Thursday, June 24, 2010
சில ’புரியல’கள்
வயசு பசங்க, ஒரு வயசு பொண்ணப்பார்த்து, ‘சூப்பர் பிகர்’ என தங்களுக்குள் பேசிக்கொள்வது ஆணாதிக்கமா?
---
தம் அடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசலாமா? கூடாதா?
---
வாதம் செய்கிறேன் என்று வாய்ப்பே கொடுக்காமல் வகுந்தெடுப்பது பாசிசமா? இல்லையா?
---
அவனவன் அவன் வேலையையும், வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொண்டாலே, சமுதாயம் அதுவா முன்னேறும் என்கிறார்களே, உண்மையா?
---
ராவணன் பிராமணன் என்றும் வாசித்திருக்கிறேன். ராவணன் திராவிடன் என்றும் வாசித்திருக்கிறேன். எது உண்மை? இரண்டும் உண்மையா?
---
ராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்?
---
ஹீரோயிச ராவணன், கிளாமர் சீதை, சூழ்ச்சிக்கார ராமன், சரக்கடிக்கும் அனுமர் என இருந்தும் திராவிட நாத்திகர்கள் ஏன் மணிரத்னத்தை ரவுண்ட் கட்டுகிறார்கள்? அதற்கேற்ப காரணங்களை எப்படி பிடிக்கிறார்கள்?
---
முதலாளித்துவம் கெட்ட சொல்லா? முதலாளிகள் அனைவரும் கெட்டவர்களா?
---
நல்ல முதலாளிகள் யார் யார்? அப்படி யாருமே கிடையாதா? நல்ல முதலாளி ஆவது எப்படி?
---
நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் கெட்டவரா? அவர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டே, அவரையோ, அவரை போல சிந்தாந்தம் கொண்டவர்களையோ கெட்ட விதமாக விமர்சிப்பது சரியா?
---
முதலாளிகளையும், அவர்கள் தரும் சம்பளம், இன்னபிற வசதிகளையும் உதறி தள்ளிவிட்டு நியாயம் பேசுவதுதான் சரியாமே?
---
எடுக்கப்படும் சினிமா அனைத்திலும் நியாயமான சமூக அரசியல் தீர்வுகளை எதிர்ப்பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்கு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ எங்கு செல்வார்கள்?
---
பொதுவுடமை பேசும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுகளை முழுதாக ரீடரில் காட்டுவதில்லை?
---
பைரேட்டட் மைக்ரோசாப்ட் மெஷினில், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து, தாராளமயமாக்கத்தை எதிர்த்து கூகிள் ப்ளாக்கரில் பதிவெழுதி, அதையே அடோப் பிடிஎப் பைலாகவும் மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது சரியா?
---
இத்தனை இஸங்களை தெரிந்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களை ரப்ச்சர் பண்ணி வாழ்வது சிறந்ததா? இது பற்றி எதுவும் தெரியாமல் சாதா மொக்கைகளைப் போட்டு ஜாலியாக வாழ்வது சிறந்ததா?
.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
//ராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்?//
விடுங்க பாஸ். இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு பதிலா, போய் பாலகிருஷ்ணா தியேட்டர்ல போய் நல்ல படம் பாருங்க...
மாற்று சிந்தனை கொண்ட சிந்தனை கொண்ட மனிதா ...
சந்தேகம் அறிவை வளர்க்கும் தலைமுடியை இழக்கும் ..
டாஸ்மாக்கில் சரக்கு சாப்டுட்டு வந்து கலைஞர் டிவி ல செம்மொழி மாநாடு பாருங்க சரியாப் போய்டும் ..
எப்பூடீ?
எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க?
ரூம் போட்டு யோசிப்பீங்களோ
சார் பதில் சொல்ல மட்டுமில்ல சார் கேள்வி கேட்கவும் கூட அறிவு வேணும்.
உங்க கேள்விகளில் புலப்படுவது கிண்டல் மட்டுமில்ல உங்க அறியாமையும்தான்...
எனக்கும் தான் புரியல, அதுக்காக சோறு திங்காம இருக்க முடியுமா!
ஃப்ரியா வுடு மாமே!
தல சுத்துதுங்க... எனக்கும் புரியல.
EXCELLENT SIR..
விதண்டாவாதம் மட்டுமே செய்யறவங்க கிட்ட.. இதுக்கெல்லாம் பதில் கெடைக்கும்'ன்னு நம்பறீங்க?
:)
கடைசியா சொன்னீங்களே அந்த மாதிரியே இருந்திடலாங்க... (ய்ய்ய்ய்யப்பா.. .என்னமா கேள்வி கேக்குறாய்ங்க...)
ரமேஷ், நல்லா சொல்றீங்க யோசனை!
என்ன செந்தில், கேள்வி கேட்டா முடி கொட்டும்’ன்னு சொல்றீங்க?
விஸ்வாமித்திரன், இதுக்குலாமா ரூம் போடுறது?
அறியாமையால் கேள்வி கேட்பது சரிதானே? என்ன பதில்?
வால்பையன், எல்லாத்துக்கும் காரணம் சோறுதானா?
வாங்க கருணாகரசு
மணிகண்டன், ம்ஹும்.
வாங்க பாலாசி
நல்லா கேக்குராங்கையா டீடெய்லு ... உஸ்ஸ் ... அப்பா... இப்பவே கண்ண கட்டுதே!
தலைவரே நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதில்தான். தன்னை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ள என்ன வேணும்னாலும் சொல்லலாம் "ஊருக்கு"
Post a Comment