Wednesday, October 24, 2012

தூத்துக்குடி மாவட்டம் - 25

தூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி, ஊருக்குள் பல விழாக்கள் நடந்திருப்பதாக தெரிகிறது.

அனுராதா ஸ்ரீராமின் கச்சேரி, விவேக் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி, ஆங்காங்கே நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், உணவு திருவிழா என நான் வாசித்த கடந்த வார செய்திகளில், தூத்துக்குடி வெள்ளி விழா கொண்டாட்டங்கள் அடிபட்டுக்கொண்டே இருந்தது.

இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஒரு அனிமேஷன் பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். பாடலை பார்க்கும் போது, எந்த கட்-பேஸ்ட் வேலையும் இல்லாமல், மெனக்கெட்டு உழைத்திருப்பது தெரிகிறது.

கொஞ்சம் பக்கத்து மாவட்ட ஊர் பெருமையையும் சேர்த்திருக்கிறார்கள்!!!

இருந்தாலும், ஊர் பெருமையை ஒரே பாட்டில், அனைவருக்கும் சுலபமாக புரியும்வகையில், குறிப்பாக குழந்தைகளுக்கு, உருவாக்கியிருப்பதற்கு பாராட்டுக்கள்.



இப்பாடலை உருவாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனிமேசன் மிகவும் சிரமப்பட்டு (முக்கியமான பல இடங்களையும் இணைத்து) உருவாக்கி உள்ளார்கள்... நன்றாக இருந்தது...

நன்றி...

T Senthil Durai said...


அருமை ! நல்ல இருக்கு !

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி - இரண்டும் அருமையான மாவட்டங்கள் .

"குலை " விடும் குரல் அருமை .

த.செந்தில்துரை