தற்சமயம், கொஞ்சம் கேமரா கையுமாக சுற்றுவது என்றிருப்பதாலும், நம்மையும் ஒரு போட்டோகிராபர் என்று சில அப்பாவிகள் நம்புவதாலும், இம்மாத போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பு செய்யலாம் என்றிருக்கிறேன்.
இம்மாத போட்டிக்கான தலைப்பு - மரங்கள்/மரம்.
சமீபகாலங்களில் இந்த தலைப்புக்கு பொருத்தமான புகைப்படங்கள் நிறைய எடுத்திருக்கிறேன் என்பதால், புதிதாக எடுக்க தேவையில்லாமல், எடுத்ததில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் போதுமானதாக இருக்கிறது.
எதை அனுப்புவது என்பதில் தான் குழப்பம். (நீ புடுங்குனது பூரா...!!! நோ... நோ... நோ...)
பதிவுலக நண்பர்கள், ஐடியா மணிக்களாய் இருக்கும்போது என்ன குழப்பம்? ஒரு பதிவைப்போட்டா ஆச்சு!
கேள்வி - கீழ்க்கண்ட நான்கு புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்? (நல்லதாய் பார்த்து!!!)
ஒன்று:
இங்கு இருக்கும் அனைத்து புகைப்படங்களும், சமீபத்தில் இவ்வருட இலையுதிர் காலத்தின் போது எடுத்தது. இந்த புகைப்படம் இங்கே இருக்கும் சீஸ்மேன் பார்க் என்னும் பார்க் சென்றபோது, அருகே இருந்த தெரு இப்படி கலர்புல்லாய் அழகாய் இருக்க, உடனே எடுத்தது.
இரண்டு:
இது அந்த சீஸ்மேன் பார்க்கில் எடுத்தது. ஒரு மரம் மட்டும் தனியே வேறு கலரில் வித்தியாசமாய் இருக்க, க்ளிக்கியது.
மூன்று:
இந்த படம், ஒரு மாதத்திற்கு முன்பு ஆஸ்பென் என்ற ஊருக்கு ட்ரிப் சென்றபோது, அங்கு இருக்கும் மெரூன் பெல்ஸ் என்ற மலைப்பகுதியில் எடுத்த புகைப்படம். போஸ்ட் கார்ட், வால்பேப்பர் என்று மட்டுமே பார்த்த சில இடங்களை இங்கே தரிசிக்க முடிந்தது. இடங்களைப் பற்றிய பதிவுகள், விரைவில். இப்போதைக்கு, இது அங்கு எடுத்த படம் என்ற தகவல் மட்டும்.
நான்கு:
போன புகைப்படத்தில் பார்த்த அதே மரங்கள் தான். வேறு ஆங்கிளில்.
இனி உங்க டர்ன். எது நல்லா இருக்கு? சொல்லுங்க.
வேணும்னா, புகைப்படங்களைக் கிளிக்கி பெரிசா பார்த்து சொல்லுங்க. டவுன்லோட் செஞ்சு, உட்கார்ந்து, படுத்து பார்த்து பொறுமையா ஆராஞ்சு யோசிச்சும் சொல்லலாம். (மக்கா, டவுன்லோடி உங்க பேருல அனுப்பி ஆப்பு வச்சுறாதீங்கப்பு!!!)
எதுவுமே நல்லா இல்லையென்றாலும், கூச்சப்படாம சொல்லுங்க. நான் வெட்கப்படாம, பிங்கி பிங்கி பாங்கி போட்டு ஏதாச்சும் ஒண்ணை அனுப்பிடுவேன்!!!
ஒரு ரகசிய கேள்வி. இந்த PIT நடுவர்கள் எந்த மாதிரி படங்களை தேர்ந்தெடுப்பாங்க? யாருக்காச்சும் தெரியுமா?
(PIT நடுவர்களே வந்து நேரடி பெயரிலோ அல்லது புனைப்பெயரிலோ வந்து கருத்து சொல்லலாம். ஆட்சேபனை இல்லை. ரகசியம் காக்கப்படும்!!!)
பயப்புள்ள ஒருத்தரும் ஒண்ணும் சொல்லல? அப்பவும், முன்சொன்ன அதே விதிமுறை கடைப்பிடிக்கப்படும். பிங்கி பிங்கி பாங்கி.
.
9 comments:
அழகு
இந்த மாத நடுவரின் பார்வை, தேர்வு எப்படி இருக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது:)!
அனைத்தும் அருமை. நாலாவது மிகப் பிடித்தது.
அழகு... அருமை...
பிடித்தது : மூன்றாவது (வித்தியாசமானது)
நன்றி...
tm1
படங்கள் எல்லாமே மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.........
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
அனைத்தும் அருமை.
3,4 வித்தியாசமான படங்கள்.
super photos
2 one super
its different
3rd is good
1st one for sure.
///மக்கா, டவுன்லோடி உங்க பேருல அனுப்பி ஆப்பு வச்சுறாதீங்கப்பு!!!//
நீங்களே ஐடியா கொடுக்கறீங்க. வாழ்க வளமுடன். Hahaha
Post a Comment