கோயமுத்தூருக்கு க்ராஸ் கட் ரோடு போல, பெங்களூருக்கு எம்ஜி ரோடு போல, டென்வருக்கு 16th street mall. பக்கத்தில் இருக்கும் 15, 14 தெருக்களும், கடைத்தெருக்கள் தான் என்றாலும், ஏனோ இந்த ஊரில் இது கொஞ்சம் ஸ்பெஷல்.

இந்த தெருவின் ஒரு பக்கத்தில் இன்னொரு பக்கம் செல்வதற்கு, இலவசமாக பஸ்கள் ஓட்டப்படுகின்றன. நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் இத்தெருவில், இந்த பஸ்கள் மெதுவாக நின்று நின்று செல்கின்றன.

இந்த தெருவில் ஒரு இந்திய கடையை பார்த்தோம். இந்திய சாமியார் ஐட்டங்கள் நிறைய வைத்திருந்தார்கள். வெண்கல சிலைகளை நம்மூரிலேயே யானை விலைக்கு விற்பார்கள். இங்கு டைனோசர் விலையை எழுதி வைத்திருந்தார்கள்.
டென்வர் ரொம்ப பழமையான ஊர் அல்ல. பெரிய ஊர் என்றும் சொல்ல முடியாது. ஊருக்குள் இருக்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் சொற்பம். ஆனால், ஆங்காங்கே அழகான சிற்பங்கள் நிறைய வைத்திருக்கிறார்கள்.
சாலையின் ஓரத்தின் நின்று கிட்டார், பேக்-பைப்பர் வைத்து வாசித்து, காசு சம்பாதிக்கும் ஆசாமிகளைக் காண முடிந்தது.

சாலையின் ஒரு இறுதியில் பஸ் நிலையமும், இன்னொரு இறுதியில் ஒரு ஆறும் இருக்கிறது. ஒரு ஓரத்தில் இருந்து இன்னொரு ஓரத்திற்கு நடந்தால், ஒரிரு மணி நேரங்கள் சுலபமாக ஸ்வாஹா ஆவதால், இன்னொரு பொழுது போகாத நாளில் இங்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.

4 comments:
ஏன்? ஏன் இந்த மாதி எங்களை பொறாமைப்பட வைக்குறீங்க..
கவிதை காதலன்
kitar, bagpiper vaithu, kasu parpavanai, photo vil kanom? athai oru photo eduthu potuirukalam!
நன்றி கவிதை காதலன். சும்மா ஒரு பகிர்தல், பதிதல்.
மணிஸ், அதை புகைப்படம் எடுக்கவில்லை :-(
Post a Comment