கடந்த இரண்டு வாரங்களில் பார்த்த இரண்டு படங்களில், இரண்டு பாடல்கள் மட்டும் தான் பிடித்திருந்தது. மற்றபடி சொதப்பலான அம்சங்களே அதிகம்.
இரண்டுமே பெண் குரல் பாடல்கள். ஒன்றில் இரண்டு பெண்கள். முன்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும், பெண் குரல் பாடல்கள் எனக்கு ஏனோ பிடித்ததில்லை. இப்ப மாறி வருகிறது.
---
தில்லாலங்கடி ‘சொல் பேச்சு’ பாடலின் படமாக்கம் - இண்ட்ரஸ்டிங். கேமரா அப்படியே சுழன்றுக்கொண்டு இருக்க, ரவிக்களும் தமன்னாக்களும் சேர்ந்து ஆடுவது போன்ற கான்செப்ட், ரொம்பவும் பிடித்தது. அடிச்சான் காப்பி என்பதால் கிரியேட்டிவிட்டிக்கு கிரடிட் கொடுக்காவிட்டாலும், உழைப்புக்கு கொடுக்கலாம்.
வடிவேலு - சந்தானம் காம்பினேஷனில் முதல் படம் என்று நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. ஜெயம் ராஜா படம் பார்க்கும்போது, ஒரு ஹிட் படம் பார்க்கும் உணர்வு இருக்கும். இதில் நேரெதிர். அடுத்து விஜய்யுடனாமே? காற்று வீச ஆரம்பித்துவிட்டதோ!
---
பாணா காத்தாடி ‘என் நெஞ்சில்’, படத்தில் கதைக்கேற்ப வரிகளுடன் அமைந்த பாடல். கதையின் தொடர்ச்சியாக அழகான நாயகியின் தவிப்பான நடிப்பில், அருமையான லொக்கேஷனில் எடுத்த பாடல். சம்பந்தமில்லாமல் வந்து போஸ் கொடுக்கும் நாயகன் தான், பாடலில் குறை.
இந்த படம் எல்லாவிதத்திலும் ஆவரேஜ். சூப்பர் என்றும் சொல்லமுடியாது. ப்ளேடு என்றும் சொல்லமுடியாது. நாயகன் ஆதர்வாவும் ஆவரேஜ். இவருக்கு நல்ல மெச்சுர்டான, உருவத்துக்கு சம்பந்தமில்லாத குரல். இவரை ஆஹா ஓஹோ என்றும் சொல்லமுடியாது. மோசம் என்றும் சொல்லமுடியாது. படத்தின் டாப் - சமந்தா மட்டுமே. டாப் டக்கர்.
ஒவ்வொரு புது ஹீரோ வரும்போதும், அடுத்த சூப்பர் ஸ்டாரோ என்று எதிர்ப்பார்ப்பில் ஒரு குரூப் உடனே மன்றம் தொடங்கும். அதுவும் நடிகர், இயக்குனர் மகனென்றால் நம்பிக்கை லெவல் இவர்களுக்கு இன்னும் அதிகமாகிவிடும். முதல் படத்திற்க்கே மாலை, போஸ்டர் என்று கைக்காசை செலவழிப்பார்கள். எல்லாம் வருங்காலத்தில் ஆரம்பிக்கப்படும் என்று நினைக்கப்படும் கட்சியின் ‘மாவட்ட செயலாளர்’ பதவி கிடைக்கும் என்ற நப்+பேராசையில் தான். இப்படி மனோஜ், அம்சவர்தன் போன்றவர்களை நம்பி ஏமாந்தவர்களை பார்த்திருக்கிறேன். போன வாரம் கூட, சாந்தனுவின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடித்தவர்களை பார்த்தேன்.
இப்படி இந்த வாரம் ஆதர்வாவை நம்பி விசில் அடித்த கும்பலை காணும் வாய்ப்பு ‘பாணா காத்தாடி’ படத்தின் போது காணக்கிடைத்தது. அடுத்தது கௌதம் படமாமே? என்ற செய்தி இவர்களுக்கு இன்னமும் பூஸ்ட் கொடுத்திருக்கும்.
---
இந்த இரண்டு படங்களிலும் இரண்டு ஹீரோக்களை பரிதாபகரமான வேடங்களில் காண வேண்டியதாக இருந்தது. தில்லாலங்கடியில் ஷாமும், பாணாவில் பிரசன்னாவும். இருவருக்குமே பொருத்தமில்லாத வேடங்கள்.
தில்லாலங்கடி போஸ்டரில் சின்னதாக ஷாமை பார்க்க பாவமாக இருந்தது. ம்ம்ம். என்ன செய்ய? பத்து வருசம் பீல்டில் இல்லாவிட்டாலும், ஹீரோவாகவே நடிக்க அவரென்ன ராமராஜனா?
பிரசன்னாவுக்கு ஏன் இந்த நிலை? நல்லாதானே போயிட்டிருந்தது. அவரிடம் இந்த காரெக்டருக்கு இயக்குனர் என்ன பில்ட்-அப் கொடுத்தாரோ? ப்ரசன்னாவின் அந்த மென் சோக முகம், ரவுடி கேரக்டருக்கு சுத்தமாக பொருந்தவில்லை.
’பின்புலமற்ற நடிகர்’களின் மேலான ’வாரிசு நடிகர்’களின் ஆதிக்கமாக இந்த இரண்டு படங்களை காண முடியும். பாருங்க, எங்கெல்லாம் குறியீடு தேடுகிறேன்!
.
9 comments:
சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க நண்பா.
தில்லாலங்கடி பற்றி மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பாணா இன்னும் பார்க்கவில்லை.
தில்லாலங்கடியில் 'ஷாம்' நடித்ததை நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் தெலுங்கு பதிப்பில் அவர்தான் நடித்திருந்தார். ஜெயம் ராஜா தெலுங்கு பதிப்பில் வேறு ஒரு தெலுங்கு நடிகர் நடித்திருந்தாலும் அவரைத்தான் இங்கே கொண்டு வந்திருப்பார். அப்படி இருக்கையில் ஷாமை விடுவாரா?
//தில்லாலங்கடியில் 'ஷாம்' நடித்ததை நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் தெலுங்கு பதிப்பில் அவர்தான் நடித்திருந்தார். ஜெயம் ராஜா தெலுங்கு பதிப்பில் வேறு ஒரு தெலுங்கு நடிகர் நடித்திருந்தாலும் அவரைத்தான் இங்கே கொண்டு வந்திருப்பார். அப்படி இருக்கையில் ஷாமை விடுவாரா?
August 12, 2010 4:56 PM
//
hehee
///தில்லாலங்கடி ‘சொல் பேச்சு’ பாடலின் படமாக்கம் - இண்ட்ரஸ்டிங். கேமரா அப்படியே சுழன்றுக்கொண்டு இருக்க, ரவிக்களும் தமன்னாக்களும் சேர்ந்து ஆடுவது போன்ற கான்செப்ட், ரொம்பவும் பிடித்தது. அடிச்சான் காப்பி என்பதால் கிரியேட்டிவிட்டிக்கு கிரடிட் கொடுக்காவிட்டாலும், உழைப்புக்கு கொடுக்கலாம்.///
தெலுங்கில் இந்த மாதிரி இருக்காது. கதாநாயகியின் பல உருவங்கள் தோன்றுவது போல இருந்தாலும் தமிழில் உள்ள அளவுக்கு இண்டராக்டிவ்னஸ் கிடையாது. அதுவும் தமிழ் பாடல் காடல் முழுவதும் ஒரே ஷாட். இது போன்று வேறு எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை........
நன்றி நண்பா
மோகன்,
தெலுங்கில் தமிழ் நடிகரை நடிக்க வைத்த மாதிரி, தமிழில் தெலுங்கு நடிகரை நடிக்க வைத்திருக்கலாமே? :-)
வாப்பா ரமேஷ்
CVR,
நான் அந்த தெலுங்கு பாடலை பார்த்ததில்லை. அப்படியே இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதை பார்க்கும்போது, அதை விட தமிழில் பெட்டராக செய்திருப்பார்கள் போலும். அப்படியென்றால் பாராட்டுக்குரியவர்கள் தான்!
santhanam and Vadivelu together acted in film Rendu also. Directed by SundarC and Anushka's first film in Tamil
Post a Comment