அதற்குள் ஒரு வருடமா? என்பது போல் இருக்கிறது. என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று நினைத்து பார்க்கிறேன்.
பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கே இருக்கும், சுற்று வட்டாரத்தில் இருக்கும் இடங்களை மட்டுமே சுற்றி வந்திருக்கிறேன். இந்தியாவில் இருக்கும் போது கூட, ஆங்காங்கே ட்ரிப் போட்டு சென்று வந்து கொண்டிருப்பேன்.
ஊரில் இருக்கும்போது, எங்காவது ஒரு ஊருக்கு போய் வந்தாலே, அந்த அனுபவத்தைப் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் எழுதி போடுவேன். இங்கு, ம்ஹூம்.
ஆரம்பத்தில் நிறைய எழுத தோன்றியும், நேரமில்லாததால் எதுவும் எழுதவில்லை. ‘பட்டிகாட்டான் மிட்டாய்கடை’ போல அனைத்தையும் எழுத நினைத்தும் முடியவில்லை. ஞாநி ’ஓ பக்கங்களில்’ ஒருமுறை அவர் அமெரிக்கா வந்த அனுபவத்தை வைத்து, அமெரிக்காவை பற்றியும் அமெரிக்கர்களை பற்றியும் பல கருத்துகளை கூறியிருந்தார். என்னால் என் அனுபவங்களை வைத்து, எந்த அனுமானத்திற்கும் வர முடியவில்லை.
ஓகே. என் ஒரு வருட அனுபவத்தை சில புகைப்படங்களில் காட்டுகிறேன்.
---
ரெடியா?
ஸ்டார்ட்

கண்டம் விட்டு...

ஏர்போர்ட் குதிரை

பால் காய்ப்பு

டென்வர் இஸ்கான் கோவில்

பனி மலை பயணம்
எங்க போனாலும், மீன விட மாட்டோம்ல!

டென்வர் மிருகக்காட்சி சாலை
மியூசியம் கேண்டீன்
பாப்பா போட்டோ
நாம என்னைக்கி இப்படி தட்டுல சமாதி ஆவோமோ’ன்னு பார்க்கும் மீன்
நாய் ட்ரெஸ்

விளக்குமாத்துல கலைநயமா?
ஆப்பிள் முட்டாய்
பட்டாம்பூச்சி தோட்டம்
மெதுவா தொடு
காட்டுக்குள் இருக்கும் புத்தர் கோவில்

டேய்! நீ எப்படிடா இதுக்குள்ள போன?

அதிரடிக்காரன் மச்சான் மச்சான்...

ரொம்பவும் நீளுவதால், இன்னொரு பதிவில் தொடர்கிறேன்...
.
9 comments:
டென்வர் சுற்றுலா போன மாதிரி இருந்துச்சு. அங்கேயும் மீன் தானா. தொடருங்கள்...
Namma alunga creativity Denver enna space shuttle lla pona kooda marathu, koraiyathu.....
Vazhaipazhathula voidhupathi :-)
சரவணகுமரன் படத்துக்கு இன்னும் கொஞ்சம் விரிவான விளக்கம் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
நன்றி ராது
கிரி,
ஒவ்வொரு படத்துடன் கூடிய அனுபவங்களை விரிவாக கூற ஆசைதான். கண்டிப்பாக எழுதுகிறேன். :-)
டென்வர் ஜூ அல்ல! டென்வர் விலங்குகாட்சியகம் அல்லது பண்ணித்தமிழில் டென்வர் ஸூ.
ஜூ = Jew
Vassan,
சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அழகு தமிழில் திருத்தி விட்டேன்.
அப்புறம், அது பண்ணி அல்ல. பன்றி என சொல்ல வந்தீர்கள் என நினைக்கிறேன். :-)
குமரன்: என்னுடைய கருத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி.
பண்ணித்தமிழ்
பண்ணித்தமிழ்
பண்ணித்தமிழ் 2
நான் டென்வருக்கு தெற்கே 450 மைல் தொலைவில் உள்ளேன் - 1982 லிருந்து.
* Jai Ho உணவகத்தின் உரிமையாளர் என் இளவலின் மைத்துனர்!
பண்ணித்தமிழ் பற்றி சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி, vassan. இது பற்றி புதிதாக தெரிந்துக்கொண்டேன்.
உங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.
ஜெய்-ஹோவில் பல முறை உண்டிருக்கிறேன். நல்ல சுவையுடன் இருக்கும். என் நண்பர்கள் பலருக்கு பிடித்தமான உணவகம். எனது வாழ்த்துக்களை, உங்கள் இளவலின் மைத்துனருக்கு கண்டிப்பாக தெரிவிக்கவும்.
Post a Comment