பெயருக்கு ஏற்ப, சிந்தனை செய்து எடுத்த படம். நம்மையும் அவ்வபோது நன்றாக சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.
நான் அவ்வளவாக ஆங்கில படங்கள் பார்ப்பதில்லை. ஆனால், கதைகள் கேட்பேன். இந்த படத்தில் சில காட்சிகளை பார்த்தபோது, இதற்கு முன் கேட்ட ஆங்கில பட கதைகள் நினைவுக்கு வந்தது. உதாரணத்திற்கு, அந்த பேங்க் திருட்டு மற்றும் ரயிலில் வாந்தியெடுக்கும் நாயகி.
ஹீரோ இறுதியில் இறந்துவிடுவார் என்பதை மட்டும் தான் யூகிக்க முடிந்தது. மற்ற அனைத்தையும் இண்ட்ரஸ்டிங்காக செய்திருந்தார் இயக்குனரும் நாயகனுமாகிய யுவன். இவர் எங்கே போனார்?
தமனுக்கு முதல் படம். ரஹ்மான், ஹாரிஸ் பெரிய படங்களுக்கு போடும் சில இசை துணுக்குகளை, தமன் இப்படத்திற்கு வழங்கியிருக்கிறார். படம் பார்த்துக்கொண்டிருந்த போது நடுவில் வீட்டுக்கு வந்தவர், இந்த படத்தில் வந்த ஒரு பிரபலமான பாடலை பாடினார். எனக்கு தெரியவில்லை. சன் ம்யூசிக்கில் லைட்டாக பார்த்த மாதிரியிருந்தது.
ஒருவேளை, யுவன் நடிக்காமல் ஒரளவுக்கு பிரபலமான ஹீரோ யாரையாவது நடிக்க வைத்திருந்தால், படத்தின் ரிசல்ட் பெட்டராக வந்திருக்கலாம்.
---
போன வருஷம், பார்க்க ஆவல் கொண்டு தவறவிட்ட படம் - சிந்தனை செய். பலர் நன்றாக இருந்ததாக சொல்லியிருந்தார்கள். பெங்களூரில், பொதுவாக எல்லா படங்களும் வருவதில்லை. ஆனால், இந்த படம் வெளியாகியிருந்தது. இருந்தும் விட்டுவிட்டேன். எப்பேர்பட்ட படமாக இருந்தாலும், இரு வாரங்களுக்கு மேல் ஓடாது. இது ஒரு வாரத்திற்கு மேல் ஓடியிருக்காது.
இன்று சன் டிவியில் இந்த படம் போடுவதாக, கணேஷ் சொல்லியிருந்தான். காலையிலிருந்தே வேலை இருந்தாலும், ஈவ்னிவ் பார்க்க நினைத்திருந்தேன்.
நான் தற்சமயம் டிவி பார்ப்பதே சொற்பம். இதில் படங்களை முழுவதுமாக பார்த்து, பல நாட்கள் ஆகிவிட்டது. வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, படம் போட்டு இருபது நிமிடம் ஆகியிருந்தது. இருந்தும், பார்க்க துவங்கினேன்.
நடுவே, தெரிந்தவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். சவுண்டை குறைத்துவிட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டே சிறிது பார்த்தேன். ஏழு மணிக்கு சன் நியூஸ் போட்டார்கள். பிறகு, படம் போட்ட பிறகு, யாரோ கதவை தட்ட, வெளியில் கொஞ்சம் நேரத்தை செலவிட்டேன். இப்படி விட்டு விட்டு பார்த்ததில் எந்தளவு படம் புரிந்திருக்கும்? எப்படி தான் வீட்டில் படம் பார்க்கிறார்களோ? (வீட்டில் சன் டிவி ஓடிக்கொண்டிருந்தால், மாற்றி விஜய் டிவி வைப்பதால் ‘சன் டிவிக்கு விரோதி’ என்றொரு பெயர் சம்பாதித்திருக்கிறேன்!)
தவிர, இது ஒன்றும் மோசமான படமாக இல்லாவிட்டாலும், சில காட்சிகளை வீட்டில் உட்கார்ந்து பார்க்க சங்கோஜமாக இருந்தது.
ஒரு நல்ல டிவிடி கிடைத்து, வீட்டில் யாரும் இல்லாமல், யார் தொந்தரவு இல்லாமலும் பார்த்தால் உண்டு. இதற்கு பதில், தியேட்டருக்கு சென்று பார்ப்பதே பெட்டர் என்று தோன்றுகிறது. பார்த்த படத்தை வேண்டுமானால், டைம் பாஸுக்கு திரும்ப டிவியில் பார்க்கலாம்.
'இன்னும் எத்தனை நாள் தியேட்டர்ல போய் பார்ப்ப?’ன்னு அப்படின்னு ஒரு குரலும் எங்கிருந்தோ கேட்கிறது!
.
6 comments:
எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும். மயில்சாமி வரும் சீன சூப்பர். இதுல மச்சி கலக்குரான்னு ஒரு பாட்டு இருக்கும். அதே tune ல ஒரு பாட்டு அய்யனார் படத்துல இருக்கு(இதே பாட்டுல ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க பாட்டும் mixing . கேட்டு பாருங்களேன். நல்லா இருக்கும்)
ஒரிஜினல் படத்தின் பல பாகங்கள் சன் டிவியின் வெர்சனில் காணப்படவில்லை.
சன் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்ட ஒரு பாடல் (நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருந்தது) அதுவும், படத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
பல காட்சிகள் சன் டிவியின் கத்திரிக்குத் தப்பவில்லை. அது சன் டிவியின் கத்திரியா / சென்சாரின் மறு வெட்டா என்பது தெரியவில்லை.
மிடில் பெஞ்ச் மாணவர்களின் முட்டாள் தனங்கள் - ரசிக்கும் படியே இருந்தது.
மற்ற தமிழ் படங்களை ஒப்பிடும்போது இந்தப் படம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் இந்தி 'Johny Gadaar'லிருந்து பல காட்சிகளை அப்படியே உருவி போட்டிருந்தார்கள்
ரமேஷ்,
அந்த பாட்டைத்தான், வீட்டுக்கு வந்த நண்பர் பாடினார்.
டெக் ஷங்கர்,
ஏதும் சங்கடத்தை ஏற்படுத்தும் காட்சிகளா? அப்படி இருக்கும்பட்சத்தில் சன் டிவியின் சென்சாராக இருக்கும்.
மோகன்,
ஓ! அப்படியா?
Post a Comment