நடந்த முடிந்த தேர்தல் பற்றிய பதிவல்ல இது. என் வாழ்க்கையில் நடந்த முடிந்த மாற்றங்களைப் பற்றிய பதிவு இது.
போன பதிவில் ’மாற்றங்களுடன் எழுத வந்திருக்கிறேன்’ என்றவுடன், சிலர் எழுத்தில் மாற்றம் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அது அப்படியே தான் (மொக்கையாக!) இருக்கும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.
என் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களில், இரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று, திருமணம். இன்னொன்று, இட மாற்றம்.
---
கல்யாணம் நல்லபடியாக நடந்தது. அந்நேரங்களில் இணையம் பக்கமே வர முடியாததால், அது பற்றி எதுவும் எழுத முடியவில்லை.
தற்சமயம், நண்பர்கள் மத்தியில் பத்திரிக்கை வைப்பது பெரும்பாலும் இணையம் வழியாகவே நடக்கிறது. எனக்கு நண்பர்கள் அனைவருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் சுற்ற வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன்.
நான் இப்படி திட்டமிட்டாலும், பலரும் ’எதற்கு அலைகிறாய்? மெயிலிலேயே அனுப்பி விடு. நீ அனுப்பாவிட்டாலும் கண்டிப்பாக வந்துவிடுவோம்’ என்று கூறியிருந்தார்கள். இருந்தும், விடவில்லை. முடிந்தவரை, பெங்களூர், சென்னை, கோயமுத்தூரில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நேரிலேயே சென்று கொடுத்துவிட்டேன். மற்றவர்களுக்கும், ஸ்டாம்ப் ஒட்டியோ, ஸ்பீடு போஸ்ட்டிலேயோ அனுப்பி வைத்துவிட்டேன். நல்ல அனுபவமாக இருந்தது.
இந்த அவசர ஓட்டத்தில், நான் தவறவிட்டது, இந்த தளத்தை. இணைய நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும். கல்யாணம் ஆகி ரெண்டு மாதம் தான் ஆகிறது. இப்ப வாழ்த்தினாலும், சந்தோஷமாக வாங்கி கொள்வேன்.
---
இணையம் பக்கமே வர முடியாத அளவுக்கு, அவ்வளவு பிஸியா? இரண்டாவது மாற்றமான - இடமாற்றம், அப்படி செய்து விட்டது.
பெங்களூரில் இருந்து அமெரிக்காவின் டென்வருக்கு பணி நிமித்தமாக மாற்றமாகி வந்துவிட்டேன்.
நான் வரும்போதே மனைவியையும் அழைத்து வந்துவிட வேண்டும் என்பதற்காக, அலுவலகத்திற்குள்ளும், வெளியே பதிவு ஆபிஸ், பாஸ்போர்ட் ஆபிஸ், விசா ஆபிஸ் என்றும் அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். முடிவில், நல்லபடியாக நினைத்தப்படி இருவரும் வந்து சேர்ந்துவிட்டோம்.
---
ஊர், வேலை எல்லாம் புதுசாக இருக்கிறது. இது அனைத்தையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் வரும். படிப்பவர்களுக்காக இல்லாவிட்டாலும், நான் ஆச்சர்யப்பட்ட விஷயங்களை திரும்ப பார்க்க ஏதுவாக, நான் பின்னால் படித்து பார்ப்பதற்காகவாவது எழுத வேண்டும் என்று நினைத்தும், நேரமின்மையால் எழுத முடியவில்லை.
’எனக்கு நேரமில்லை’ என்று சொல்லவே கூச்சமாக இருக்கிறது. அப்படி ஒன்றும் பெரிதாக செய்து கிழிக்கவில்லை என்றாலும், சிறு சிறு வேலைகளிலேயே முழு நேரமும் ஓடிவிடுகிறது.
இதோ இவ்வளவு எழுத இன்று அவகாசம் கிடைத்துள்ளது. இப்படியே தொடர்ந்தால், நிறைய எழுதுவேன். எழுத நிறைய இருக்கிறது.
.
40 comments:
My best wishes... Happy married life.
Sampathkumar
வாழ்த்துக்கள் மாப்ள!
இனிய மாற்றங்கள். திருமண நல்வாழ்த்துக்கள்:)!
உங்களிடமிருந்து அடிக்கடி கிடைத்து வந்த பெங்களூர் பதிவுகளை மிஸ் பண்ணுவேன்:)! அதனாலென்ன புது இடத்தைப் பற்றி எழுத ஆரம்பியுங்கள். தெரிந்து கொள்கிறோம்.
Happy married life
அட!நிறைய நல்ல மாற்றங்கள்! பூங்கொத்து!
வாழ்த்துகள் பாஸ் :)))
வாழ்த்துக்கள்:
வாவ் தல.. இனிய திருமண வாழ்த்துக்கள்... பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுத்தா மொய் அனுப்பி வைப்போம்ல... ஹி..ஹி..
நீங்கள் சொன்னது போல் நாம் எழுதி வைப்பது பின்னால் ஒரு டைரி குறிப்பு போலாவது பயன்படுகிறது.. ஆகவே தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்.
அன்பு மனம் கொண்டு
ஆசை மொழிகள் பேசி
இன்புற வாழ்ந்து
ஈன்றெடுப்பீர் மகவு ஒன்று...!
உன்னதமாய் பெயரைச் சொல்ல
ஊரே போற்றும் வண்ணம்
எட்டுத் திக்கும் புகழ் மணக்க
ஏழேழு ஜென்மமும் இணைந்திடுக..!
ஐ விரல் ஒரு கையாக
ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய்
ஒரேழு பொருத்தங்கள் கொண்டு
ஒளவை சொன்ன அத்திபடி
அக் என எக்கணமும் வாழ்ந்திடுக....!
இனிய திருமண வாழ்த்துக்கள் புது மணமக்கள் இருவருக்கும்....!!!!
வாழ்த்துக்கள் சரவணக்குமரன். Welcome to the club :-)
நன்றி சம்பத்குமார்
நன்றி விக்கி
நன்றி ராமலக்ஷ்மி.
இந்த ஊரைப் பற்றி கண்டிப்பாக எழுதுவேன்.
நன்றி ரமேஷ்
நன்றி அருணா
நன்றி கீதா
சுகுமார்,
பேங்க் அக்கவுண்ட் நம்பரா? வேண்டவே வேண்டாம். :-)
வாழ்த்துக்கள் மட்டுமே போதும்.
நன்றி வடுவூர் குமார்
ஜமீல்,
அருமையான ஆத்திசூடி வடிவிலான வாழ்த்துக்கள். ரொம்ப நன்றி.
நன்றி கிரி. க்ளப் நல்லா இருக்குமா?
Congratulations Saravanakumaran...
I'm happy for the changes in your life.. Keep writing..
My heartiest wishes to you Kumaran.
Anusha
happy married life!
Happy Married life
Happy Married life!!!!
வாழ்த்துக்கள்
நண்பா... வாழ்த்துக்கள்...! அமெரிக்கா சென்றது வருத்தம் தான்... திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப அயல் நாடு சென்றுள்ளீர்கள்... இனி உலகளவிலான பதிவுகளை எதிர்பார்க்கலாம்..! என்ன பதிவுகளின் எண்ணிக்கை தன குறைந்து விட்டது... ! இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்...
திருமண வாழ்த்துக்கள் சரவணன் !
அடிக்கடி எழுதுங்கள் !
பெங்களூர் ஐ பற்றி எழுதியதை போல அமெரிக்காவையும் எழுதுங்கள்
Happy Married life and Happy stay at Denver :)
Unga wife unga blog a padichaangala??
திருமண நல்வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா
நன்றி அனுஷா
நன்றி நெல்லை ராம்
நன்றி கிஷோர்
நன்றி அமுதா கிருஷ்ணா
நன்றி கார்த்தீஸ்வரன்
நன்றி சுரேஷ்
நன்றி சாந்தக்குமார்.
ம். படிச்சாங்க.
நன்றி கீதப்ப்ரியன்
Post a Comment