Friday, December 3, 2010

எந்திரன் vs நந்தலாலா - அறிவு ஜீவிகளின் நேர்மை?



இரண்டும் ஒவ்வொரு வகை படம். ஒப்பிடக்கூடாது. தெரியும். ஆனால், இவ்விரு படங்களை பற்றிய நம்மூர் அறிவு ஜீவிகளின் பார்வையை பார்க்கும் போது தான், இவர்களின் நேர்மை அடி வாங்குகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு. அதெல்லாம் சரி. ஆனால், சராசரி ரசிகர்கள் ரசிக்காததை “இதுல்லாம் உலக தரம். உனக்கு புரியாதடா” என்று விமர்சிப்பதும், அவர்களுக்கு பிடித்ததை ”இது ஒரு குப்பை” என்று விமர்சிப்பதும் தான் அவர்களுடைய ஒரே குறிக்கோளா எனும் சந்தேகம் வருகிறது.

நந்தலாலா மோசமான படம் என்று சொல்லவில்லை. ஆனால், அதில் சொல்வதற்கு நிறைய குறைகள் இருக்கிறது. அவை எதையையும் கண்டுக்கொள்ளாமல், அதுவொரு உன்னதமான படம் என்று போற்றுவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.

உண்மையிலேயே, நான் படத்தை ரொம்பவும் கூர்ந்து கவனித்து, குறியீடுகளை தேடவில்லை தான். ஒரு படம் இவ்வாறான ஆய்வை, ரசிகனிடம் எதிர்ப்பார்க்கலாமா? அதுவே, ரசிகனை படத்துடன் ஒன்ற வைக்க வேண்டாமா? சரி, விடுங்க.

இந்த படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களிடம் நல்ல ‘நடிப்பு’ இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் வருவது போல், நிஜ வாழ்க்கையில் யாரும் இருப்பதில்லை. பின்ன, நீங்களும் நானும் யாரையாவது பார்த்தோமானால், கொஞ்சம் நேரம் போஸ் கொடுத்துவிட்டு, ஆஃப் அன் ஹவர் கழித்து, பல அர்த்தங்களைக் கொடுக்கும் கூர் வசனத்தையா பேசுவோம்? இல்லை, பேசாமலே உள்ளுக்குள் பேசிக்கொள்வோமா?

இளையராஜாவின் இசைக்கு தான், இந்த படத்தில் எத்தனை பாராட்டுக்கள்? ஏதோ, இந்த ஒரு படத்தில் மட்டும் தான் அவர் உண்மையாக இசையமைத்தது போல. இந்த படத்தின் இசையை விட, எந்த விதத்தில் ‘நான் கடவுள்’ படத்தின் இசையோ, ‘பா’ படத்தின் இசையோ, ‘பழசிராஜா’ படத்தின் இசையோ குறைந்தது? இவர்களின் கண்ணை மூடிவிட்டு, ஆர்.கே. நடித்த ‘அழகர் மலை’ படத்தின் பின்னணி இசையை போட்டுக் காட்டி, ‘நந்தலாலா’ பின்னணி இசை எப்படி என்று கேட்டிருந்தால், ‘ஆஹா! என்னா உன்னதம்!’ என்று மெய் சிலிர்த்திருப்பார்கள்.

எந்திரன் படத்திற்காக ரசூல் பூக்குட்டி, குப்பை மேட்டில் திரிந்து குப்பை சத்தத்தையும், மெழுகுவர்த்தியில் தீ அசையும் சத்தத்தையும் ரெக்கார்டிங் செய்த விதத்தை பார்த்தீர்களா? மூச்.

வெறும் அழகியல்களை மட்டும் கணக்கில் கொண்டு, கமா சோமா படங்களுக்கு சற்றும் குறைந்திடாத சென்டிமெண்ட் காட்சிகள் படம் முழுக்க இருக்கிறது. கீழே விழுந்த பெண்ணுக்கு, தெருவில் போகிறவன், அடிப்பட்ட இடத்தில் பாசத்துடன் தடவிக்கொடுக்கிறான். அடுத்த காட்சியில், அந்த பெண்ணை தோளில் தூக்கிக்கொண்டு பாட்டு. போகும்போது, அந்த பெண்ணும் அவனுடைய நெஞ்சில் குத்திவிட்டு ஓடுகிறாள். அய்யோ சாமி! படத்தில் யாருக்கு மனநிலைப் பாதிப்பு?

படத்தில் இரு அம்மாக்களை தேடி, இரு ஊர்களுக்கு செல்கிறார்கள். குறியீடு வைக்கிறதுதான் வைக்கிறீங்க. அட, ஊர் பேர்லயுமா வைக்குறீங்க. சரி, அப்படி ஏதாவது ஊரு இருக்கிறதா? நான் கேள்விப்பட்டதில்லை. இந்த சந்தேகத்தினாலேயே, நான் அதற்கு பிறகு அந்த கதாபாத்திரங்களோடு சேர்ந்து பயணப்படவில்லை. இயக்குனர் சொல்லும் கதையை கேட்க ஆரம்பித்துவிட்டேன். நல்லவேளை, சென்னையை காட்டி ‘டோக்கியோ’ என்று பெயர் வைக்கவில்லை.

அது என்ன, இவுங்க அந்த ஊர்களுக்கு போன சமயம், ஊருக்கே லீவ் விட்டுட்டாங்களா? ஒரு ஆளையும் காணும். ஓ! ஜப்பான் படத்தில இல்லையா? சார், ஜப்பான் மட்டுமில்ல, இன்னும் பல நாடுகளில் மக்கள் தொகை கம்மி. நம்மூர் மாதிரி கூட்டம் கூட்டமாக இருக்க மாட்டார்கள். நம்மூரில் எந்த கிராமத்திலாவது, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா? எந்த கிராமத்தில், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, டி-சர்ட் & ஹாஃப் ட்ரவுசருடன் கட்டிப்போட்டிருக்கிறார்கள்? ஜப்பான் படத்தில் அப்படி போட்டிருந்தார்களா, என்ன?

அதிலும் மிஷ்கினுக்கு தங்கை போல் இருக்கும் ரோகிணி, மிஷ்கினின் தாயாம். கஷ்டப்பட்டாவது மேக்கப் போட்டு, ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கலாமா? கூடவே கூடாது. ஆனால், மிஷ்கின் ரோகிணிக்கு மகனாக நடிக்கலாம். வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள்!

சரி, விஷயத்திற்கு வரலாம். ‘மனிதன் உருவாக்கும் ரோபோ காதலித்தால்?’ இந்த ஒரே ஒரு வரி ஒற்றுமையை வைத்துக்கொண்டு, எந்திரனை காப்பி, காப்பி என்று எத்தனை பெரிய மனிதர்கள் சொன்னார்கள்? அந்த மானஸ்தர்களெல்லாம் எங்கு சென்றார்கள்? இங்கு கிட்டத்தட்ட ஷாட் பை ஷாட் ஒருவர் அடித்திருக்கிறார். ஆனால், என்ன சொல்கிறார்கள்? ஐப்பான் படத்தில் அந்த காட்சியை லாங் ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். இங்கு க்ளோஸ் அப்பில் எடுத்திருக்கிறார்களாம். அதனால், இது லைட்டான தழுவலாம். ஒரிஜினலுக்கு செய்யப்பட்ட சரியான மரியாதையாம். சாமிங்களா, உங்களுக்கே ஓவரா தெரியலை? நீங்க சொன்னத பார்த்துட்டு, மிஷ்கின் “அச்சச்சோ, அந்த இடத்துல சரியா கவனிக்காம கேமராவ வைச்சுட்டோமோ?”ன்னு வருத்தப்பட போறாரு!

எனக்கு மிஷ்கின் மீதோ, நந்தலாலா படத்தில் சம்பந்தப்பட்ட எவர் மீதும் வருத்தமோ, கோபமோ கிடையாது. ஆளுக்கு தகுந்தாற்போல், நக்கீரன் வேடமும், மங்குனி வேடமும் போடும் அ.ஜீ.க்களை கண்டுத்தான் வியப்பு. இவர்களின் ’நேர்மையான’ எழுத்தைத்தான், இவ்வளவு நாட்கள் நம்பி ரசித்தேனா?

இப்படியெல்லாம் நான் படங்களில் லாஜிக் பார்க்காதவன் தான். ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தில் இவ்வளவு லாஜிக்கையும் தேடும் அ.ஜீ.க்கள், இந்த ’உலகத்தர’த்தில் ஒன்றையும் கண்டுக்கொள்ளாததே என்னை கேள்வி கேட்க தூண்டுகிறது.

கடைசியாக, இயக்குனர் ஷங்கருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எந்த அ.ஜீ.விடமாவது பாராட்டு பெற வேண்டுமானால், ஒன்று செய்யுங்கள். 3 இடியட்ஸில் அந்த அ.ஜீ.க்கு ஒரு வேடம் கொடுங்கள். பெரிதாக வேண்டாம். எந்த பாட்டு சீனிலாவது, விஜய், இலியானாவுக்கு பின்பக்கம் ஆட வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் தமிழ் சினிமாவை இரட்சிக்க வந்த இயக்குனசெம்மலாக மாறிவிடுவீர்கள். விஜய், நடிப்புக்கடவுளாக மாறிவிடுவார். 3 இடியட்ஸ், தமிழ் திரை உலகின் முதல் தமிழ் சினிமாவாக ஆகிவிடும். என்ன கண்றாவியோ!

.

41 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

y ivlo kovam?

மாணவன் said...

//எந்திரன் vs நந்தலாலா - அறிவு ஜீவிகளின் நேர்மை //

நல்ல அலசல்...

வழக்கம்போலவே உங்கள் ஸ்டைலில்..

தொடருங்கள்....

நன்றி

Anonymous said...

NEKA YARA SOLURINKA NUU TERIYUTHU

எஸ்.கே said...

நல்ல அலசல்!

Anonymous said...

aha neengalum oru sarasari thaana?!?!? Inga USlla childrans museumlla oru periya valayatha soap solution lla dip panni vechirupanga. Athula oru rope tie paneerupanga. Antha ropeaa keela elukka elukka valayam mela pogum. Appo valayathoda sernthu perusa soap bubble varum. Super color fulla attahasama erukkum. Oru 4 feet heightkku valayam vanthavodane ..... pattunu odanchirum.. unga mela vechruntha image pola....

சரவணகுமரன் said...

கோபம் இல்லங்க, ரமேஷ்?

மனதில் தோன்றிய கேள்விகள் தான். :-)

சரவணகுமரன் said...

நன்றி மாணவன்

சரவணகுமரன் said...

நான் ஒரு குரூப்பையே தான் சொல்றேன்.

சரவணகுமரன் said...

வாங்க கிரி

சரவணகுமரன் said...

நீங்கள் என் மேல் வைத்திருந்த இமேஜ்ஜை கலைத்ததற்கு மன்னிக்கவும்.

சராசரியை விமர்சித்தால், அறிவுஜீவி ஆகலாம். அறிவுஜீவியை விமர்சித்தால், அதிஅறிவுஜீவியாக முடியாதா? :-)

மற்றபடி, நான் சராசரி என்று தான் என்னுடைய ப்ரோபைலில் போட்டிருக்கிறேன்.

சரவணகுமரன் said...

நன்றி எஸ்.கே.

Pudhiya Manithan said...

Very good, Nalla Sindhanai

Anonymous said...

Good report. Thanks.

Super Star'S rasigan
Raja
Tuticorin
canraja@gmail.com

Kicha said...

நல்லா நச்சுன்னு சொன்னீங்க. புரியாம ஒருத்தன் படம் எடுத்தா அதை பாராட்டினா நீங்களும் நானும் கூட அறிவுஜீவி.

Anonymous said...

நண்பா, உண்மையில் சொல்லுங்கள், நீங்களே சொன்னமாதிரி எந்திரனையும், நந்தலாலாவையும் ஏன் ஒப்பிடுகிறீர்கள் சைவத்தையும் அசைவத்தையும் ஒப்பிடுவது போல் இருக்கிறது.
1) நந்தலாலா ... ஆரம்பகாட்சிகளில் ரம்பியமான தண்ணீரில் கோரைகள் மிதப்பது அதற்கேற்வாறு ரம்மியமான பின்னிசை.
2) அஸ்வத்ராம் மற்றும அனைவரின்
இயல்பான நடிப்பு

எனது வாழ்நாளின் மனதைக்கவாந்த ஒரு எளிமையான இனிமையான நந்தலாலா..

பார்த்து ரசித்து விட்டு போலாமா- எத்தனையோ சுறாக்களைப் பார்த்தாச்சு இல்லையா...


சிவபார்க்கவி தென்மேற்கு தமிழ்நாடு

Anonymous said...

நண்பா, உண்மையில் சொல்லுங்கள், நீங்களே சொன்னமாதிரி எந்திரனையும், நந்தலாலாவையும் ஏன் ஒப்பிடுகிறீர்கள் சைவத்தையும் அசைவத்தையும் ஒப்பிடுவது போல் இருக்கிறது.
1) நந்தலாலா ... ஆரம்பகாட்சிகளில் ரம்பியமான தண்ணீரில் கோரைகள் மிதப்பது அதற்கேற்வாறு ரம்மியமான பின்னிசை.
2) அஸ்வத்ராம் மற்றும அனைவரின்
இயல்பான நடிப்பு

எனது வாழ்நாளின் மனதைக்கவாந்த ஒரு எளிமையான இனிமையான நந்தலாலா..

பார்த்து ரசித்து விட்டு போலாமா- எத்தனையோ சுறாக்களைப் பார்த்தாச்சு இல்லையா...


சிவபார்க்கவி தென்மேற்கு தமிழ்நாடு

Unknown said...

டாப்ப கழட்டிட்டீங்க

சூப்பரு

Rafeek said...

ஊமை குத்தாக அல்லவா இருக்கு.:)
அன்னவாசல் என்ற ஊர்தான் எனது சொந்த ஊர். புதுக்கோட்டை மாவட்டம்.
நந்தலாலா தரும் அனுபவம் வேறு..எந்திரன் தரும் அனுபவம் வேறு.. இருப்பினும் நீங்க சொல்ல வ்ரும் மோறு மாதிரியான அறிவு ஜீவிகளுக்காகவே இந்த பதிவு அவசியமாகிறது. இன்னோரு விஷயம் நந்தலாலா பாதி திரையரங்குகளில்..எடுத்தாகிவிட்டது!!

Anonymous said...

Neengal enna sonnalum "endhiran" oru KUPPAI padam thaan.

maruthamooran said...

/////எனக்கு மிஷ்கின் மீதோ, நந்தலாலா படத்தில் சம்பந்தப்பட்ட எவர் மீதும் வருத்தமோ, கோபமோ கிடையாது. ஆளுக்கு தகுந்தாற்போல், நக்கீரன் வேடமும், மங்குனி வேடமும் போடும் அ.ஜீ.க்களை கண்டுத்தான் வியப்பு. இவர்களின் ’நேர்மையான’ எழுத்தைத்தான், இவ்வளவு நாட்கள் நம்பி ரசித்தேனா?/////

same here

Anonymous said...

யார் என்ன சொல்றாங்கன்றது முக்கியமில்ல சரவணன்... நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதான் முக்கியம். அதனால இமேஜ் பத்தியெல்லாம் பாக்காதீங்க.

இந்த அறிவு ஜீவி கொசுக்களுக்கு இப்படித்தான் மருந்தடிக்கணும்!

-வினோ

deen_uk said...

//கடைசியாக, இயக்குனர் ஷங்கருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எந்த அ.ஜீ.விடமாவது பாராட்டு பெற வேண்டுமானால், ஒன்று செய்யுங்கள். 3 இடியட்ஸில் அந்த அ.ஜீ.க்கு ஒரு வேடம் கொடுங்கள். பெரிதாக வேண்டாம். எந்த பாட்டு சீனிலாவது, விஜய், இலியானாவுக்கு பின்பக்கம் ஆட வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் தமிழ் சினிமாவை இரட்சிக்க வந்த இயக்குனசெம்மலாக மாறிவிடுவீர்கள்.///
உண்மை தான் நண்பரே.....இப்படி இன்னொரு குத்து டான்ஸ் வாய்ப்பு கொடுத்தால்,எழுத்துக்களை சாறு (!) போல பிழிந்து,புகழ்ந்து எழுதவார் அந்த (-) அறிவு ஜீவி..இதெல்லாம் ஒரு பிழைப்பு இவருக்கு..இதில் ரஜினி நடித்து இருந்தால் ,இந்த படமும் அவர் கண்களுக்கு மட்டும் ஆபாசமாக தெரியும்..!
உங்களின் இந்த பதிவின் ஒவ்வொரு வரிகளும்,ஒரு சராசரி ரஜினி ரசிகனின் ஆதங்கத்தின் வடிகாலாக இருந்தது..நெத்தியடி பதிவு...
ஒரு சராசரி ரஜினி ரசிகனின் வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்களுக்கு...

பாசகி said...

+1 :)

எப்பூடி.. said...

ரெண்டு அறிவு ஜீவிங்க மைனஸ் ஒட்டு குத்தீட்டாங்க போல ?

இளந்தென்றல் said...

super thalaiva

பனித்துளி சங்கர் said...

புதுமைதான்

Unknown said...

tooooooooooooooooooooooooooooooooo gud

Raji said...

super...... every point is right....

pichaikaaran said...

இரண்டும் வெவ்வேறு வகையை சார்ந்தவை..

அந்தந்த கேட்டகரியில் நல்ல படங்கள்

Senthil said...

A neat, decent, justifiable post!
Hats off!

Jayadev Das said...

ha... ha...ha...

K DhanaseKar said...

........ஒரு கமர்ஷியல் படத்தில் இவ்வளவு லாஜிக்கையும் தேடும் அ.ஜீ.க்கள், இந்த ’உலகத்தர’த்தில் ஒன்றையும் கண்டுக்கொள்ளாததே என்னை கேள்வி கேட்க தூண்டுகிறது........

சரியான குத்து...!

Anonymous said...

endhiran verum commercial endrum, nandalala arivu jeevigalukku endrum miga sariyaaga purindhu kondadharkku nandri. Endhiran theatre'il vaangiyaa claps'aai vida nandhalala pala kaathigalukku vaangiyulladhu...it is a solid proof that you dont need crores to make a good movie.

சரவணகுமரன் said...

நன்றி புதிய மனிதன்

நன்றி தூத்துக்குடி ராஜா

நன்றி கிச்சா

சரவணகுமரன் said...

சிவபார்க்கவி,

இது ஒரு படத்தைப் பற்றி குறை கூறும் பதிவல்ல. அதேப்போல், இது இரு படங்களை ஒப்பிடும் பதிவும் அல்ல.

இது படங்களை விமர்சிப்பவர்களைப் பற்றிய பதிவு. இரு படங்களின் மீதான விமர்சனங்களைப் பற்றிய பதிவு.

சரவணகுமரன் said...

நன்றி விக்கி உலகம்

நன்றி ரபீக்

நன்றி மருதமூரான்

நன்றி வினோ

நன்றி deen_uk

சரவணகுமரன் said...

வாங்க சர்வேசன்

நன்றி பாசகி

யார் அந்த அ.ஜீ.கள், எப்பூடி?

நன்றி sathaiyan

நன்றி சங்கர்

நன்றி ஸ்ரீவித்யா

சரவணகுமரன் said...

நன்றி ரஜி

ஆமாம் பார்வையாளன்

நன்றி செந்தில்

என்ன சிரிப்பு, ஜெயதேவ்?

நன்றி தனசேகர்

kamal fan said...

காப்பி அடிப்பதும் இன்சபிரேஷனும் வெவ்வேறு தான். ரஜினி ரசிகர்கள் கமலின் படங்களை ஆலிவுட் சுட்ட சீன்களுடன் இணைத்து திருப்பி திருப்பி சொல்வதால் கமல் படங்களெல்லாம் காப்பி ஆகி விடாது. கமல், மிஸ்கின் செய்வதெல்லாம் இன்ஸ்பிரேஷன். எந்திரனில் சங்கர் செய்திருப்பது ஜெராக்ஸ், காப்பி, சீன் திருட்டு, சுட்ட வடை, உருவல், நகல் எல்லாமே. சந்தேகமிருந்தால் எதாச்சும் வெள்ளைக்காரனை கூப்பிட்டு தசாவதாரம், நந்தலாலா, எந்திரன் போட்டு காட்டுங்கள். டாவின்சி கோட் மற்றும் இன்னொரு ஆங்கிலப்படமும் கொஞ்சம் காப்பி அடித்திருந்தாலும் தசாவதாரத்தில் நெறைய ஒரிஜினல் உள்ளது, நந்தலாலாவும் அப்படித்தான், ஆனா எந்திரனை பார்த்ததும், "பெருசு, நீ ஊதவே வேணாம்" ன்னு சொல்லிடுவான்.

பிரதி எடுப்பதன் அளவு, சுட்ட விஷயங்கள் போக எந்தளவு ஒரிஜினல், சுட்ட சீனை பயன்படுத்திய விதம், இதெல்லாம் பொறுத்து தான் ஒரு படம் காப்பியா இன்ஸ்பிரேஷனா என்று சொல்ல முடியும். என்னால் தசாவதாரம் நந்தலாலா சுட்ட சீன்கள் பட்டியலிட முடியும் ஆனால் அதே படங்களில் ஒரிஜினல் சரக்கும், அது ஏற்படுத்தின பாதிப்பும் மிக மிக அதிகம் என்றும் சீன் பை சீன் சொல்ல முடியும். ஆனால் எந்திரன் மூலக்கரு தொடங்கி, காட்சி அமைப்பு, உடை/உருவ அமைப்பு, சொல்லும் விஷயம் இப்படி காப்பி அடித்த சரக்கு டன் டனா டன் அளவுக்கு மலை போல் உள்ளது தான் பிரச்னை.

முழு ஒரிஜினல் என்று உலகத்தில் எதுவுமே இல்லை. உங்க அப்பா அம்மாவின் ரீமேக், நகல் தான் நீங்கள்.

kamal fan said...

//எந்த கிராமத்தில், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, டி-சர்ட் & ஹாஃப் ட்ரவுசருடன் கட்டிப்போட்டிருக்கிறார்கள்? ஜப்பான் படத்தில் அப்படி போட்டிருந்தார்களா, என்ன?//

ஒரிஜினல் படத்தை பார்த்துவிட்டு பேசவும். சும்மா நுனிப்புல் மேய்தல் கூடாது. சப்பான் படத்தில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் கிடையவே கிடையாது. ரெண்டு பெரும் அம்மாவை கடைசி வரை பார்க்கமாட்டார்கள். மீண்டும் தேடி பயணம் தொடங்குவார்கள் என்று முடியும்.

மேலும் - http://surveysan.blogspot.com/2010/12/blog-post.html
//ஸோ, கதைக் கரு, காட்சியமைப்பு மட்டுமே லவுட்டப் பட்டுள்ளது.

மற்றதெல்லாம் அக்மார்க் மிஸ்கின்/ராஜா/மகேஷ் இணைந்து செய்த மாஸ்ட்டர் பீஸ்!//

சரவணகுமரன் said...

kamalfan,

இது ஒரிஜினல், அது காப்பி என்று நான் இப்பதிவில் எதையும் கூறவில்லை.

விமர்சன பாகுபாட்டை பற்றி தான் சொல்லியிருக்கிறேன். அதுவும் இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும் போல! :-)