Saturday, August 14, 2010

வம்சம்

ஒரு பீல் குட் கதையை முதல் படமாக கொடுத்த பாண்டிராஜ், வன்முறை தெரிக்கும் ஒரு கிராமத்து கதையை இரண்டாவது படமாக கொடுத்துள்ளார்.



நாயகனாக முதல்வர் குடும்பத்தில் இருந்து இன்னொரு கலை வாரிசு. அருள்நிதி. இந்த படத்துக்காக தான் பைக் ஓட்டவே கற்றுக்கொண்டாராம். இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இந்த கதையின் நாயகனுக்கு அமைதியான முகமும் வேண்டும். ஆக்ரோஷமான முகமும் வேண்டும். இவருக்கு அதிரடி பத்தவில்லை.

ஆகா! நீண்ட இடைவெளிக்கு பிறகு சுனைனா. கிராமத்து பெண்ணாக வருகிறார். சாணி தண்ணி வாளியை தூக்கிக்கொண்டும், சைக்கிள் செயினை தாவணி கட்டிய இடுப்பில் சொருகி கொண்டும் பட்டையை கிளப்புகிறார்.

படத்தில் வெயிட்டான கேரக்டர்கள் நிறைய. வில்லனாக வருபவர். அம்மாவாக வருபவர். மாமாவாக வருபவர். ப்ளாஷ்பேக்கில் சண்டியராக வரும் கிஷோர். இவர்கள் எல்லாம் இளமை - முதுமை வித்தியாசம் காட்டி, நன்றாக நடித்திருக்கிறார்கள். ஹீரோவுக்கு மட்டும் பில்-டப் கொடுக்காமல், அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. படத்திற்கு அதுவும் ஒரு பலம்.

கிராமத்தில் மொபைல் சிக்னல் கிடைக்காமல், மரத்தின் மேல் மொபைலை கட்டிப்போடுவதும், போன் வரும்போதெல்லாம் கஞ்சா கருப்பு மரத்தின் மீது ஏறி பேசுவதும் சிரிக்க வைக்கும் காமெடி.

வித வித வம்ச வெரைட்டிகள், திருவிழா மரியாதை, திருவிழா கொலை, கத்தாழை கத்தி, பிண போதை என பார்க்காத விஷயங்கள் பலவற்றை காட்டுகிறார் இயக்குனர். தவிர பார்த்த கிடா வெட்டு, பொங்கல், கச்சேரி போன்றவைகளையும் நினைவுக்கு கொண்டு வருகிறார்.

ட்ராபிக், ஜனநெரிசல், வாகன புகை, கட்டிட மரங்கள் இவையெல்லாம் மறந்து கொஞ்சம் நேரம் ஊர் பக்கம் கூட்டிசெல்கிறார் இயக்குனர். அப்படியே ஒரு கிராமத்துக்குள் கால்நடையாய் போய் வந்தது போல் இருக்கிறது.

புது இசையமைப்பாளர் தாஜ்நூர் சமயங்களில் பின்னணி இசை மூலம் கவனம் ஈர்க்கிறார். அட போட வைக்கும் காட்சிகள் படம் முழுக்க நிறைய இருந்தாலும், கடைசியில் முதல் நாள், இரண்டாம் நாள் என்று இழுத்து, இரவு முழுக்க சண்டைக்கு காத்திருப்பது என ஏக பில்-டப் கூட்டி இறுதியில் சப்பென்று முடித்துவிட்டார்கள்.

கதைப்படி அருள்நிதி அவருடைய வம்சத்தை காப்பாற்றுகிறார். அவர் வம்சத்தை காப்பாற்றுகிறாரோ, இல்லையோ, ’வம்சம்’ அவரை காப்பாற்றும். நல்ல டைரக்டர் கிடைத்தால் போதும், நாமும் ஒரு ரவுண்ட் வரலாம் என மேலும் பல வாரிசுகளுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

.

6 comments:

அன்புடன் நான் said...

வம்சம்= அம்சம்?
பகிர்வுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல விமர்சனம்.தராசு போல் செயல்பட்டு கலக்கீட்டீங்க..<>>>>, ’வம்சம்’ அவரை காப்பாற்றும். நல்ல டைரக்டர் கிடைத்தால் போதும், நாமும் ஒரு ரவுண்ட் வரலாம் என மேலும் பல வாரிசுகளுக்கு நம்பிக்கை கொடுக்கும்>>><<<
நூற்றில் ஒரு வார்த்தை

Sukumar said...

ரைட்டு

சரவணகுமரன் said...

நன்றி கருணாகரசு

சரவணகுமரன் said...

நன்றி செந்தில்குமார்

சரவணகுமரன் said...

ஒகே சுகுமார்