முதலில் இந்த வீடியோவை பார்க்க முடிந்தவர்கள், பார்த்துவிட்டு வரவும்.
சும்மா சொல்லக்கூடாது. கவுண்டமணி ஞானிதான்.
முன்பெல்லாம் எனக்கு காமெடி பதிவு எழுத வேண்டுமென்றால், ஈஸியாக இருந்தது - விஜய் பற்றி எழுதுவது தான். இவ்வருட ஆரம்பத்தில் சபதம் செய்துகூட, அதை நிறுத்தி வைத்தேன். இதோ, இவ்வருட இறுதியில், விஜய் ஆதரவு டோனுடன் இப்படியொரு பதிவு எழுதுவேன் என்று நினைத்தே பார்க்கவில்லை.
2010 - விஜய்யின் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம் தான். இந்த வருடம் வெளியான ஒரே விஜய் படம், சுறா. இன்னொன்று வெளியாகும், வெளியாகும் என்று சொல்கிறார்கள். வெளிவந்த பாடு இல்லை.
இதுவரை விஜய் படம் நன்றாக இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். படம் சரியாக போகவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த வருடம் தான், விஜய்யின் கடைசி அரை டஜன் படங்கள் ப்ளாப் என்று வெளிப்படையாக விஜய்க்கு எதிராக சினிமா துறையிலேயே குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.
ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்திருக்கிறது. இப்போது தான், ஒரே மாதிரி படங்களிலும் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அதெல்லாம் பரவாயில்லை. இனி சரி பண்ணிடலாம் என்று ஒரு நம்பிக்கை வரும் வண்ணம் காவலன், வேலாயுதம் மற்றும் 3 இடியட்ஸ் எனத்தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்தார். இப்ப, என்னவென்றால், ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இன்னொரு படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நல்லவேளை, வேலாயுதம் பற்றி எவ்வித நெகட்டிவ் செய்தியும் இதுவரை வரவில்லை. படம் முடியட்டும், பார்க்கலாம்.
தமிழ் திரையுலக விநியோக அதிகாரம் ’நிதி’களிடம் சிக்கியபோது, படங்களின் வெற்றியும், பெரும்பகுதி லாபமும் இவர்களையே சேரும் என்பது மட்டுமே முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால், விஜய் போன்ற ஒரு முன்னணி நடிகரே, இவர்களிடம் படும் பாட்டை பார்க்கும்போது தான், இவர்கள் திரையுலகம் மீது கொண்டுள்ள முழு கட்டுப்பாடும் தெரிகிறது. எனக்கு தெரிந்த ஒரு அஜித் ரசிகரே, ‘ஐயோ பாவம், விஜய்!’ என்று வருத்தப்படுகிறார்.
விஜய்க்கு மக்கள் ஆதரவை பெற நல்ல வாய்ப்பு. ஏற்கனவே, கலைஞர் பாராட்டுவிழாவில் அஜித்தின் பேச்சுக்கு கிடைத்த ஆதரவை நினைத்து பாருங்கள்.
விஜய்யின் அரசியல், இதுவரை எவ்வித காரணங்களும் இன்றி ஒரு காமெடி விஷயமாகத்தான் இருந்தது. அவர் அரசியலுக்கு வருவதற்கு எவ்வித நேர்மையான உந்துதலோ, உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமோ இருந்ததில்லை. ஏழைகளுக்கு தானம் செய்வதைக்கூட, தயாரிப்பாளர்களின் ஸ்பான்சருடன் செய்வதாகவே தெரிகிறது.
இவர்கள் இப்போது விஜய்க்கு கொடுக்கும் பிரஷரைப் பார்க்கும்போது, அவருடைய அரசியல் ஆசையை சீரியஸாக ஆக்கிவிடுவார்களோ என்று பயப்பட வேண்டி இருக்கிறது. இது அரசுக்கு எதிராக இருக்கும் உணர்வுகளை, தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் விஜய்யின் திட்டமாகக்கூட இருக்கலாம்.
ரஜினி, கமல், அஜித், சூர்யா என சினிமாவின் மேல் மட்டும் முழு கவனம் கொண்டவர்கள், இவர்களை அனுசரித்தே செல்கிறார்கள். தற்சமயம் ‘பாக்ஸ் ஆபிஸ் செல்லம்’ என்றழைக்கப்படும் சூர்யாவின் கடைசி ஐந்து படங்களும், இவர்கள் தயவில் வெளிவந்தவை. அதுபோல் ரஜினி, கமல் நடித்ததும், அஜித் நடித்துக் கொண்டிருப்பதும் ‘நிதி’களின் படங்களே. விஜய்யும் அப்படி சென்றவர்தான். எந்த தைரியத்திலோ அல்லது வேறு வழியில்லாமலோ, இப்போது எதிர் வழியில் செல்கிறார்.
ஒருவகையில் வீரன் போல் தெரிந்தாலும், முடிவில், அட்லீஸ்ட் அடுத்த வருட இறுதியில் என்னவாகிறார் என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.
.
8 comments:
விஜயைப்பற்றி நல்ல ரு விரிவான பார்வையுடன் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை...
//ஒருவகையில் வீரன் போல் தெரிந்தாலும், முடிவில், அட்லீஸ்ட் அடுத்த வருட இறுதியில் என்னவாகிறார் என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.//
எதிர்ப்பார்ப்புடன்...
பகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
amaa. paavam vijay
தமிழ் சினிமா இனி நிதிக்களின் கைகளில் தான் என்றால் அது வருந்ததக்க விஷயமாகும். ஜாம்பவானான ஏவிஎம்மால கூட முடியவில்லையே!! :((((
விஜய் பத்திலாம் எழுதி ஒரு பதிவு வேஸ்ட் பண்றீங்க...... வேற லீட் எதுவும் கிடைக்கலியா தல...:))
ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்திருக்கிறது. இப்போது தான், ஒரே மாதிரி படங்களிலும் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
- என்னமா உள்குத்து குத்துராங்கய்யா
ரெம்ப நல்லா சொல்லியிருக்கிங்க...
அப்படியே விஜய் பற்றிய என் பதிவையும் பாருங்க, http://tamilvaasi.blogspot.com/2010/12/vijay-politics.html
பகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
கொத்து கொத்தா செத்தப்போ ஏன் இவன் போயி அந்த உளறுவாயன பார்த்தான்?
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - டிச '2010)
Post a Comment