ஒரு காரணமாக குடும்பத்தை சொல்லலாம். இவ்வருட மத்தியில் குழந்தையுடன் மனைவி அமெரிக்கா திரும்பினார். அதன்பிறகு, பெருமளவு நேரம் குழந்தையுடன் செலவிடுவதால் வருத்தமில்லை.
சென்ற மாதம், பாப்பாவின் முதல் பிறந்தநாள் வந்தது. ஒரளவுக்கு நண்பர்கள் நிறைய இருப்பதால், கொஞ்சம் விமர்சயாக அனைவரையும் அழைத்து கொண்டாட வாய்ப்பு கிடைத்தது. நிறைய நண்பர்களின் உதவியால் நிகழ்ச்சி சிறப்பாக நிகழ்ந்தது. தவிர, நம்ம கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுத்தது.
பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அங்கு ஒரு ப்ரொஜக்டரும் திரையும் நல்ல ஸ்பிக்கர் சிஸ்டமும் இருந்ததால், சில வீடியோக்களை ரெடி செய்திருந்தேன். பிறந்தததில் இருந்து தற்போது வரைக்குமான மாற்றங்களை வெளிப்படுத்தும்விதமான வீடியோவும், கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்த சில தருணங்களின் தொகுப்பான மற்றொரு வீடியோவும் நிறைய பாராட்டைக் கொடுத்தது. மொத்தத்தில் இந்த பிறந்தநாள் தினம் மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது.
---
இந்த வருட தொடக்கத்தில் பயணங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க நினைத்திருந்தேன். குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ், ஆஸ்பென், க்ளன்வுட் ஸ்ப்ரிங்ஸ், யெல்லோ ஸ்டோன் போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் பற்றி மட்டுமே பதிவிட்டுள்ளேன். மற்றவைகளையும் இட வேண்டும்.
போஸ்ட் கார்ட் போல சில இடங்களை புகைப்படம் எடுத்தது இவ்வருட அனுபவம்.
---
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த ஆண்டின் மத்தியில் வரை நளபாகத்தில் தான் கொஞ்சம் நிபுணத்துவம் பெற முடிந்தது. தொழில்நிமித்தமாக, எந்த துறையில், எந்த புதிய தொழில்நுட்பத்தில் கவனத்தை செலுத்தலாம், என்ற குழப்பத்திலேயே ஆண்டு ஓடோடிவிட்டது. இருக்கிற வேலையை சிறப்பாக செய்தாலும், Status quoவை மெயிண்டெயின் செய்யவேண்டியதாகிவிட்டது. வருட கடைசியில் சில வாய்ப்புகள் சில யோசனைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது. பார்க்கலாம்.
---
அபார்ட்மெண்டில் இருக்கும் சில இந்திய குடும்பங்களுடன் இணைந்து இவ்வருட புத்தாண்டைக்கொண்டாடினோம். ஒரு கேக் வாங்கி அதில் நம் கைவண்ணத்தில் 2013 என்று சாஸ் வைத்து எழுதி, குழந்தைகளை வைத்து வெட்டி, புது வருடத்தை வரவேற்றோம்.
.
4 comments:
Wish You A Very Happy New Year!!!
- Veera
Thanks Veera... Happy New Year...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Post a Comment