Friday, March 30, 2012

நல்லவர்கள்

இன்று ஒரு நிகழ்ச்சியை இணையத்தில் பார்த்தேன். கண்டிப்பாக பகிர வேண்டும் என்று தோன்றியது.

---

கேரளாவில் லாட்டரி சீட்டு விற்றுவருகிறார் சுரேஷ். வறுமையான வாழ்க்கைதான். இவரிடம் ஒருநாள் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் லாட்டரி சீட்டு வாங்க வந்திருக்கிறார்.

பெரியவருக்கு திருமண வயதில் இரு பெண்கள். கஷ்டத்தில் இருப்பவர் தான். ஐந்து சீட்டுகள் வாங்கியவர், ”எவ்வளவு?” என்று கேட்க, சுரேஷ் “இருநூற்று ஐம்பது” என்று சொல்ல, “என்னிடம் இப்போது அவ்வளவு இல்லை. நாளை வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு பெரியவர் சென்று விட்டார்.

அடுத்த நாள், லாட்டரி சீட்டுக்கான ரிசல்ட் பேப்பரில் வந்திருக்கிறது. சுரேஷ் ரிசல்ட்டை பார்க்க, அதில் பெரியவர் எடுத்த ஐந்து சீட்டுகளில் ஒன்றிற்கு 1 கோடி பரிசு விழுந்திருக்கிறது.

சுரேஷை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கிறார்கள். சுரேஷிற்கு நல்ல காலம் என்று. ஆனால், சுரேஷ் அந்த பணம் தனக்கு சொந்தமானதில்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறார். அதைவிட முக்கியம், கஷ்டத்தில் இருக்கும் அவருடைய வீட்டினரும் அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

சுரேஷ், பெரியவரை எப்படியோ தேடி கண்டுபிடித்திருக்கிறார். “உங்க சீட்டுக்கு பணம் விழுந்திருக்கிறது” என்று சொல்ல, பெரியவர் “நான் இன்னும் உங்களிடம், இதற்கான பணத்தை கொடுக்கவில்லையே? அப்படியென்றால் இது உங்களுடையது தானே?” என்று சொல்லி வாங்க மறுக்க, சுரேஷ் விடவில்லை. “இது நீங்கள் வாங்குவதாக சொல்லி, என்னிடம் வைத்திருக்க சொன்ன சீட்டு. இது உங்களுக்கு தான்.” என்று சொல்லி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.

மலையாளியான இவருக்கு, நடிகர் பார்த்திபன் சென்னைக்கு வரவழைத்து, ராஜ மரியாதை கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்.

எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? விக்ரமன் படத்தில் கூட இப்படிப்பட்ட நல்லவர்களைப் பார்க்கமுடியாது!!!

---

வீடியோ இங்கே இருக்கிறது.



பகிர வேண்டிய விஷயம்தானே? (இதை அப்படியே கட் & பேஸ்ட் செய்துகூட, நீங்களும் பகிரலாம்!)

.

8 comments:

கிரி said...

//எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? விக்ரமன் படத்தில் கூட இப்படிப்பட்ட நல்லவர்களைப் பார்க்கமுடியாது!!! //

உண்மை தான் :-)

சரவணகுமரன் டென்வரில் தீ என்றார்களே உங்கள் பகுதியில் ஏதும் பிரச்சனை இல்லையா?

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

சுரேஸ் போல நேர்மையான நல்லவர்கள் எராளமாக இருந்தால் நம் நாடு எங்கேயோ போயிருக்கும்

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

சரவணகுமரன் said...

விசாரிப்பிறகு நன்றி கிரி. :-)

இங்கு ஏதும் பிரச்சினை இல்லை. இணையத்தில் வாசித்து தான், நானும் தெரிந்துக்கொண்டேன்.

சரவணகுமரன் said...

நன்றி பாபா

சரவணகுமரன் said...

நன்றி விருட்ச விதை

சரவணகுமரன் said...

ஆமாம் சதீஷ்

BalHanuman said...

பகிர்வுக்கு நன்றி!