Wednesday, December 1, 2010
மாண்புமிகு வேலைக்காரர்
முன்பெல்லாம் நடுத்தரவர்க்கத்தை தாண்டிய வசதி படைத்தவர்களின் இல்லங்களிலேயே, வீட்டு வேலை செய்பவர்களை காணலாம். கூட்டு குடும்பமாக, பெரும் குடும்பமாக இருப்பவர்கள், வீட்டு வேலையை செய்து முடித்துவிட்டு, நேரம் போகாமல் உட்கார்ந்து கதை பேசுவார்கள். தற்சமயம் நகரங்களில் தனியாக வாழும் பேச்சிலர்களும், வேலைக்கு செல்லும் கணவன் - மனைவிகளும், உதவிக்கு வேலை செய்ய ஆள் வைப்பதை தவிர்க்க முடியாமல் போய் நெடுநாளாகிறது.
---
பெங்களூரில் எனக்கு தெரிந்த பேச்சிலர் நண்பர்கள் பெரும்பாலோனர், வெளியே சாப்பிட்டு விட்டு, வீட்டை துடைப்பது, கழுவுவது, துணி துவைப்பது போன்ற வேலைகளை அவர்களே செய்துவிடுவார்கள். சிலர் வெளியே சாப்பிட்டு விட்டு, வீட்டில் எப்படி குடிவந்தார்களோ அப்படியே வைத்துவிடுவார்கள். ஓனர் வீட்டை பார்த்துவிட்டு கண் கலங்குவதும், பிறகு வாடகை வாங்கிவிட்டு சமாதானம் ஆவதும் வழக்கம். சில ஓனர்கள் வாடகை வாங்க வருவதில்லை. ஆன்லைனிலேயே ட்ரான்ஸ்பர் செய்ய சொல்லிவிடுவார்கள். சேலம், ஈரோடு, வேலூர் என பெங்களூருக்கு சில மணி நேரத்தில் பயணம் செய்யும் கொடுப்பினை பெற்றவர்கள், வாரயிறுதியில் ஒரு பெரும் மூட்டையுடன் ஊருக்கு செல்லுவார்கள். மறந்தும், அவர்களது பையை திறந்து பார்த்துவிடாதீர்கள். லேப்டாப் பேக், அழுக்கு மூட்டையாகி இருக்கும்.
---
சில பேச்சிலர்கள், சுகவாசிகளாக இருப்பார்கள். வீட்டில் ஒன்றாக தங்கியிருப்பவர்கள் சேர்ந்து வாஷிங்மிஷின் வாங்கி இருப்பார்கள். அதில் துணியைப் போட வேலைக்கு ஆள் வைக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு சோம்பல் குணம் கொண்டவர்கள். இவர்கள் நன்றாக சாப்பிட நினைத்து, நண்பர்கள் எவருக்கும் சமையல் கலை கைக்கூடாமல் இருந்தால், சமைக்க ஆள் வைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல்,காலையிலையோ, மாலையிலையோ சமைக்க வர சொல்லியிருப்பார்கள். பெரும்பாலும் இரவிலாக இருக்கும். வாரயிறுதியில் மதியமும், இரவுமாக இருக்கும்.
---
இப்படி தான் என்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டுக்கும், சமையலுக்கு ஒரு பெண்மணி வருகிறார். சம்பளம் ரெண்டாயிரத்து சொச்சம். ஆங்காங்கே வேலைக்கேற்ப, ஏரியாவில் வேலையாள் டிமாண்டிற்கு ஏற்ப, சம்பளம் வேறுபடும். எனக்கு தெரிந்து 600 ரூபாயில் இருந்து 3500 வரை மாத சம்பளமாகக் கொடுக்கிறார்கள்.
ஒரு வேளைக்கு சமைக்க, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஆகும். இதனால் நாலைந்து வீடுகளில் வேலை செய்வார்கள். என் நண்பன் வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்மணியும் இப்படி ஒரு பிஸி பெண்மணி. டைம் ஸ்லாட் அமைத்து, பல வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர். ‘கிட்டத்தட்ட என்னுடைய டேக் ஹோம் சம்பளம் அளவுக்கு, அந்தம்மா சம்பாதிப்பதாலோ என்னவோ, எங்களை மதிப்பதே இல்லை’ என்பான்.
இவர்களுடைய விருப்பத்திற்கேற்ப, சமையல் இருக்காதாம். அந்தம்மாவுக்கு என்ன இஷ்டமோ, அது தான் சமையல். ’சப்பாத்தி செய்யுங்களேன்’ என்றால், ‘இல்லை, இன்னைக்கு உப்புமா சாப்பிடுங்க’ என்று பதில் வருமாம்.
அதே பெண்மணி வாரமொருமுறை வந்து வீடு துடைத்து, கழுவி செல்லுவாராம். அந்த பெண்மணி வரும் நேரம், இவர்கள் கழுவ தேவையான சமாச்சாரங்களை எடுத்து ரெடியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தண்ணீரை அப்படியே ஊற்றிவிட்டு, ஒரு தள்ளு தள்ளிவிட்டு சென்றுவிடுவாராம்.
இவர்கள் ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்து, அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்ல, அம்மணி ஏனென்று கேட்டிருக்கிறார். இவர்களும் வீடு மாறப்போவதாக பொய் சொல்லி சமாளித்திருக்கிறார்கள்.
இவர்கள் இருப்பதோ, ஒரு வீட்டின் முதல் மாடியில். ஓனர் இருப்பதோ, தரைத்தளம். ஒரு மாதம் கழித்து, கீழேயிருந்து சத்தம் வந்திருக்கிறது. என்னவென்று எட்டிப்பார்த்தால், அந்தம்மா நின்றிருக்கிறார்.
”என்ன?”
“வீடு காலி பண்ணப் போறதா சொன்னீங்களே? இன்னும் போகலையா?” என்று சத்தமாக கேட்டிருக்கிறார்.
வீட்டு ஓனருக்கு கேட்டுவிடக்கூடாதே என்று பதறியடித்துக்கொண்டு கீழே ஓடி சென்று சமாளித்திருக்கிறான்.
நான் கேட்டேன்.
"இப்ப சமையலுக்கு என்ன செய்யுறீங்க?”
“தெரிஞ்சத வைச்சு, நாங்களே செய்யுறோம். நல்லாத்தான் இருக்கு.”
.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
என்னதான் இருந்தாலும் பேச்சுலர்ஸ் லைஃப்லையும் சில சுகங்கள் இருக்கு நண்பரே
நல்ல பகிர்வு சரவணன். இதுபோன்ற பேச்சிலர் அனுபவம் எனக்கும் உள்ளது. சென்னையில் இருந்தபோது சமையலுக்கு இருந்த ஒரு அம்மாவின் நினைவு வந்தது. நல்ல பாசக்கார அம்மா. சில சமயம் வெறும் சாதம் மட்டும் வடித்துவிட்டு, தயிர் வாங்கிவைத்துவிட்டுப் போய்விடுவார். நல்ல பசியில் சாப்பிட அமரும்போது சுடச்சுட உப்புமாவைப் பரிமாறுவார்.
நனும் அனுபவித்திருக்கேன் இவ்வாழ்க்கையை...
avvvvvv ..... same experience ... hired maid n cooking ourself now
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
தங்கள் பதிவு ரசிக்க வைக்கிறது
வாழ்த்துக்கள்...
சமூகத்திற்கு தேவையான ஒன்று தான்...
அனுபவங்களை யாதார்த்தங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி,
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
ஆமாங்க கவிதை காதலரே
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி, சரவணக்குமார்
வாங்க சங்கவி
நீங்களுமா தினேஷ்?
நன்றி அனு
நன்றி சுதா... காமெடி கீமெடி பண்ணலீயே?
so, இந்த உப்புமா யாருக்கும் பிடிக்காது.
enga veetla nadakkaratha appadiye eluthirukeenga, nan case podapporen ithu enga kathainu he he he
tried with 5 maids , finally decided to cook ourselves..
from bangalore
Dhinesh
கரெக்ட் அமுதா கிருஷ்ணன்
DHANS, ஹி ஹி...
வீட்டுக்கு வீடு வாசல் படி... :-)
தினேஷ், எல்லாருடைய கதையும் இப்படித்தான் போலும்...
Post a Comment