Monday, August 6, 2012

அரேபிய வடை

ஏற்கனவே எத்தியோப்பிய தோசையைப் பார்த்தோம். இப்ப, அரேபிய வடையைப் பார்ப்போம்.

அரேபிய வடை என்பதற்கு பதில் மத்திய கிழக்கு வடை எனலாம். ஏனெனில், மத்திய கிழக்கு நாடுகளில் அனைத்திலும் ‘இது’ பேமஸ். அது என்ன ’இது’ என்றால், ஃபலாஃபெல் (Falafel). நமக்கு எதற்கு இப்படி வாயில் நுழையாத பெயர் எல்லாம்? வடை என்றே சொல்லலாம்.




ஒருமுறை அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மெடிடெரெனியன் ரெஸ்டாரண்ட்டிற்கு சென்ற போது, இதை சுவைத்து பார்க்க நேர்ந்தது. நம்மூர் உணவு வகைகள் போல் உலகம் முழுக்க இருக்கிறது போல் என்று நினைத்துக்கொண்டேன். நாம் தான் கொஞ்சம் தேட வேண்டி இருக்கிறது.

----



இந்த வடையின் சுவை, நம்மூர் பருப்பு வடை போல் இருக்கிறது. ஆனால், இவர்கள் சேர்ப்பது, கொண்டைக்கடலை. கொண்டைக்கடலையை சீரகம், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றுடன் நன்றாக அரைத்து எண்ணெய்யில் பொரித்து எடுத்தால், அரேபிய வடை ரெடி. நம்மூர் வடை மாவு போல் பரபரவென்று இல்லாமல் மையாக அரைத்து தயாரிப்பதால், என்ன ஏது இருக்கிறது என்று தெரியவில்லை. இணையத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டேன்.

சேர்க்கும் விஷயங்களைப் பார்க்கும்போது, உடலுக்கு நல்லது தான் என்று நினைக்கிறேன். எண்ணெய்யில் பொறிப்பது மட்டும் தான் பிரச்சினை.




வெந்தயக்கீரை இருப்பதால் லைட்டாக கசப்பு இருக்கிறது. இருந்தாலும், சீப்பாக, விரைவாக இங்கு வடை சாப்பிட வேண்டுமென்றால், மத்திய கிழக்கு உணவு வகைகள் கொண்ட ஹோட்டல்களுக்கு சென்றால் கிடைக்கும்.

மாலை நேர காப்பிக்கு சைடாக சாப்பிட தோன்றும் சமயம், போய் வாங்கிவிட்டு வந்துவிடலாம் என்றிருக்கிறேன். ஆபிஸில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில், எனக்கு தெரிந்து இரண்டு கடைகள் இருக்கிறது.



நம்மூரைப் போல் கைகளில் தட்டி போட மாட்டார்கள் போல. எல்லாம் ஒரே மாதிரி ஷேப்பில் இருக்கிறது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபல சாலையோர உணவு வகையாம். அங்கு கைகளில் தட்டி போட்டாலும் போடுவார்கள்.

---

வடையுடன் இலவச இணைப்பாக, இன்னும் சில உணவு வகைகளை பார்த்துவிடலாம்.



பீட்டா (மேலுள்ள படத்தில் வடைகளுக்கு கிழே இருப்பது) - மைதா அல்லது கோதுமை மாவில் தயாரிக்கப்பட்டு கிடைக்கிறது. இதனுள் இங்கு கிடைக்கும் மற்ற ஐட்டங்களை வைத்து சாப்பிட கொடுக்கிறார்கள். தனியாகவும் எதனுடனாவது தொட்டு சாப்பிடலாம்.



மேலுள்ள படத்தில் நீள நீளமாக இருப்பதை பார்த்து பயந்துவிடாதீர்கள். ஏதோ ஒரு வகை மஷ்ரூம். சிகப்பு கலரில் இருப்பது, கத்திரிக்காய் ஊறுகாய். கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கும், பிடிக்கும் ஊறுகாய் சுவையில் இருக்கிறது.

மஞ்சள் சாதம் - மஞ்சள் பொடி போட்டு தயாரித்த சாத வகை.

ஷவர்மா - இதை பெங்களூரில் இருக்கும் சில கடைகளில் பார்த்திருக்கிறேன். ஒரு கம்பியில் நிறைய கறி வகைகளை மாட்டி, அதை நெருப்பிற்கு நடுவே சுற்ற விட்டு, பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து, வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் சேர்த்து கொடுப்பார்கள். இன்று சங்கடஹர சதுர்த்தி என்பதால், இதை சாப்பிட வீட்டில் தடா!!!

ஹம்மூஸ் - கொண்டைக்கடலை, எள்ளு ஆகியவற்றை ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு போன்றவற்றுடன் பசையாக அரைத்து எல்லாவற்றுடனும் தொட்டு சாப்பிட கொடுப்பார்கள்.

இப்போதைக்கு இது போதும். அடுத்து இன்னொரு பதிவில் சைனீஸ் கொத்துக்கறி பற்றி பார்க்கலாம். :-)

---

டவுட் - ஒரு ‘நீயா நானா’ எபிசோடில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், காக்கா வடையை ‘சுட்ட’ கதையின் வரலாறைப் பற்றி கூறினார். அந்த கதை, கிரேக்கம், பிரான்ஸ், அரபு நாடுகள், வட இந்தியா வந்து பிறகு தான் தமிழ்நாட்டிற்கு வந்ததாம்.

தமிழ்நாட்டில் தான் வடையாம். மற்ற இடங்களில் அங்கு உள்ள உணவு வகைகளாம். ப்ரெட், கேக், மாமிசம், ஜிலேபி என்று ஒவ்வொரு இடத்திற்கும் ஒன்று சொன்னார். அரபு நாடுகளில் மாமிச துண்டு என்றார். ஏன் ஃபலாஃபெலை விட்டார்களோ?

.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படத்துடன் விரிவான பகிர்வு... நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Unknown said...

". இது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபல சாலையோர உணவு வகையாம். அங்கு கைகளில் தட்டி போட்டாலும் போடுவார்கள்."
இல்லை... இங்கும் ஒரே அளவு,ஒரே வடிவத்தில் தான் இருக்கும்... அதற்கு அச்சு இருக்கிறது ...

Unknown said...

". இது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபல சாலையோர உணவு வகையாம். அங்கு கைகளில் தட்டி போட்டாலும் போடுவார்கள்."
இல்லை... இங்கும் ஒரே அளவு,ஒரே வடிவத்தில் தான் இருக்கும்... அதற்கு அச்சு இருக்கிறது ...

Anonymous said...

Good post about vadai.my favorite eppavume paruppu vadathan......Appuram How r u Anna...i like your posts...how is tenwar..i am in bangalore from tenkasi..because u also stayed bangalore correct..
Anbudan....Annamalai murugan G

சரவணகுமரன் said...

நன்றி வலைஞன்

சரவணகுமரன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி ராஜா

சரவணகுமரன் said...

ஆமாங்க அண்ணாமலை முருகன். பெங்களூரில் தான் இருந்தேன்.