நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் திரையரங்கு சென்று படம் பார்க்க ஒரு வாய்ப்பு. பில்லா 2.
பலத்த எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம், அதை பூர்த்தி செய்ததா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். (ம்ஹும்!!!)
நான் அஜித்தை நம்பியதை விட, ஆஸ்கார் ரவிசந்திரனை தான் ரொம்பவும் நம்பினேன். அவரே தயாரித்தாலும், படம் நன்றாக இல்லையென்றால் அவருடைய பேனரில் வெளியிட மாட்டார். அவர் பில்லாவை வாங்கி வெளியிடுகிறார் என்றால்... என்று நம்பி சென்றேன்.
படத்தில் உள்ள நல்ல விஷயங்களை முதலில் சொல்லிவிடலாம். மேக்கிங், உலகத்தரம் எனலாம். இரா. முருகனின் வசனங்கள் செம ஷார்ப். வெயிட்டான பஞ்ச் டயலாக்ஸ். ”தன்னை தானே செதுக்கிய” பாடல் மேக்கிங், நான் இதுவரை எங்கும் பார்த்திராதது.
கதை, திரைக்கதை, ஆக்ஷன் என அனைத்திலும் ஆங்கில பெயர்கள்.
பில்லா எப்படி உருவானான்? என்ற தெரிந்த கதைதான். இலங்கை தமிழராக தமிழகம் வரும் பில்லா, ஒவ்வொரு காட்சியிலும் ஒருபடி முன்னேறி செல்கிறார். ரொம்ப வேகம் தான். இந்த வேகத்தில் சென்றால் தான், இந்த படத்திலேயே பில்லாவாக முடியும் என்பதால் வேறு வழியில்லை.
காமெடி இல்லாத குறையை தீர்ப்பது, படத்தின் ஹீரோயின் தான். மாமா, மாமா என்றைழைக்க, திரையரங்கம் சிரித்து மகிழ்கிறது.
வழக்கம் போல், இங்கு ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிட்டார்கள். சுப்ரபாதத்திற்கு விளக்கம் ஆங்கிலத்தில் போட்டார்கள். அதுவும் நல்ல காமெடி தான்.
அகதிகளாக வரும் தொடக்க காட்சி, நிமிர்ந்து உட்கார வைக்க, பின்னால் தொடரும் காட்சிகள், நம்மை சீட்டினுள் மடக்கி போடுகிறது. அது போலவே, இடைவேளைக்கு பிறகு வரும் அரசியல் காட்சிகளும் நிமிர வைக்க, தொடருபவை மடங்க வைக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளில், குறிப்பாக, ஹெலிகாப்டர் காட்சியில் டூப் போடாமல் அஜித்தே நடித்தார் என்றார்கள். பாராட்ட வேண்டிய முயற்சி தான். இருந்தாலும், இம்மாதிரி காட்சிகளுக்கு, இந்த காலத்தில் செட்டில் நடித்தே, (ஏன் நடிக்காமலேயே!!!) இதே எபக்ட் காட்ட முடியும் என்பதால், இம்மாதிரி முயற்சிகளை அஜித் தவிர்க்கலாம்.
”என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும், நானே செதுக்கினது” என்று படத்தில் அடிக்கடி அஜித் சொல்கிறார். அவ்வப்போது, இப்படி படம் பார்க்க வருகிறவர்களையும் சேர்த்து செதில் செதிலா செதுக்கி விடுகிறார்!!!
---
சொந்த கதை - பயந்து பயந்து பாப்பாவை படத்திற்கு கூட்டி சென்றோம். ஆரம்ப அதிரடி காட்சி ஒலிக்கு சிறிது பயந்தாள். பிறகு, தூங்கி விட்டாள் (பாப்பா மட்டும் தான்). அதன் பிறகு, விழித்தவள், அசராமல் படம் பார்த்து ஆச்சர்யத்தை கொடுத்தாள். ஒலி அதிகமாக வரும் சமயத்தில், பாப்பாவின் காதுகளை, ஆளுக்கொன்று என்று பொத்திக்கொண்டோம்.
.
10 comments:
நல்ல விமர்சனம்
நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்....
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html
விமர்சனம் அருமை.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html
Neengaluma?!?!?!
நானும் படம் பார்த்தேன் நண்பரே. ஏதோ ஒரு முறை பார்க்கலாம். ஆனால் யாருக்கும் படம் எப்படியிருக்கிறது என்று சொல்ல யூகிக்க கூட முடியாது...!
ஏனென்றால் அவர்களுக்கே புரிந்திருக்காது....!
இருந்தாலும் அஜித் காக ஒருமுறை பார்க்கலாம்....!
நன்றி ப்ரேம்
நன்றி தோஹா டாக்கீஸ்...
escape...
Did you know the shootout?
ஆமாம். ஒரு பதிவிட்டிருக்கிறேன்.
Post a Comment