அயோத்தி இந்தியாவின் இதயப்பகுதியில் இருப்பதாலோ என்னவோ, அங்கு விழுந்த அடி காலத்திற்கும் இந்தியாவின் தேகமெங்கும் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேண்டுமானால் 1992 நிகழ்வு, பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கலாம். ஆனால், அடிப்படை பிரச்சினை 1885 யிலேயே வேர் விட தொடங்கிவிட்டது.
இந்து மத நம்பிக்கைபடி அயோத்தி, தசரதன் ஆண்ட நகரம். ராமர் பிறந்த மண். தற்போது இங்கு இருக்கும் பாபர் மசூதி, முகாலய அரசர் பாபரின் தளபதி மிர் பஹியால் கட்டப்பட்டது. அவரை இங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டினாரா என்பது இந்தியாவிற்கு தலைவலியை கொடுக்கும் சர்ச்சைக்குரிய கேள்வி. பதிலுக்கு மொத்த நாடும் காத்திருக்கிறது.
1885 இல் ரகுபர் தாஸ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அயோத்தியில் பாபர் மசூதிக்கு பக்கமிருக்கும் அவருடைய நிலத்தில் ஒரு திண்டு (திண்ணை போன்ற மேடை) இருந்தது. அது தான் ராமர் பிறந்ததாக நம்பப்பட்டு வந்த இடம். அதில் கோவில் கட்ட அனுமதியளிக்கும் படி ஒரு வழக்கு தொடர்ந்தார். இடம் அவருடையதாக இருந்தாலும், பக்கத்திலேயே மசூதி இருப்பதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது என்று ஃபைசாபாத் துணை நீதிபதி தீர்ப்பளித்தார். இதே வழக்கு ஃபைசாபாத் மாவட்ட நீதிபதியிடம் செல்ல, அவரும் அனுமதி மறுத்தார். “என்னத்தான் இந்துக்களின் புனிதத்தலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டு இருந்தாலும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும்” என்றார் அந்த ஆங்கிலேயே நீதிபதி சம்பியர்.
பிறகு இரு மதத்தினரும் இந்த இடத்தில் வழிபாடு நடத்தி வந்தனர்.
1934இல் ஒரு பசு கொல்லப்பட்டதால் உருவான கலவரத்தில் மசூதி தாக்கப்பட்டது. அரசே அதை சரி செய்தும் கொடுத்தது.
எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது. 1949 இல் மசூதிக்குள் ஒரு ராமர் சிலை வைக்கப்பட்டது. யார் வைத்தது? எப்படி வைக்கப்பட்டது? தெரியாது. ஆனால், அதற்கு இந்துக்கள் கூட்டம் கூடியது. பூஜைகளும் நடத்தப்பட்டது. பிறகு கூட்டம் தடுக்கப்பட்டு, மசூதி பூட்டப்பட்டாலும், அந்த சிலை வெளியே எடுக்கப்படவில்லை. அந்த சிலையை வெளியே எடுக்க, யாருக்கும் தைரியம் வரவில்லை. அப்போதைய பிரதமர் நேரு ஆணையிட்டும், யாரும் எடுக்க தயாராக இல்லை. அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட், “என்னை வேலைவிட்டு போக சொன்னாலும் சொல்லுங்க, அந்த சிலை எடுக்க சொல்லாதீங்க” என்றார்.
ஃபைசாபாத் கமிஷனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த சிலையை தற்சமயம் எடுப்பது சரிப்பட்டு வராது. கொஞ்ச நாள் பொறுப்போம். எல்லாம் அடங்கிய பிறகு முடிவெடுப்போம்.
அவர் சொன்னது போலவே சில காலம் ஏதும் பிரச்சினை இல்லாமல் சென்றது. 1949 இல் நகர மாஜிஸ்ட்ரேட் ஆணையின்படி, அந்த இடம் நகராட்சி சேர்மனால் கையகப்படுத்தப்பட்டது.
திரும்ப 1950 இல் கோபால் சிங் என்பவர் மசூதிக்குள் ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும், உள்ளூர் பூசாரி ஒருவர் மட்டும் உள்ளே தினமும் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் வழங்கப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பில், “இந்த மசூதி முஸ்லீம்களால் பல ஆண்டு காலம், வழிப்பாட்டுக்காக பயன்பட்டு வந்ததாகவும், அது ராமரின் வழிப்பாட்டு தலமாக இருந்ததில்லை எனவும்” கூறப்பட்டது. ராமர் சிலை ரகசியமாக, தவறாக உள்ளே வைக்கப்பட்டதாக அந்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது.
1955 இல் அந்த இடத்திற்கு உரிமை கோரி நின்மோஹி அஹாரா என்பவரும், மொகமது ஹசிம் என்பவர் தலைமையில் ஐந்து முஸ்லிம்கள் அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தீர்ப்பளித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், தற்போது நிலவும் நிலையிலேயே நீடிக்குமாறு தீர்ப்பளித்தனர். பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்தில் ஒரு முடிவு கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறினாலும், ஒன்றும் நடக்கவில்லை.
1961 இல் ஹசிம் இடத்தை முஸ்லீம்களிடம் திரும்ப வழங்க கோரி இன்னொரு வழக்கு தொடர்ந்தார். 1964 இல் இதை பற்றிய அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கிற்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. 1968 இல் அந்த இடத்திற்கு ஒரு பொறுப்பாளரை நீதிமன்றம் நியமித்தது. ஆனால், 1971 இல் இன்னொரு வழக்கு தொடரப்பட்டதால் அவருக்கு வேலை இல்லாமல் போனது.
1983 இல் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த பிரச்சினையை பெரியளவில் எடுத்த செல்லும் வரை, அந்த வழக்கு கண்டுக்கொள்ளப்படவில்லை. பிரச்சினையின் தீவிரம் கூட கூட, ஃபைசாபாத் நீதிமன்றம் 1886இல் அந்த இடத்தை இழுத்து மூடியது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டை சந்தித்து ராம தரிசனத்திற்கு அனுமதி கோர, அதற்கு அவர் வழங்கிய ஆணை, கடும் சூட்டை கிளப்பியது. கலவரம் ஆரம்பித்தது.
நீதிபதி பாண்டே கூறியது என்னவென்றால், “இருதரப்பையும் விசாரித்ததில், அந்த இடத்தை திறந்து விடுவதாலும், சிலைகளுக்கு பூஜை செய்வதாலும் முஸ்லீம் மக்களுக்கு எந்த பிரச்சினை இல்லையென்று தெரிகிறது. திறந்துவிடுவதால் ஒன்றும் வானம் இடிந்து விழ போவதில்லை”.
இதை தொடர்ந்து வக்பூ வாரியமும், பாப்ரி மஸ்ஜித் செயல் குழுவும் அலாகாபாத் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மதவாதிகளுக்கு இது முழு நேர தொழிலானது. கரசேவகர்கள் பிஸியானார்கள். 1990 இல் முலாயம் சிங் ஆட்சியில், கரசேவகர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தப்பட, இதை பிரச்சினையாக்கி பாரதீய ஜனதா உத்திரப்பிரதேசத்தில் 1991 ஆட்சியை பிடித்தது. பாஜக முதல்வர், மசூதியை சுற்றி அமைந்துள்ள இரண்டே முக்கால் ஏக்கரை, கோவில் கட்டுவதற்காக கையகப்படுத்தினார். பாப்ரி மஸ்ஜித் செயல் குழு அப்படியேதும் கட்டப்படாமல் இருக்க தடைக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.
1992இல் பாஜக தலைமையின் முன்னிலையில் மசூதி தகர்க்கப்பட்டது. இந்தியாவே ஆட்டம் கண்டது. கல்யாண் சிங் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றி 67 ஏக்கர், மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு, இந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு முன்பு, ராமர் கோவில் இருந்ததா? என்று கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, அதன் மேல் முடிவெடுக்க இம்மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் கூடுகிறது.
---
வழக்கின் தீர்ப்பு, அங்கு ராமர் கோவில் இருந்ததா இல்லையா என்பதை குறித்தே அமையும். தீர்ப்பையொட்டி கலவரம் ஏற்படலாம் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட அணி மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்லும். முடிவில், அதுவும் இழுக்கப்பட்டு இழுக்கப்பட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை அறிய, நாமெல்லாம் இருப்போமா என்பதே சந்தேகம் தான்.
ஒரு சாதாரண இடப்பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டால், என்னத்தான் முன்பு ராமர் கோவில் இருந்தாலும், 400 ஆண்டுகளுக்கு மேலாக மசூதி இருப்பதால், அதில் கோவில் கட்ட சட்டரீதியாக இடமில்லை. இல்லாவிட்டால், இப்போது நாம் இருக்கும் இடமெல்லாம் நமக்கில்லாமல் போகலாம். இது என் மூதாதையர் இடம், அது என் மூதாதையர் இடம் என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்.
இப்பிரச்சினை பெரிதாக காரணம், அரசியல்வாதிகளே. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, இது ஒரு முக்கிய காரணம். ஆனால், முன்பு இருந்தது போல தற்போது மக்களிடம் இதற்கு ஈடுபாடு அதிகமில்லை. அதே சமயம், பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, அப்போதைய தொழிலதிபர்களும் காரணமாக இருந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், தொழில் சூழல் நன்றாக அமையும் என்று ஒரு நம்பிக்கையிருந்ததால், அவர்களது ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது தொழிலதிபர்களின் பிரதிநிதியாக பிரதமராக செயல்படுவதால், காங்கிரஸிற்கு அவர்களது முழு ஆதரவும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மதரீதியாக பிரச்சினை ஏற்பட்டு, சுமூகமான தொழிற்சூழல் கெட தொழிற்துறை விரும்பாததால், அவர்களை காப்பதற்காக, காங்கிரஸ் இப்பிரச்சினையை தள்ளிப்போடவும், முக்கியத்துவம் கொடுக்காமல் கண்டுக்கொள்ளாமலும் இருக்கவே முயலும். ஏன், பாஜகவும் இதை பெரிதாக பிரச்சினையாக்காது என்றே கருதப்படுகிறது.
எப்படியோ, இவ்வழக்கின் தீர்ப்பில் நடுநிலைமை சாத்தியம் இல்லை. தலைவலியாகத்தான் இருக்கப்போகிறது. இந்திய நீதித்துறையின் பெரும் பிரச்சினையான கால விரயமே, இப்பிரச்சினையை காக்கக்கூடும். தீர்ப்பு வழங்கப்போகும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறுவதால், அதன் பிறகு உடனே தீர்ப்பு வழங்க முடியாது. அச்சமயம் விசாரணை திரும்ப முதலில் இருந்து நடைப்பெறும்.
நாமும் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.
பின்குறிப்பு - இணையத்தில் பல்வேறு தளங்களில் வாசித்ததை பதிந்திருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் குறிப்பிடவும்.
.
13 comments:
//என்னத்தான் முன்பு ராமர் கோவில் இருந்தாலும், 400 ஆண்டுகளுக்கு மேலாக மசூதி இருப்பதால், அதில் கோவில் கட்ட சட்டரீதியாக இடமில்லை. இல்லாவிட்டால், இப்போது நாம் இருக்கும் இடமெல்லாம் நமக்கில்லாமல் போகலாம். இது என் மூதாதையர் இடம், அது என் மூதாதையர் இடம் என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்.//
மெக்காவை இடித்து கோவில் கட்டி 400 ஆண்டுகளைத் தாண்டிவிட்டால், இஸ்லாமியர்கள் கோவிலுக்காக இடத்தினை விட்டு விடுவார்களா. நபிகளுக்காக போராட மாட்டார்கள். அவர்களின் இடம் என உரிமை கொண்டாட மாட்டார்கள். ஆனால் இந்துக்கள் மட்டும் ஒன்றும் பேசாமல் விட்டுக் கொடுக்கவேண்டும். நீங்கள் சொல்வதில் ஞாயம் இல்லை நண்பரே!.
ராமனுக்காக முன்னோர்கள் கட்டிய கோவிலை இடித்து அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும்.
அவர்களுக்காக 50 நாடுகளுக்கும் மேல் இருக்கின்றன. புனித மெக்கா என நபிகள் வாழ்ந்த இடங்கள் இருக்கின்றன. இந்துக்களுக்கு இருப்பது இந்தியா மட்டும்தான். ராமனுக்கு இருப்பது அயோத்தியா மட்டும்தான். விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கு இடம் இல்லை. கண்டிப்பாக அது நடக்காது.
அருமையான பதிவு...ஆனால் நீங்க ராஜீவ் காந்தி பண்ணுனத பத்தி ஏதும் சொல்லல..அவரோட ஆட்சியில் ராமரை வழிபட அனுமதித்தார் அதன் பின்பு கலவரம் வெடித்தது..அவர் ஹிந்துகளின் ஓட்டுகளை பெருவதக்கு அப்படி செய்தார்..பின்பு 1989 தேர்தல் பிரச்சரத்தை ராமரின் கோவில் வைத்து ஆரம்பித்தார்..அயோத்தி பிரச்சனைக்கு காரணம் காங்கிரஸ் & பிஜேபி...இவர்கள் இருவருக்கும் அதிக வேற்றுமை கிடையாது....
தீர்ப்பு எப்ப வந்தாலும் பிரச்சினையும் விபரீதங்களும் கூடவே வரலாம். வழக்கமா நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்துட்டே போகுதேன்னு கவலைப்படுவோம். இதில் லேட்டானா சந்தோசப்படறோம். :-)
//ராமனுக்காக முன்னோர்கள் கட்டிய கோவிலை இடித்து அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும்.//
@ ஜெகதீஸ்வரன் :
உங்களின் பதில் முட்டாள் தனமானது..உங்களால் அயோத்தில் ராமர் கோவில் ஒன்று இருந்தற்கு அதிகாரபூர்வமாக நிருபிக்க முடியுமா??? நீங்க கடந்த நூறு ஆண்டுகளை மட்டும் பார்கதிர்கள்..அதற்கு முன்பு வரலாறு எப்படி இருந்தது என்று பாருங்கள்...ராமயணம் ஒரு இதிகாசம் என்று நீங்கள் படிக்கவில்லையா??? எது உண்மை எது பொய் என்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பரை..
oru edathula 1886 nu pothu erukenga athu than doubt a eruku
mathapadi entha problem thoda detail theiryama feel pannitu erunthen.
thank you very much
super
theerpai thalli vaichathuthan ella makkalukum nallathu
இதோ விடுதலை நாளேடு மிகவும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளதே...விடுதலையில் மயிலாடன் அவர்கள் 23-2-2010 ஆதாரங்களுடன் எழுதியதை அப்படியே தருகிறேன்.
மயிலை சீனி. வேங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளி மதில்சுவரில் சில புத்த விக்கரகங்கள் பலவகை சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ண தேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்கவேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்ரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரி நிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. (பவுத்தமும், தமிழும், பக்கம் 54).
ஏகாம்பர ஈசுவரர் கோயிலில்தான் இந்தக் கதையென்றால், காமாட்சியம்மன் கோயில் மட்டும் என்ன வாழ்கிறது?).
காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம் இவ்வாலயத்தில் பல புத்த விக்கரகங்கள் இருந்தன. அவைகளில் ஆறு அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்பொழுது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சியம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்கு முன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த விக்கரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம். (பவுத்தமும், தமிழும், பக்கம் 55).
புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.
PART ONE.
இந்த பார்ப்பனர்கள் எப்படி புத்த கோவில்களை இந்து கோவில்களாக மாற்றினார்கள் என்ற யோக்கிதை இதோ விடுதலை நாளேடு மிகவும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளதே...விடுதலையில் மயிலாடன் அவர்கள் 23-2-2010 ஆதாரங்களுடன் எழுதியதை அப்படியே தருகிறேன்.
மயிலை சீனி. வேங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளி மதில்சுவரில் சில புத்த விக்கரகங்கள் பலவகை சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ண தேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்கவேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்ரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரி நிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. (பவுத்தமும், தமிழும், பக்கம் 54).
ஏகாம்பர ஈசுவரர் கோயிலில்தான் இந்தக் கதையென்றால், காமாட்சியம்மன் கோயில் மட்டும் என்ன வாழ்கிறது?).
SEE BELOW ...
PART 2
ஏகாம்பர ஈசுவரர் கோயிலில்தான் இந்தக் கதையென்றால், காமாட்சியம்மன் கோயில் மட்டும் என்ன வாழ்கிறது?).
காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம் இவ்வாலயத்தில் பல புத்த விக்கரகங்கள் இருந்தன. அவைகளில் ஆறு அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்பொழுது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சியம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்கு முன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த விக்கரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம். (பவுத்தமும், தமிழும், பக்கம் 55).
புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.
கட்டுரை அருமை. இதே போன்றதொரு கட்டுரையை ஆங்கில நாளிதழ் ஒன்றில் சில நாட்களுக்கு முன் வசிக்க நேர்ந்தது.மகிழ்ச்சி. பதிந்தவருக்கு வாழ்த்துகள். பதிவை தொடர்ந்து விமர்சன பகுதியை படித்த பிறகு தான் இதை எழுத தோன்றிற்று. நண்பர் ஜெகதிஸ்வரன் மிக உணர்ச்சி வசப்பட்டு தன் கருத்தை வெளிபடுத்தி உள்ளார். உணர்ச்சி வசபட்டால் அறிவு வேலை செய்யாது என்பது இவரது விடயத்தில் உண்மை. இந்திய சட்டப்படி ஒருவர் 10 வருடங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் இருந்தால் அதற்கு அவர் உரிமை கோர இயலும். எனவே முன்னர் அந்த இடத்தில ராமர் கோவில் இருந்ததாக வைத்துகொண்டலும் 400 வருடங்கள் என்பது மிக அதிகமான காலம். யாரோ ( Anonymous) விடுதலை இல் வந்த கட்டுரையை இணைத்து நன்று. அதை ஏன் பெயர் சொல்லாமல் இடவேண்டும்.நண்பர் கிருஷ்ணா மிக இலாவகமாக கருத்தை வெளி இட்டுள்ளார். உங்கள் கருத்தின்படியே, இஸ்லாம் வேண்டுமானால் இங்கு தோன்றாமல் இருக்கலாம். இந்து மதம் மட்டும் இங்கு தோன்றியதா? மற்ற உலகில் பல பெரிய மதங்களுக்கும் தோற்றம், தோன்றிய இடம் பற்றி கணிக்ககூடிய அல்லது அனுமானிக்ககூடிய சில விடயங்கள் உண்டு. ஆனால் இந்து மதத்திற்கு ?இதை கேட்டால் உலகின் ஆதி மதம் மிக பழைய மதம் என்று வெட்டி வியாக்கானம் வேறு? இங்கு ஒரு சிறு கேள்வி. ராமர் கடவுள் என்றும், கடவுளுக்கு பிறப்பு இறப்பு இல்லை என்றும் சொல்லுபவர்கள், அயோத்தி ராமர் பிறந்த இடம் என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது. ராமர் அங்கு பிறந்தார் என்றால் ராமர் கடவுள் இல்லையா. அப்படி கடவுள்ளாக இல்லாத ஒரு சாதாரண பிறந்த மனிதனுக்காக ஏன் இவ்வளவு போராட்டம். அப்படி ராமர் கடவுள் என்றால் பிறகு ஏன் பிறப்பு இறப்பு இல்லாத ஒன்றின் பிறந்த இடத்திற்காக சண்டை?. பாபர் வேண்டுமானால் இந்தியராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் அந்த இடத்தை கைபற்றி சில காலம் ஆண்டுள்ளார் அதுமட்டுமல்ல அவரது வாரிசுகள் சற்றேறக்குறைய 250 ஆண்டுகள் ஆண்டுள்ளனர். பிறப்பின் சந்தேகத்திற்குரிய ஒரு பொருளுக்காக சண்டை போடுவதை விட பாபருக்கு அங்கு மசூதி இருபதற்கு அவர் தகுதியானவரே.

@இயற்கைநம்பி: 10 வருசமா ஒருத்தர் உங்க வீட்ல இருந்துட்டு அவரு வீடு என்னுது வெளிய போடானா போயிடுவிங்கள பாஸ் ? லூசுத்தனமா பேசறிங்க? கோயில் சொத்த கையகப்படுத்தினதே தப்பு இதுல 400 வருசமா இருந்த என்ன? 4000 வருசமா இருந்த என்ன? அடுத்தவன் எடத்துல ஆக்ராமிப்பு செஞ்சது தப்பு தான். ராமர் ஒரு அவதாரம். டார்வின் தியரி தப்புன்னு 2000 ல தான் கண்டு புடிச்சாங்க. அதுக்கு முன்னாடியே, மனிசன் நீர்வாழ் உயிரினதுல தான் இருந்து பிறந்தான்னு பகவதத்துல எத்தனையோ வருசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க. இந்த நாட்டுல இருந்துட்டு இதோட வரலாறு தெரியாத உங்கள மாதிரி அழுங்கல நடுரோட்ல நிக்க வச்சி நாய் சுடரமதிரி சுடனும்.
@ananymous : கொய்யாலே மகேந்திரவர்மன் காலத்துலேயே காஞ்சில புத்தவிகாரங்கள் கடினார்னு உன்னக்கு தெரியாத? நீயும் தமிழ் வரலாறு தெரியாம பேசற அரவேக்காடு.
@cutephotos : உங்களுக்கு என்ன பரூப் வேணும் சொல்லுங்க? மனிதனுக்கும் குரங்குக்கும் நடுவுல இருந்த இனம் பத்தி எழுத்தானது ராமாயணம்ல தான். பலவருசம் கழிச்சி வரும் சூரிய உதயத்தின் நேரத்தையும் சரியாய் கணிச்சு வச்சிருகறதும் நாம்ம இந்து மதத்தவர்தான். ராமாயணம் இதிகாசம்னா? ராமேஸ்வரத்துக்கும், இலங்கைக்கும் நடுவுல இருக்கற ராமர் பலத்துக்கு பதில் சொல்லுங்க? இன்னும் தண்ணில மிதக்குற கல்லுங்க ராமேஸ்வரத்துல இருக்கு நீங்க பாத்துருக்கீங்களா ?எந்த நாட்டு scientist டும் இதுக்கு விளக்கம் தர முடியாது.
@ சரவணன்: நல்ல பதிவுங்க. உங்க தளம் நல்ல இருக்கு.
S GOPALAKRISHNAN
TEMPLE NU THU VALI PADA THAN. ITHU SANDA PODA ILA. KEKA VENDIYAVANGA VITU TANGA, ATHUKU NU IPA KEKURATHA THAPUNU SOLA VARALA. ANA INTHA VISHAYAM UNARVU RETHIYA NATHU, 2PERUME IDAM VENUMUNU KEKUROM VITU KODUKA YARUME THAYARA ILA. INTHA PROBLETHA THOONDI VIDARAVANGA INTHA KALAVARATHULA SAGA PORATHILA THAN UNMAI ANA APAVI MANITHARKAL NIRAYA ALIVARGAL. AVANGA MANAIVI,KULANTHAIGAL AMMA,APPA ELLORUM ANNATHAIYA AVANGA. ITHA THADUTHU NIRUTHA ANTHA RAMARO,ILA ALLAVO VARA MATANGA MANUSANGA NAMATHAN NALA MUDIVU EDUKANUM. IRUNDU THARAPINARUME VITU THARA MUDIVU EDUKANUM.
ANTHA IDATHULA PERIYA GOVERNMENT COLLEGE KATUNA IRU THARAPU MAKAL MATUMALLA ELA MAKALUM KALAKALMA PERU SOLUM IRU THARAPINARUM VITU KODUTHAL NATUKU KIDAITHA MIGAPERIYA PARISU MELUM ALIVU NADAKAMA IRUNTHUSUNU VARALATRULA IRUKUM.
ENKARUTHULA THAPU IRUNTHU MANIKAVAVUM- SAMUTHAYA NALAN VIRUMPUM UNGAL S.Gopalakrishnan
சர்ச்சையான விஷயம்’ன்னு சும்மாவா சொல்றாங்க? ஒரு பதிவுக்கே எத்தனை காரசாரமான மறுமொழிகள்!
இனி இது பற்றி பேசாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
Post a Comment