எங்கள் அணி வேலைப் பார்த்துக் கொண்டிருந்த மென்பொருளில், வேலை செய்து தொழில் கற்றுக்கொள்வதற்கு புதியதாக ஒரு பெண்ணை சேர்த்திருந்தார்கள். பெண் என்று சொல்லக்கூடாது. பிள்ளை என்றே சொல்லலாம். இப்பத்தான் கல்லூரி முடித்து வந்திருக்கிறாள். மேனேஜர் அவளிடம் ”எந்த வித டெக்னிக்கல் டவுட் என்றாலும், எங்கிட்ட கேட்டுடாத. அவன்கிட்ட கேளு.” என்று என்னை நோக்கி கைக்காட்டிவிட்டதால், என்னிடம் பேசும் பெரும் வாய்ப்பு அவளுக்கு வாய்த்தது!
அவ்வப்போது ஏதாவது வந்து கேட்பாள். தெரிஞ்சா சொல்லுவேன். தெரியாட்டினாலும் ஏதாவது சொல்லுவேன். அவள் ஒரு கன்னட-தமிழ் கலவை என்பதால், கிட்டத்தட்ட பழைய சரோஜா தேவி மாதிரி தான் பேசுவாள். லட்சணமான பெண். தமிழ் படங்களில் வரும் அழகான நாயகிகளைப்போலவே, அவளும் கொஞ்சம் மக்குதான்.
பொண்ணோட பெயரை இன்னும் சொல்லலீயா? ம்ம்ம்... ஒரு கற்பனை பேரு யோசிச்சு சொல்றேன். சஞ்சனா.
எங்க அணியை பத்தியும் சொல்லிடுறேன். பெரும்பாலும், தமிழரல்லாதவர்கள். என்னைத்தவிர தமிழ் தெரிந்த பையன், சுபாஷ். சுஜா என்றொரு தமிழ் பெண்ணும் இருக்கிறாள். நல்ல பொண்ணு. நம்ம ஆளு. அப்படி நான் மட்டும் எனக்குள்ளே நெனைச்சிக்கிட்டு இருந்தேன். சரி, கதை என்னை பத்தி கிடையாது என்பதால், அது வேண்டாம்.
வேலைப்பார்க்கும் சமயம், சஞ்சனாவும் சுபாஷும் பேசியதே கிடையாது. அல்லது, நான் பார்த்ததே கிடையாது. ஒருவேளை, நான் வேலையில் பிஸியாக இருந்திருப்பேன். இருங்க, ட்வீட்டரை க்ளோஸ் பண்ணிக்கிறேன்.
ஒருநாள் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தபோது, சஞ்சனாவும் சுபாஷும் சாலை ஓரத்தில் பேசிக்கொண்டு சென்றதை பார்த்தேன். சரி, நல்லா இருக்கட்டும் என்று சென்று விட்டேன். பிறகு, அவ்வப்போது அலுவலக படிக்கட்டில் பார்த்திருக்கிறேன். சில நாட்களில், சுபாஷ் எங்கள் அணியை விட்டு சென்றுவிட்டான். ஆனாலும், அவ்வப்போது நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து செல்வான். சரி, இன்னும் கதை ஓடுகிறது என்று நினைத்துக்கொண்டேன். சஞ்சனா சின்னப்பெண் என்பதால் கொஞ்சம் கலக்கமும் எனக்கு இருந்தது. சரி, நமக்கென்ன என்று இருந்துவிட்டேன். தவிர, வருத்தப்படும் அளவுக்கு சுபாஷிடமும் எந்த கெட்ட பழக்கம் இருந்ததாக தெரியவில்லை.
இப்ப, கதையில இன்னொரு கதாபாத்திரம் அறிமுகம் ஆகிறது. கதிர். மதுரைக்காரன். என்னிடம் நன்றாக பேசி பழகினான். என்கிட்ட மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லைன்னு, பின்னாடி தெரிஞ்சது. பெரும்பாலும், பெண்களை பற்றிதான் பேசுவான். யாரையாவது பிக்கப் செய்து கல்யாணம் செய்வதே அவனுடைய உயர் லட்சியமாக இருந்தது. ஆனால், ஒருநாள் கூட சஞ்சனா பற்றி பேசியது கிடையாது. அவன் சஞ்சனாவிடம் பேசியும் நான் பார்த்ததில்லை. ஒருவேளை நம்மக்கிட்ட தான் ஓவரா பேசுறான். இவன் செயல்ல ஒண்ணும் கிடையாது போல என்று நினைத்துக்கொண்டேன்.
வேலை பிஸியாக ஓடிக்கொண்டிருந்தது. கதிரும் இரவுவரை உட்கார்ந்து வேலைப் பார்ப்பான். நாங்கள் இருவரும் பேசும் சமயமெல்லாம், தூக்கம் வருவதில்லை என்று புலம்பினான். ரெஸ்ட்லெஸ்சாகவே இருந்தான். இதற்காக டாக்டரைப் பார்த்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கேட்டதற்கு, வேலைப்பளு என்றான். அதற்குக்கேற்ப நானும் கொஞ்சம் அட்வைஸ் செய்தேன். ஒரளவுக்கு சரியானான்.
பிறகு, சிறிது நாட்கள் கழித்து, என்னை தனியே அழைத்து சென்று சஞ்சனா பற்றி கேட்டான். எந்தளவுக்கு பழக்கம் என்று விசாரித்தான். சாதாரண அலுவலக ரீதியான பழக்கம் தான் என்று தெரிந்துக்கொண்டதும், ஒரு விஷயம் சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.
டீமில் சேர்ந்த சில நாட்களிலேயே, சஞ்சனாவுடன் பேச ஆரம்பித்து விட்டானாம். ஆனால், யாருக்கும் தெரியாமல் தான் பேசுவார்களாம். அது அவளுடைய கண்டிஷனாம். அடியே, கல்லுளிமங்கி!
ஒரிரு மாதங்கள் பேசி பழகியதில், கதிருக்கு காதல் மட்டுமல்ல, அதை சொல்லும் தைரியமும் வந்துவிட்டது. ஏற்கனவே ஒருமுறை காதலை சரியான சமயத்தில் சொல்லாததால், ஒரு திருமணமான காதலிக்கு இன்னமும் தோழனாக இருக்கும் அவலத்தை சந்தித்து இருப்பதால், இம்முறை உடனே சொல்லிவிட்டான். சஞ்சனா ஒத்துக்கொள்ளவில்லை. இது சரி வராது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். கதிர், இதனால்தான் அந்த சமயம் பேயடித்தது போல் இருந்திருக்கிறான். அப்ப தெரியவில்லை. இப்ப புரிகிறது. அப்பாடா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
அதற்குப்பிறகும், கதிரிடம் நட்பாக நன்றாகத்தான் பேசியிருக்கிறாள். ஆனால், கதிர் விடவில்லை. இதையே திருப்பி திருப்பி சொல்லி, அவள் சம்மதத்தைக் கேட்டிருக்கிறான். அவள் வெறுத்துப் போய், இவனை விட்டு விலகி சென்றுவிட்டாள். இவனிடம் பேசுவதே கிடையாது. எனக்கு சஞ்சனாவின் நிலையை நினைக்க, பரிதாபமாக இருந்தது. அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும், பழைய ஜோரு அவளிடம் இல்லை. ஒரு பொண்ணு லட்சணமா இருந்தா, எவ்ளோ கஷ்டம் என்று நினைத்துக்கொண்டேன்.
சிறிது நாட்களில் நான் வேறொரு அணிக்கு சென்று விட்டேன். அங்கே அடிக்கடி சுபாஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுபாஷ், பெரும்பாலும் வேலை பற்றியும், வருங்கால பணி உயர்வைப் பற்றியுமே பேசுவான். அவனுக்கேற்ற சரியான வாய்ப்பு எங்கள் நிறுவனத்தில் இல்லாததால், வெளியே வேலை தேடுவது என்று ஒருக்கட்டத்தில் முடிவு செய்தான். என்னன்ன படிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். பிறகு, அதை படித்தியா, இதை படித்தியா என்று நான் கேட்கும்போது, எதையும் என்னால் படிக்க முடியவில்லை என்றான். மனம், புத்தகத்தில் நிலைக் கொள்ள மாட்டேங்கிறது என்று புலம்பினான்.
என்னவென்று அழுத்தி கேட்டப்பொழுது, அங்கிருந்து ஒரு பூதம் வெளிவந்தது. ஒரு பெண்ணிடம் காதலை சொன்னானாம். அவள் முடியாது என்று சொல்லிவிட்டாளாம். யாரந்த பெண் என்று சொல்லவில்லை. ஆனால், எனக்கு தெரிந்தது. சஞ்சனாவாகத்தான் இருக்கும். அடப்பாவமே, ஒரு பிள்ளையை வேலை பாக்க விடுறாய்ங்களா? இப்படி வரிசையா வந்து ப்ரபோஸ் பண்ணா, அவா என்னத்தான் செய்வா? என்று அவள் சார்பில் கவலைப்பட்டேன்.
இருவருமே என்னை சந்தித்து புலம்புவார்கள். ஆனால், ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு தெரியாது. இருவரிடமும் நான், இதை விட்டுவிட்டு, வேலையைப் பாருங்க என்பேன். சுபாஷ், கவனத்தை வேலையில் செலுத்த ஆரம்பித்து விட்டான். கதிர் விடவில்லை. விரட்டிக்கொண்டே இருந்தான். வீட்டில் அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்திருந்தால், விட்டு இருப்பான். அதுவரை, சஞ்சனா பாவம் தான் என்று நினைத்துக்கொண்டேன். நானும் எவ்வளவுதான் கதிரிடம் பக்குவமாக சொல்லிப்பார்ப்பது?
அன்று அலுவலகத்திற்கு சென்றவுடனே, கதிர் அவசரமாக போனில் அழைத்தான். சஞ்சனா, இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டிருப்பதாக சொன்னான். இன்றுதான் அவனுக்கே தெரியுமாம். ஆனால், அவர்கள் பேசும் தொனியை பார்க்கும்போது, ரொம்ப நாட்களாக பேசிக்கொண்டிருப்பது போல் தெரிகிறதாம். சுபாஷ், கதிர் தவிர்த்து, சஞ்சனா இன்னொரு பையனிடம் பேசுவதை ஆரம்ப நாட்களில் நானும் பார்த்திருக்கிறேன். ஆனால், கதிர் சொல்லும் அடையாளத்தை பார்க்கும்போது, இவன் வேறு ஒருவனாக தெரிகிறது.
ஒருமுறை சுபாஷிடம், ”எந்த தைரியத்தில் நீ காதலை சொன்ன?” என்று கேட்டதற்கு, ”அவள் தன்னிடம் காதலுடன் பழகுவதாக தெரிந்தது” என்றான். எப்படி என்று கேட்டதற்கு, தனக்கு உடம்பு சரியில்லாத சமயத்தில் கோவிலுக்கு சென்று வந்தாள், அவளுக்கு எதுவென்றாலும் தன்னிடம் சொல்லுவாள், வீட்டு கஷ்டத்தை தன்னிடம் பகிர்ந்திருக்கிறாள் என்றெல்லாம் சொன்னான். இது எனக்கு நினைவுக்கு வரவே, கதிரிடமும் இதுபோல் கேட்டேன். அவனும் கிட்டத்தட்ட இதைப்போல் சொன்னான். எனக்கென்னவோ, தவறு இவர்கள் மேல் இருப்பதாக இப்போது தெரியவில்லை.
தொடர்ந்து இது சம்பந்தமாக பேசியதில், யோசித்து பார்த்ததில், சஞ்சனா மேல் பரிதாபம் போய், பயமே வந்துவிட்டது. சுபாஷையும், கதிரையும் பார்க்கத்தான் பரிதாபமாக இருந்தது. அந்த பெயர் தெரியாத புது லவ்வர் பாயும், கூடிய சீக்கிரத்தில் அவளிடம் ஆப்பு வாங்கிக்கொண்டு, என்னைப்போல் எவனிடமாவது போய் புலம்ப போகிறான்.
அடியே, கிராதகி! உன்னையை ஒண்ணும் தெரியாத பாப்பா’ன்னு நினைச்சேன். நீ என்னடானா, இப்படி டெரர் காட்டுறீயே?
அது சரி, நீ என்ன ப்ளாஷ்பேக் வச்சிருக்கியோ?
.
23 comments:
நான் வேலையில் பிஸியாக இருந்திருப்பேன். இருங்க, ட்வீட்டரை க்ளோஸ் பண்ணிக்கிறேன்.//
sema kusumpu. enakkennavo kathi character neengkathannu thonuthu...
பாஸு, ஆனாலும் நீங்க பாஸ்ட்டு. நான் பதிவ போட்டு, இண்ட்லியில் இணைப்பதற்குள், நீங்க வேலையை முடிச்சிட்டீங்க... உங்க சேவை மெய்சிலிர்க்க வைத்தது :-)
கத்தி கேரக்டரா? உங்களையும் எங்க டீம்ல கோர்த்துவிட்டா சரியாப்போயிடும்’ன்னு நினைக்கிறேன்.
இப்படி நம்ம ஊர்ல நிறைய இருக்குதுங்க சரவணன்...
கேட்டா டைம்பாஸ் அப்படிம்பாங்க...
//அடியே, கிராதகி! உன்னையை ஒண்ணும் தெரியாத பாப்பா’ன்னு நினைச்சேன். நீ என்னடானா, இப்படி டெரர் காட்டுறீயே?//
இப்படி நிறையபேரு ஒன்னும் தெரியாதுன்ன்னு ஏமாந்து போறோம் அதில் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் சிரிப்புபோலீஸ் (ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவரும் ஒரு ஆள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறொம்!
சரவணன் சார் கலக்கல்...
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்க வளமுடன்
சஞ்சனா உங்கள லவ் பண்றாங்களோ?:-)
- Veera
இதே மாதிரி கேடிங்கள நானும் பாத்திருக்கேன் பிரதர். சென்னை பெங்களூர் மாதிரி சிட்டில பிறந்து வளந்த பொண்ணுங்கள நம்பவே கூடாது பா.
தமிழ் வலைப்பதிவர்களே!
புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
தமிழ்புக்மார்க்
http://tamilbookmark.co.cc
ஆஹா! நல்ல அனுபவம்! எந்த புற்றுக்குள்ளே எந்த பாம்பு இருக்குமோ!
குத்துங்க பாஸ் குத்துங்க... இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாஸ்...
வணக்கம் சரவணன்,
கிட்டத்தட்ட இதே தொனியில் ஒரு பெண் என்னுடன் கல்லூரியில் படித்தாள்....
இப்படி யாராவது ஒருத்தர் போய் நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னங்கன்னு
வச்சுக்கங்க.. அப்போ அந்த பொண்ணு .. எனக்கு மூளையில கட்டி இருக்கு... என்னால கல்யாண வாழ்கையில
ஈடுபட முடியாதுன்னு சொல்லும்... இப்படி நம்மாளுங்களும் ஒரு ரெண்டு மூணு பேர் ட்ரை பண்ணிட்டு
கடைசி வருஷம் தான் இந்த பொண்ணு எல்லாரையும் இப்படி ஏமாத்தி இருக்குனு தெரிஞ்சுது...
ஆனா இப்போ அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்கு.....
இது ஒரு மாதிரி கவன ஈர்ப்பு எப்பவும் பசங்க எப்படி என்னை சுத்தி சுத்தி வர்றாங்க பாருங்கன்னு
ஒரு பெருமை...
enna koduma sir ithu????
ஒரு வேளை அந்த பொண்ணு உங்களை லவ்வுதோ...
Sampathkumar
ஆமாம் சங்கவி
வாங்க மாணவன்
வீரா, என்னையும் லைன்’ல நிக்க சொல்றீங்களா?
MSK,
அப்படியும் பொதுவாகவும் சொல்ல முடியாது, பாஸ்...
ஆமாங்க எஸ்.கே. பார்த்துக்கோங்க...
கிறுக்கன்,
சிகப்பு ரோஜாக்களில் இருந்தே இப்படிதானா?
நவீன்,
ஸோ, நிறைய பேரு இருக்காங்க!!!
DHANS,
கொடுமைதான்...
சம்பத்குமார்,
ஆஹ்ஹா... ஏற்கனவே அங்க லைன்கட்டி நிக்குறாங்க. இதுல, நாமளுமா?
//அது சரி, நீ என்ன ப்ளாஷ்பேக் வச்சிருக்கியோ?//
அந்த ப்ளாஷ்பேக்கும் ஜமுக்காளத்துல வடிகட்டுன பொய்யா இருக்க்கும்
comeon........u will not share all these things to friends?andha guys kitadhan problem..care is different from love.....silly guys
Post a Comment