சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய ரூபாய் சின்னம் பற்றி அறிந்திருப்பீர்கள்.
இதை உருவாக்கிய உதயகுமார், சென்னையில் பிறந்தவர். பழங்கால தமிழ் எழுத்துமுறைகளில் சில ஆய்வுகளை செய்தவர். செய்துக்கொண்டு இருப்பவர். இந்த ஆய்வுகள், தனது ரூபாய் சின்னத்தின் உருவாக்கத்திற்கு உதவியதாக கூறியிருக்கிறார் உதயகுமார்.
வாழ்த்துக்கள் உதயகுமார்.
இந்த குறியீடு இந்தியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் ஏற்கனவே பழக்கமானதாக இருப்பது போல் அமைந்தது இதன் சிறப்பு.
இந்த புதிய சின்னத்தை, கணினியில் பயன்படுத்த விரைவில் கீ-போர்டு மாற்றங்கள் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். சிலர் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார்கள்.
இதோ இந்த தளம் செல்லவும்.
ஃபாண்ட் டவுன்லோட் செய்யவும்.
உங்கள் கணினியில் ஃபாண்ட் போல்டர் (உ.தா.: மைக்ரோசாப்ட் எக்ஸ்பியில், c:\WINDOWS\Fonts) சென்று, டவுன்லோட் செய்த .ttf பைலைப் போடவும்.
புதிய ரூபாய் சின்னம், உங்கள் கணினியில் பயன்படுத்த ரெடி.
1ஆம் நம்பருக்கு இடதுப்புறம் இருக்கும் ` பட்டனை அழுத்தி, ஃபாண்டை ‘Rupee Foradian’க்கு மாற்றினால், ரூபாய் சின்னம் வந்துவிடும்.
தற்போது, இந்த ஃபாண்ட்டை பயன்படுத்தி வேர்ட் போன்ற மென்பொருட்களில் டைப் செய்யலாம். யூனிகோட் மாற்றங்கள் நிகழ்ந்தப்பிறகு, அனைத்து வலைத்தளங்களிலும் பயன்படுத்த முடியும்.
.
6 comments:
இந்திய ரூபாய்க்கான குறியீட்டு எழுத்துரு சுட்டியைக் கொடுத்ததற்கு நன்றி. நானும் ஒரு வடிவமைப்பை இந்த போட்டிக்கு அனுப்பினேன்.
good one
thanks
அப்படியா சரண்? எங்கே உங்கள் டிசைன்? காட்டுங்கள். காண ஆவலுடன் இருக்கிறேன்.
நன்றி ஸ்மார்ட்
நன்றி ரமேஷ்
Post a Comment