
புத்திசாலி இயக்குனர். தனது புத்திசாலித்தனத்தை படம் முழுக்க காட்டியிருக்கிறார். முதல் பாதி சிம்புதேவன் டைப்பில் ஜாலியாக செல்கிறது. இரண்டாம் பாதியில் கியர் மாறி வழக்கமான தமிழ்ப்பட பாணி. லாஜிக், ம்ஹும்.
இயக்குனர் சித்தார்த் விளம்பரத்துறையில் பணியாற்றியவர். படத்தின் ஸ்டில்ஸ் அருமையாக, இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. படத்திலும் பல காட்சிகள் இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இது என்ன டைப் படம் என்று அவ்வப்போது புரியாமல் போவது பெரும்குறை.

ஹீரோ ’வெண்ணிலா கபடி குழு’ விஷ்ணு. நகர இளைஞன் வேடத்திலும் மேட்ச் ஆகிறார். ஹீரோயின் பியா, ட்ரஸ் செலக்ஷனை அவரே தான் செய்வாரோ? எல்லா படத்திலும் ஒரே மாதிரி ட்ரஸ்களில் வருகிறார்.
விவேக் லண்டனில் இருந்து வருபவராக நடித்திருக்கிறார். வடிவேலு ஆங்கிலம் பேசும்போது சிரிப்பு வருவதை போல, இவர் ஆங்கில உச்சரிப்பில் தமிழ் பேசுவதும் சிரிப்பை வரவழைக்கிறது. நன்றாக செய்திருக்கிறார். இரட்டை அர்த்த வசனத்தை விட்டிருக்கிறார். மெசெஜ் சொல்வதை விடவில்லை. இவர் மட்டுமில்லாமல், படத்தில் பலர் காமெடி செய்திருக்கிறார்கள்.
எக்கசக்க நடிகர் கூட்டம். பார்க்கும் படங்கள் எல்லாவற்றிலும் ஜெயப்பிரகாஷ் இருக்கிறார். இதில் அவருக்கு பெரிதாக வாய்ப்பில்லை.

இசையமைப்பாளராகும் பாடகர்கள் பெரிதாக சோபிப்பதில்லை. தேவன் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இரண்டு பாடல்களிலும், பின்னணி இசையிலும் கவனம் பெறுகிறார். இதுவரை பாடல்களை கேட்டதில்லை. இனிதான் கேட்கணும். சமீபத்தில் இப்படி கேட்க தோன்றியது இதுதான்.
‘ஹாப்பி ஹாப்பி’ பாடலில் கிட்டத்தட்ட தமிழின் அனைத்து இளம் பாடகர்களும் வருகிறார்கள், செம்மொழி பாடல் ஸ்டைலில். விஜய் ஜேசுதாஸ் டீக்கடை சேட்டனாக வருகிறார். டோண்ட் மிஸ் இட்.

சில இடங்கள் நாடக பாணியில் இருப்பதாலும், திருப்பங்கள் பாதியிலேயே காலியாவதாலும் படத்தின் ஓட்டம் சோர்வடைகிறது. வாட்ச் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. மற்றபடி, ரசித்து சிரிக்க பல காட்சிகள் இருக்கிறது, இறுதி டைட்டில் வரை. தியேட்டரில் இருந்த அனைவரும் (பத்து பேரும்) சிரித்தார்கள்.
பலே சித்தார்த்!
.
3 comments:
paaththudalaam thala
"இறுதி டைட்டில் வரை. தியேட்டரில் இருந்த அனைவரும் (பத்து பேரும்) சிரித்தார்கள்."
ithu unmaiyeleye commedy than
unga nala matuum than mudiyum
//
இறுதி டைட்டில் வரை. தியேட்டரில் இருந்த அனைவரும் (பத்து பேரும்) சிரித்தார்கள்.
//
இந்த மாதிரி படத்துக்கு வந்து உக்காந்துடோம்மேன்னா???
Post a Comment