திட்டமிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்து வந்தது.
தற்சமயம் ஒருவழியாக சந்தர்ப்பம் அமைந்துவிட்டது.
எங்கே போவது என்பது அடுத்த கேள்வி. எங்கேயுமே போனதில்லை என்பதால் இது சுலபமான கேள்வியாகவும் தெரிந்தது. போக நிறைய இடங்கள் இருப்பதால், இது கடினமான கேள்வியாகவும் தெரிந்தது.
மனைவியுடன் போக வேண்டும், குழந்தையுடன் போக வேண்டும் என்பதால் அவர்களது ஆர்வத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது.
அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியில் இருந்தால், நியூயார்க், நயாகரா என்று சென்று இருக்கலாம். தென் கிழக்கில் இருந்தால், ப்ளோரிடா, மியாமி என்று சென்று இருக்கலாம். நாங்கள் இருப்பதோ, ஒரு மாதிரி நடுவில். எல்லா பக்கமும் தூரம் தான். கிராண்ட் கேன்யன், லாஸ் வேகாஸ் போன்றவை கொஞ்சம் பக்கம். லாஸ் வேகாஸ் செல்ல எனக்கே விருப்பம் இல்லை. கேசினோ தான் அங்கு முக்கிய விஷயம் என்பது அதற்கு ஒரு முக்கியமான காரணம். கிராண்ட் கேன்யனில் அடிக்கிற வெயிலில் வெளியே குழந்தையுடன் சுற்ற முடியுமா? என்பது கேள்வியாக இருந்தது.
முடிவில், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லாம் என்று முடிவெடுத்தோம். காரணங்கள்?
- நமக்கு ரொம்பவும் பிடித்தது, சினிமா. சர்வதேச சினிமாவின் தலைநகரமான ஹாலிவுட், இங்கே தான் இருக்கிறது.
- குழந்தைகளுக்கு பிடித்த டிஸ்னிலேண்ட் இங்கே தான் இருக்கிறது.
- கடற்கரை பார்க்க விரும்பினால் பார்க்கலாம்.
- வெட்டவெளியில் வெயிலில் சுற்ற வேண்டியது மட்டும் இருக்காது.
இப்படி லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல நிறைய காரணங்கள் கிடைத்தது.
முதல்முறை செல்வதால், நிறைய தயக்கங்கள் இருந்தது. டென்வரில் கார் ஓட்டி இருக்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெரிய நகரில் கார் ஓட்ட முடியுமா? (அமெரிக்காவில் வாடகை காரை, நாமே எடுத்து ஓட்டுவது தான் எளிது. மலிவு. டிரைவர் அமைத்துக்கொள்வது பெரிய லார்டுகளுக்கு உரித்தானது) குழந்தையை பயணத்தின் போது, சமாளிக்க முடியுமா? தங்குவதற்கு நல்ல ஹோட்டலாக இருக்குமா? சாப்பாடு? இப்படி பல.
ஒரு வழியாக எல்லாவற்றையும் யோசித்து, செல்லும் இடங்களை முடிவெடுத்து, விமான டிக்கெட் எடுத்து, ஹோட்டல், கார் புக் செய்து, சென்ற வாரயிறுதியில் வெற்றிகரமாக சென்று வந்தாச்சு.
இனி?
அந்த கதையை இந்த ப்ளாகில் எழுதி தள்ள வேண்டியது தான்!!! :-)
.
6 comments:
waiting...
...ம்... தொடருங்கள்... நன்றி... (TM 1)
சீக்கிரம் சொல்லுங்கள்.
நன்றி அமுதா கிருஷ்ணா
நன்றி திண்டுக்கல் தனபாலன்
சொல்லிருவோம், கிருஷ்.
Post a Comment