ப்ளாக்கரில் வலைத்தளம் வைத்திருப்பவர்கள், இன்று தலையை பிய்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.
உங்கள் பதிவுக்கு ‘இத்தனை’ பேர் பின்னூட்டமிட்டு இருக்கிறார்கள் என்று ப்ளாக்கரின் முதல் பக்கத்தில் கணக்கு காட்டும். என்னவென்று பார்க்க மாடரேட் பக்கத்திற்கு சென்றால், ஒன்றும் இருக்காது.
இப்பிரச்சினை பலருக்கு இருக்கிறது. ப்ளாக்கர் டீம் சரி செய்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது.
பதிவை போட்டுவிட்டு, என்னடா இது யாரும் ஒண்ணும் சொல்லலையே? என்று குழப்பமடையவோ, வருத்தமடையோ வேண்டும். இது உங்க குத்தம் இல்லை. ப்ளாக்கர் குத்தம்.
மறைந்து போகும்/மறைக்கப்படும் பின்னூட்டங்களைப் பார்க்க ஒரு வழி. பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை பார்க்க, மெயில் ஐடியை செட் செய்து வைத்துக்கொள்வது. (Blogger -> Settings -> Comments -> Comment moderation/Comment Notification Email)
சில பதிவுகளைப் பார்க்கும் போது, நல்லவேளை இன்று பின்னூட்டம் வேலை செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது.
தற்போது இப்பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், அவ்வப்போது error என்று பல்லிளிக்கிறது.
.
24 comments:
எனக்கும் இது தான் பிரச்சினை..
சில பதிவுகளைப் பார்க்கும் போது, நல்லவேளை இன்று பின்னூட்டம் வேலை செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது.//
புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி!
தொடருங்கோ!
thank u for point out this problem.
useful information nanba..thanks
ரெண்டுநாளா இந்த பிரச்சனையை நான் சமாளித்த விதம்...ஈமெயிலை அப்படியே பின்னூட்டினேன்..
இன்று பார்த்தால் ரெடி என்று அத்தனை பின்னூட்டமும் பளிச்சென்று பெட்டிக்குள் விழுந்து கிடக்கின்றன.
கூகிள்லே இதெல்லாம் சஜமப்ப்ப்ப்பா என்ற படி ஓட வேண்டியதுதான்
எனக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது. இப்போது சற்று சரியாகி உள்ளது.
உங்களையுமா நாய் கடிச்சிருச்சு. கருப்பா இருந்தா கடிக்காதுன்னு நினைச்சேன்
எனக்கும் இதே பிரச்சனைதான் இப்போ தீர்ந்தது ரொம்ப நன்றிங்க...
யெஸ்ஸு எனக்கும் இப்படித்தான் இருந்து அப்புறம் சரியாகிடிச்சு.
good info
அப்பாடா, தலைகீழா நின்று எழுதியும் ஒரு கமண்டும் வரலையே என்று இனிமேல் கவலைப்பட மாட்டேன், அதேதோ பிளாக்கர் பிரச்சினை என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்ளலாம் :-)
Very gd information Frnd.............
நன்றி தமிழ் மதுரம்
நன்றி சரவணன்
நன்றி Ahamedirshad
ஆமாங்க goma
நல்லது சுப்பையா சார்
என்னாதிது ரமேஷ்? கடிக்காதது தானே பிரச்சினை!
நன்றி குரு
ஒகே புதுகை தென்றல்
நன்றி சசிகுமார்
எப்பூடி, ஹி ஹி...
நன்றி ஜெயராமன்
தலைவா vote buttons எனக்கு வேலை செய்யவில்லை.அத தான் சொல்றிங்களா ??????
தமிழ் குமார், திரட்டிகளின் vote பட்டனை சொல்கிறீர்களா? இது சாதாரணமாக நாம் இடும் பின்னூட்டம் பற்றியது. உதாரணத்திற்கு இதை போல.
Post a Comment