரொம்பவே உதவும். இருவர் பட பாணி, மக்கள் ஆதரவு கரகோஷ காட்சிகள் இருக்கிறது. எனக்கென்னவோ, விஜய் சீரியஸாக சமூக வசனங்கள் பேசுவது, எடுபடுவதாக தெரியவில்லை. ‘வாங்கண்ணா வணக்கங்கணா’ பாடலில் மட்டும், அதற்கு முந்தைய, பிந்தைய பாடி லேங்குவேஜ் போய், வழக்கமான ஸ்டைலில் ஆடுகிறார்.

அமலா பாலை மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்தால், ஏதோவொரு கவுண்டமணியிடம் சேர்ந்து நடித்த படத்தில், லலிதாகுமாரி டீச்சர் வேஷம் போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்வாரே, அது தான் நினைவுக்கு வருகிறது. சும்மா சொல்லக்கூடாது. அம்மணிக்கு வெயிட்டான, ட்விஸ்ட்டான வேஷம் தான். கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் காம்பையர் சுரேஷ்க்கு முதல் பாதியில் பொருத்தமாக ஹோட்டல் முதலாளி வேஷம் கொடுத்திருக்கிறார்கள். அதைப்போல், டிவியில் ரியாலிட்டி டான்ஸ் போட்டியில் ஆடியவர்களுக்கெல்லாம், பொருத்தமாக டான்ஸர்ஸ் ரோல் கொடுத்திருக்கிறார்கள். ஏன், ஹீரோ விஜய்க்கு கூட முதல் பாதி ரோல் தான் பொருத்தமாக இருக்கிறது!!!

சத்யராஜ் மேக்கப் நன்றாக இருந்தது. அவர் சொல்லி தொடங்கிய ‘கத்தியை தொட்ட’ டயலாக்கை ஹீரோ விஜய் முதல் காமெடியன் சந்தானம் வரை நாலைந்து முறை சொல்லி ஏதோ தத்துவம் போல் ஆக்கப்பார்த்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பார்த்த கதையை, விஜய் அண்ட் டீம், அவர்கள் பாணியில் சொல்லலாம் என்று பார்த்திருக்கிறார்கள். புத்திசாலித்தனமான காட்சிகள், ரொம்பவும் குறைவு. க்ளாஸாக சொல்ல நினைத்ததால், ஸ்லோவாகவும் செல்கிறது. இதனால், ஆங்காங்கே போர் அடிக்கிறது. தவிர, சிங்கம் மாதிரி பாஸ்ட் பார்வேர்ட் படங்களை பார்த்துவிட்டு, இதை பார்த்தால் இன்னும் ஸ்லோவாக தெரிகிறது.

நான் பார்த்த தியேட்டரில், இண்டர்வெல் விடவில்லை. கோகோகோலாவுடன் உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கிய காரணத்தில், ஒருகட்டத்தில் அது வேறு முட்ட தொடங்கியதால், எப்படா விடுவார்கள்? என்று தோன்றிவிட்டது. உட்கார்ந்து பார்க்க வைத்தவர்கள் - சந்தானமும், நீரவ்ஷாவும் தான்.

நாம் பார்க்காத மலையாள, ஹிந்தி, இங்கிலிஷ் படங்களை இதுவரை பார்த்து இன்ஸ்பயர் ஆகி படமெடுத்த இயக்குனர் விஜய், இப்ப நாம் பார்த்த தமிழ் படங்களையே பார்த்து இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம் இதுவென்பதால், முந்தைய படங்களில் இருந்த இண்ட்ரஸ்ட், இந்த படத்தில் நமக்கு இல்லை. அதனால், இயக்குனர் விஜய் அவர்களே, நீங்கள் நாங்கள் பார்க்காத வேறு மொழி படங்களைப் பார்த்தே இன்ஸ்பயர் ஆகி படமெடுங்கள்!!!

.

3 comments:

Krubhakaran said...

Super.(உங்க விமர்சனம்).

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/3_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Anonymous said...

good review