Wednesday, August 18, 2010

ஆக்ரா கோட்டையும் ஆட்டோக்காரர் சேட்டையும்

ஆக்ரா கோட்டைக்குள் செல்ல, செல்ல போய்க்கொண்டே இருந்தது. இந்த கோட்டை பல மன்னர்கள் கைமாறி இருக்கிறது. இந்தியாவையே (அப்படி ஒன்று அப்போது இல்லை) இங்கிருந்து தான் ஆண்டிருக்கிறார்கள். இன்னமும் இதன் ஒரு பகுதியை, இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது.





நான் முன்னமே சொன்ன முன்னோர் பீலிங் வந்தது. அக்பர், ஷாஜகான், அவுரங்கசீப் நடந்து சென்ற பாதையில், நானும் நடந்து சென்றேன். ஷாஜகான் ஆண்டது இங்கிருந்து தான். தனது மகனால், சிறையில் அடைக்கபட்டதும் இங்கேதான். தாஜ்மஹாலை பார்த்துக்கொண்டே இறந்ததும் இங்கேதான்.






இங்கே இருந்து தாஜ்மஹாலை பார்ப்பது அழகாக இருக்கிறது. யமுனை நதிக்கரையோரத்தில் தாஜ்மஹால் தெரிகிறது. இந்த கேப்பில் தான், ஷாஜகானும் தாஜ்மஹாலை பார்த்திருப்பாரோ என்று நினைத்துக்கொண்டேன்!





சில இடங்களில் இந்து கட்டிட கலையும், இசுலாமிய கட்டிட கலையும் கலந்திருக்கிறது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றினாலும், சிறிது நேரத்தில் வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது.





கோட்டையின் பிரமாண்டம் கம்பீர உணர்வை கொடுப்பதாக இருந்தாலும், உள்ளூர ஒரு சோக உணர்வே என்னை துரத்திக்கொண்டிருந்தது. எது, என்னவென்று தெரியவில்லை.

---

கார் டிரைவன் (சின்ன பையன் தானே!) பேசிக்கொண்டே வந்தான்.

“ஆக்ரா என்றால் தாஜ்மஹால் தானே?”

“ஆமாம் சார்”

“அப்ப உங்க ஊருக்கு முக்கிய வருமானம் - சுற்றுலா தான், இல்லையா? அதுவும் முக்கியமா தாஜ்மஹால், இல்லையா?”



“ஆமாம். ஆனா, தாஜ்மஹால் இல்லன்னா, இன்னும் நல்லா இருந்திருக்கும்.”

எனக்கு ஆச்சரியமா, அதிர்ச்சியாக இருந்தது.

“ஏன்ப்பா அப்படி சொல்ற? பக்கத்தில் தொழிற்சாலைகள் இருக்க கூடாது என்பதாலா?”

“ஆமாம்”

“அதுக்கு என்ன பண்றது? ப்ளஸ்ன்னு இருந்தா, மைனஸும் இருக்கும் தானே?”

“ஆனா, தாஜ்மஹால்’னால எங்களுக்கு மைனஸ் தான் அதிகம்”

நான் அவனை உற்று நோக்க,

“டெல்லிக்கு பக்கத்தில் இருக்கிற ஊரு. எவ்ளோ முன்னேறி இருக்கணும்? மத்த எல்லா பக்கமும், நல்ல முன்னேற்றம். இங்க மட்டும் இல்லை. காரணம், தாஜ்மஹால் கறைப்படியுமாம். அதனால, எந்த தொழிற்சாலைக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. முன்னாடி, நிறைய தோல் தொழிற்சாலைகள் இருந்தது. மூடிட்டாங்க. வருஷத்துல, மூணு நாலு மாசம் தான் சீசன். வெளிநாட்டுக்காரங்க வருவாங்க. மத்த நேரம், வெயில் தாங்க முடியாது. வேற வேலையும் கிடையாது.”

எனக்கு புரிந்தது. ஒன்றும் சொல்லவில்லை.

---

டெல்லி - ஆக்ரா ரயில் பயணம் என்றால் தான் இரண்டு - மூன்று மணி நேரத்தில் சாத்தியம். சாலை வழி பயணம் என்றால் ஐந்தில் இருந்து ஏழு மணி நேரம் வரை ஆகுமாம். நான் மதியம் இரண்டு மணிக்கு கிளம்பும் ரயிலில் புக் செய்திருந்தேன். இல்லாவிட்டால், பதேப்பூர் சிக்ரியும் சென்று வந்திருக்கலாம். இதை பிடித்தால் தான், இரவு அலுவலகத்தில் புக் செய்திருந்த விமானத்தை பிடிக்க முடியும். அதனால் வேறெதையும் ப்ளான் செய்யவில்லை.

தொடர்ந்து வடமாநில தலைவர்களிடமே ரயில்வே துறை இருப்பதாலோ என்னவோ, நிறைய ரயில்களை, நிறைய அதிவேக ரயில்களை, சொகுசு ரயில்களை இந்த பக்கம் காண முடிந்தது. ஆனால், ரயில்களை வடமாநில பயணிகள் மோசமான முறையில் பயன்படுத்துவதாக தெரிகிறது. ஸ்லீப்பர் க்ளாஸ் டாய்லட் பக்கம் செல்வதே திகில் அனுபவமாக இருந்தது.

இப்படி நிறைய ரயில்கள் இருப்பதால் வரும் தொந்தரவு என்னவென்றால், கிராஸ்ஸிங்கிற்காக நிறைய இடங்களில் நிற்க வேண்டியதாக இருக்கிறது. இந்த ரயிலை பற்றி நிறைய விசாரித்திருந்தேன். சரியான நேரத்திற்கு செல்லுமா? லேட்டானால் எவ்வளவு ஆகும்? விமானத்தை பிடிப்பதில் எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதால், இவ்வளவு விசாரிப்பு. எல்லோருமே நல்லவிதமாக சொன்னார்கள்.

ஆனாலும் ரயில் சதி செய்தது. மாலை 4:30 க்கு டெல்லி வரவேண்டியது, 6 மணியளவில் வந்து சேர்ந்தது. 8 மணிக்கு விமானம். ஆட்டோ பிடிக்க ஓடினேன். ஆட்டோ ட்ராப்பிக்கில் அப்படி இப்படி புகுந்து சென்றுவிடும் என்பதால். ஆனால், அப்படியெல்லாம் செல்ல வாய்ப்பே இல்லாத நிலை. நீளமான சிக்னல் வெயிட்டிங். ஊர்ந்து சிக்னல் பக்கம் சென்றால், மீண்டும் சிகப்பு ஒளிரும். ஆட்டோ டிரைவருக்கும், வேகமாக செல்ல விருப்பம் இல்லை போலும். உருட்டிக்கொண்டிருந்தார்.

ஏதோ பிரதமர் பிரஸ் மீட்டிங்காம் அந்த பக்கம். பத்திற்கும் மேற்பட்ட சேனல்களின் வேன்கள், டிஷ்களுடன் நின்றுக்கொண்டு இருந்தது. டிரைவர் விமான நிலையம் செல்ல ஏழே முக்கால் ஆகி விடும் என்று பகீர் ஆருடம் சொன்னார். விமான நேரத்தை கேட்டு தெரிந்துக்கொண்டு, உதட்டை பிதுக்கினார். அவ்வப்போது வாட்சைப்பார்த்து, தலையை மறுப்பது போன்று ஆட்டி கடுப்பை கிளப்பினார். நான் வேறென்ன செய்ய முடியும்? ரோட்டில் இறங்கி ஓடவா முடியும்? ஆனது ஆகட்டும் என்று பொறுமையாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.

சிறிது நேரத்தில் சிக்னல் விலக, அதன்பிறகு பெரிதாக எங்கும் சிக்னல் இல்லை. ஆட்டோ ஏழரைக்கு முன்பே போய் சேர்ந்தது. இல்லாவிட்டால், ’ஏழரை’ ஆகிருக்கும். அங்கு சென்று பார்த்தால், விமானம் ஒரு மணி நேரம் லேட்டாம்.

---



பலநாட்களாக இப்படி வட இந்திய பக்கம், ஒரு பயணம் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது. வெறும் பேச்சு, திட்டம் என்றளவிலே இருந்தது. திடீரென்று வேகமாக அமைந்து, மூன்றே நாட்களில் முடிந்து விட்டது. மனதிற்கு பிடித்தவர்களுடன் திரும்பவும் செல்லவேண்டும். பார்க்கலாம்.

(முற்றும்)

.

15 comments:

Unknown said...

நான் மிகவும் ரசித்த இடங்கள் ...

ஸ்ரீ.... said...

படங்களும், செய்திகளும் அருமை. நீண்ட காலமாகச் செல்லவேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பதோடு சரி. இன்னும் போக முடியவில்லை. உங்கள் இடுகை வாயிலாக எனது திட்டம் ஓரளவு நிறைவேறிவிட்டது. மிக்க நன்றி.

ஸ்ரீ....

Jaleela Kamal said...

நாங்களும் குடும்பத்துடன் போன மாதம் தான் சென்று வந்தோம். யமுனை நதிகரையில் அமைந்துள்ள அழகிய தாஜ் மஹாலை படம் பிடித்து வந்துள்ளேன்.

நோன்பு கழிந்து தான் பிளாகில் போடனும்
ரொம்ப அருமை நாங்கள் சென்றபோது காலையில் நல்ல மழை.

ரொம்ப நல்ல இருந்தது

www.allinalljaleela.blogspot.com

Jaleela Kamal said...

ட்ரெயின் லேட்ட்டாகி 6 மணி நேரம் ரயிவே ஸ்டேஷனில் காத்து கிடந்து பிளைட்ட மிஸ் பன்ணிட்டோம்.
மறு படி6 மணி நேரம் ஏர்போட்டில் , ய்ப்பா மறக்க வே முடியாது..

Unknown said...

படங்கள் நல்லாயிருக்கு.. பார்க்க வேண்டிய இடங்கள்தான்..

நன்றி..

Anonymous said...

This places are good to see definitely keep saying wow, wow and wow but i suggest if you need to see or visit something more legendary something more historical, recommend Rani Padmini palace. Chittoor fort of mewar, shivanari fort of shivaji. And of somantha temple at gujarat. Lastly Hampi. All this places definitely a must visit. India has a bloody history. Unfortunately we have a secular government glorifying invaders.

sakthipriya said...

Arumaiyana pathivu

Manathuku pidithavarkuludan sendru vara enoda Advance best wishes

ALAGUNAYAGAM said...

cq;fs; vOj;jpd; eil kpfTk; mUik. ntF ehl;fshf gpd;Dhl;lk; ,lNtz;Lk; vd;W tpUk;gpNd;. ed;wp.

உசிலை மணி said...

அனுபவித்ததை அனைத்தையும்
துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள்.
கரம் குவிக்கிறேன் நண்பா......

சரவணகுமரன் said...

வாங்க செந்தில்

சரவணகுமரன் said...

நன்றி ஸ்ரீ...

சரவணகுமரன் said...

நன்றி கமல்

சரவணகுமரன் said...

நன்றி பாபு

சரவணகுமரன் said...

நன்றி சக்திப்ரியா

சரவணகுமரன் said...

நன்றி உசிலை மணி