ஆனால், அந்த வருத்தம் ரொம்ப காலம் நீடிக்கவில்லை.
நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே, ஒரு இந்திய ரெஸ்டாரெண்டில் கொத்து பரோட்டாவை மெனுவில் பார்த்ததும், ஒரு நிம்மதி வந்தது. அங்கே பணியாற்றிக்கொண்டிருந்தவர், தமிழகத்தை சேர்ந்தவர். அதுவும், தேனியை சேர்ந்தவர். கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் கொடுத்து, கொத்து பரோட்டா பார்சல் வாங்கி கொண்டுவந்து சாப்பிட்டோம். நன்றாக இருந்தாலும், அந்த விலையை கருதி, அதன் பிறகு அங்கு செல்லவில்லை.
---
அமெரிக்காவில் இருக்கும் இந்திய பலசரக்கு கடைகளில் உள்ள பெரிய ப்ரிட்ஜ்களில், இந்திய உணவு ஐட்டங்கள் அனைத்தும் ப்ரிஸ் செய்யப்பட்ட நிலையில் இருக்கும். இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா, நான் என்று உடனே சமைக்கும் வகையில் அனைத்தும் இருக்கும். எனக்கு இப்படி ரெடிமேடாக கிடைக்கும் ஐட்டங்கள் மேல் பெரிதாக ஆரம்பத்தில் அபிப்ராயம் இருந்ததில்லை. ஆனால், பரோட்டாவை மட்டும் அப்படி விட்டு தள்ள முடியவில்லை. வாங்கி வந்தாயிற்று.
---
அன்று எங்கள் வீட்டில் சிக்கன் குழம்பு. இரவு சாப்பிடும் முன்பு, ஒரு யோசனை. நாமே கொத்து பரோட்டா செய்தால் என்ன?
எப்படி செய்வது என்ற கேள்வியே எழவில்லை. இத்தனை வருடங்களாக, எத்தனை ஊர்களில், எத்தனை கடைகளில், கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பேன்? எத்தனை முறை, அதை கடைகளில் செய்வதை பார்த்திருப்பேன்? பாட்ஷாவில் சொல்வது போல், நாடி, நரம்பு, ரத்தம் இதிலெல்லாம் கொத்து பரோட்டாவை பற்றிய நினைப்புடனே வாழ்பவனுக்கு, இதையெல்லாம் சொல்லி தர வேண்டுமா?
வெங்காயம், தக்காளி, மிளகாய் (தேவையேயில்லை), கருவேப்பிலை வெட்டியாச்சு!

பரோட்டா கவரை பிரிச்சாச்சு!

இதுதான் அந்த ரெடிமேட் பரோட்டா...

ரெண்டு நிமிஷம் திருப்பி, திருப்பி போட்டு வாட்டினா, பரோட்டா ரெடி!

பரோட்டாவை பிச்சு போட்டு ரெடியா வைச்சுட்டு, எண்ணையில் வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கி, அப்புறம் தக்காளியையும் சேர்த்து வதக்கிட்டு...

நல்லா வதங்கிய பிறகு, பரோட்டா, கறிக்குழம்பு, முட்டையைப் போட்டு கொத்த வேண்டியது தான்...

தேவையென்றால் மசாலா பொடி சேர்த்துக்கொள்ளலாம். டேஸ்ட் பார்த்து உப்பு சேர்த்துக்கலாம். பிடிச்சிருந்தா, மிளகு பொடியும் சேர்த்துக்கலாம். கொத்தி முடிந்தப்பிறகு, கொத்தமல்லி சேர்த்தால், சுவையான கொத்து பரோட்டா ரெடி!!!

ஹைய்யா! ஜாலி!!!
.
15 comments:
இந்த ஐடியா எனக்கு தோணாம போய்சே.
வேறு ஏதேனும் ஷர்ட் அண்ட் சிம்பிள் உணவுகள் இருந்தால் சொல்லுங்கள்..
நன்றி
பசிக்குதே!!!!!நானும் உங்க ஜாதி தான்...சாப்பிட 5 மணி நேரம் வண்டி ஓட்டணும்...
அருமை நானும் அமெரிக்காவில் தான் இருக்கிறேன் இன்னும் கொத்து பரோடா கிடைக்கலை
ha ha ha good
ஹைய்யா! ஜாலி!!! //
அருமை. பயனுள்ள பகிர்வு.
Anna munna ellam pattu pathi pathivu potuvinga,eppo parathaku maritinkele,pattuku vankalen!
Niroo,
இவ்வளவு நாட்கள் சமையல் குறிப்புக்கள் தான் போடாமல் இருந்தேன். இனி அதையும் போடுகிறேன். :-)
ஹி ஹி... Reverie, வண்டியை எடுங்க...
தியா,
அப்ப என்ன? நம்ம வழிக்கு வந்திடுங்க...
நன்றி ஷர்புதீன்
நன்றி இராஜராஜேஸ்வரி
தர்மா, பாடல்கள் பற்றிய பதிவுகளை என் நண்பர் மகேந்திரன் எழுதி வந்தார். அவரைத்தான் சொல்ல வேண்டும்.
நானும் தற்சமயம் புதுப்பாடல்களைக் கேட்பதில்லை என்பதால் எழுதுவதில்லை. எழுத முயற்சிக்கிறேன். கேட்டதற்கு நன்றி.
தமிழன் உணவும் பாசமும் பிரிக்க முடியாதது.
சுவையான பதிவு.
பதிவர் இளவஞ்சி அவர்கள் அமெரிக்காவில் இருந்த போது தான் செய்த கொத்து புரோட்டாவை ”பிச்சி போட்ட புரோட்டா” என்ற பெயரில் பதிவிட்டிருந்தார்.
Hi,
Every sunday I prepare Kothu parotta. Instead of this paratha, use "Maharani" parotta in green color box. or you can use "DAily delight" parotta..
This parottas really superb.
Thanks,
Suresh
Post a Comment