கணேஷ் போன் பண்ணினான். வேலை முடிந்துவிட்டதால், சீக்கிரம் வீடு வந்துவிட்டானாம்.
“சீக்கிரமே வந்து வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்க?”
“செம்மொழி மாநாடு டிவில போட்டுட்டு இருக்காங்க. அதான் பாத்துட்டு இருக்கேன்.”
என்னவோ தெரியவில்லை. கணேஷ் இந்த மாநாடு விஷயத்தில் ரொம்பவும் கவனம் செலுத்துகிறான். இந்த வாரயிறுதியில் கோவை செல்வதாக கூட ஜடியா இருப்பதாக நேற்று சொல்லியிருந்தான்.
வெறுமே ”ம்” என்றேன்.
“ஏன் இத நடத்துறாங்க?”
எனக்கு தெரிந்ததை சொன்னேன். ரெண்டு மூன்று நாட்களாக வாசித்துக்கொண்டிருந்த தமிழ் பெருமைகளையும், இந்த மாநாடு மூலம் நடக்க போவதாக சொன்ன நன்மைகளையும் சொன்னேன்.
“இத யாரு நடத்துறா?”
“நம்ம முதல்வர் தாத்தா தான். இதுவரை இவர் நடத்தியதில்லை. முதல்முறையாக நடத்துகிறார்”. கூடுதல் தகவல்களையும் கொடுத்தேன்.
”மேடையில யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?” டிவி பார்த்துக்கொண்டே கேட்டான்.
“யாரெல்லாம்?”
“மதுரை சிங்கம்.”
“அழகிரியா?”
“ஆமாம். அதுக்கு அப்புறம் தாடி வைச்சுக்கிட்டு ஒரு சிங்!”
“சுர்ஜித் சிங் பர்னாலா.”
“அப்புறம் முக்காடு போட்டுக்கிட்டு ஒரு பாட்டி.”
“ம்”
“நெக்ஸ்ட், நம்ம தாத்தா”
“அப்புறம்?”
“தளபதி”
”ஸ்டாலினா? அடுத்தது என்ன கனிமொழியா?”
“ஆமாம்”
என்னால் நம்ப முடியவில்லை.
“அப்புறம் சன் பிக்சர்ஸ்.”
”என்னது கலாநிதி... ச்சே தயாநிதி மாறனா?”
“ஆமாம்.”
உண்மையை சொல்கிறானா? பொய் சொல்கிறானா? தெரியவில்லை. இப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லவும் முடியாது. ஊர் நிலவரம் அப்படியிருக்கிறது. ஆனால் ஒன்று உறுதியாக சொல்ல முடியும். கணேஷ் இந்த வாரம் கோயமுத்தூர் போகவில்லையாம்.
சண்டே ராவணன் போகலாம் என்றிருக்கிறானாம்.
பின் குறிப்பு - கலைஞர் செய்திகள் பார்த்தபோது, கணேஷ் சொன்னது முழுவதும் உண்மை இல்லை என்று தெரிந்தது. பிற அனைத்து குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணி தலைவர்களும் இருந்தனர்.
.
10 comments:
அந்த மாநாட்டு கூட்டத்துல 60 வது ரோவுல 45-வது ஆளா நான் இருந்தேன். பாத்தீங்களா?
//அந்த மாநாட்டு கூட்டத்துல 60 வது ரோவுல 45-வது ஆளா நான் இருந்தேன். பாத்தீங்களா//
அப்ப நீ தி.மு.க வா ....?
தெரியாத்தனமா நேரில போயி செம அலைச்சல். நிம்மதியா பேசாம ஊட்ல டி.வி.யில நல்லாப் பார்த்திருக்கலாம்.
நான் டமிழன்
s. ganesh sonnathu elam unami than. seriyana kootam. pogave mudiyala. nanga polamnu partha bus kuda ela aparam TV la than parthom
coimbatore erunthutu neradiya paka mudiyala.
ரமேஷ், அப்ப 46வதா யார் இருந்தது?
வாங்க செந்தில்
பக்கத்துல இருக்குறதாலே, போயிட்டு வந்தது பரவாயில்லைங்க கந்தசாமி சார்.
சக்தி, அஞ்சு நாள்ல ஒருநாள் கூடவா போக முடியலை?
nijama poga mudiyala avlo kootam nadanthe evlo thooram porathu.athuku TV -la parthukalamnu vitutom
Post a Comment