கடந்த சில வாரங்களில், யுவன் இசையமைத்து மூன்று திரைப்படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. ரொம்ப வேலை பார்க்கிறாரே?
---
பாண காத்தாடி
முரளி கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டு, தனது பையனை கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறார். பாடல் வெளியிட்டு மேடையில், முரளி தனது படங்களுக்கு இளையராஜாவின் இசை பெரும் பலமாக இருந்தாகவும், அடுத்தக்கட்டத்தில் தனது மகன் ஆதர்வாவின் வெற்றிக்கு யுவனின் இசை உதவும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். பாடல்களை கேட்கும் போது முழு உதவி பண்ணியிருப்பதாக தெரியவில்லை.
ஐந்து பாடல்கள். வழக்கம் போலான யுவனின் இசை. எனக்கு பிடித்தது - சாதனா சர்கம் பாடிய ‘என் நெஞ்சில்’ பாடலும், கார்த்திக் பாடிய ‘ஒரு பைத்தியம்’. ‘என் நெஞ்சில்’ யார் கேட்டாலும், உடனே பிடித்து விடும் ரகம். பாடல் முழுவதும், அருமையான தாளம். கார்த்திக் பாடிய பாடலில், கொஞ்சம் பையா வந்து போகிறான்.
---
காதல் சொல்ல வந்தேன்
நான் நம்பிக்கை வைத்திருக்கும் கமர்ஷியல் டைரக்டர்களில் ஒருவர் - பூபதி பாண்டியன். காமெடியில் வெளுத்து வாங்குவார். தனுஷ், விஷாலை வைத்து முதல் மூன்று படங்கள் இயக்கியவர், அடுத்து விக்ரம் வைத்து ஒரு படம் இயக்க போவதாக பல நாட்களாக செய்தி வருகிறது. இந்த கேப்பில் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் கதை இயக்கி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். கனவு படம் என்று வேறு சொல்லியிருக்கிறார்.
யுவன் தான் இசை. இதுவரை வந்த விளம்பரங்களில், இவர்தான் முன்னிறுத்தப்படுகிறார். யுவன், உதித், கார்த்திக், விஜய் யேசுதாஸ் இவர்களுடன் சிதம்பரம் சிவகுமார் பூசாரியும் பாடியிருக்கிறார். உதித் பாடிய ’ஒரு வாணவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே’ - இந்த ஆல்பத்தில் என்னுடைய பிடித்தது. நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் ஒரு பலமென்றாலும், உதித்தின் உச்சரிப்பை கேட்கும் போது ஜாலியாக இருக்கிறது.
மெட்டுக்காக பாடல் வரிகள் இழுக்கப்படுவதை கேட்க வேண்டுமானால், கார்த்திக் பாடியிருக்கும் ‘அன்புள்ள சந்தியா’வை கேட்கவும். அன்புள்ள சந்தியா, உனை நான் காத...... லிக்கிறேன்.
---
தில்லாலங்கடி
இதிலும் பெரிதாக ஸ்பெஷாக எதுவும் தென்படவில்லை. தெலுங்கு ஒரிஜினலுக்கு தமன் இசை. இதிலும் அவர் இரண்டு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.
சிம்பு பாடிய ‘பட்டு பட்டு பட்டாம்பூச்சி’ பத்திக்கிற வகை. சித்ராவும், ஸ்ரேயா கோஷலும் இணைந்து பாடிய ‘சொல் பேச்சு கேட்காத சுந்தரியே’, யுவன் ஸ்டைலில் இரு தலைமுறையின் இரு இனிமையான குரல்களில் வந்திருக்கும் பாடல். நடுவே வரும் யுவனின் குரல் இசையும் இதனுடன் கூட்டணி போடுகிறது. தோல்வியின் புகழ் பாடும் பாடல் ஒன்று இருக்கிறது, ஷங்கர் மஹாதேவனின் குரலில். மொத்த ஆல்பத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறது, தமன் இசையில் ஸ்ரீ வர்தினியின் ‘இதயம் கரைகிறதே’. ஆனால், தமனின் ‘பூட்ட பாத்ததும் சிரிப்பான்’ பாடலில் தேவிஸ்ரீ நினைவுக்கு வருகிறார்.
சன்னில் படத்தின் விளம்பரத்தை தொடங்கிவிட்டார்கள்.
---
இன்னும் யுவனின் இசையில் நிறைய படங்கள் வரயிருக்கிறது. எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு புதுமையையும், தரத்தையும் கூட்டலாம்.
இப்ப ஒரு யுவன் சம்பந்தமான வீடியோ...
வீடியோவின் இறுதியில், கரகாட்டக்காரன் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தால் எப்படி இருக்கும் என்று இளையராஜாவே சொல்கிறார் பாருங்கள். அட்டகாசம்.
.
7 comments:
சொல் பேச்சு கேட்காத சுந்தரியே’ is my favorite
நல்லா ரசனையா அனுபவிச்சு எழுதறீங்க தொடருங்கள்
wow very very super
music means illayaraja
ரமேஷ், நல்ல பாட்டு தான்...
நன்றி சதீஷ்குமார்
நன்றி சக்திப்ரியா
Post a Comment