வால்மீகியோ, கம்பரோ இருந்திருந்தால் கேஸ் போட்டு ஜெயிக்க முழு வாய்ப்புள்ள வகையில் ராமாயணத்தை, நவீன சினிமா மொழியில் மணிரத்னம் எடுத்திருக்கும் படம் - ராவணன்.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்விராஜ், ப்ரியாமணி, பிரபு, கார்த்திக் - இவர்கள் யாருக்கும் இல்லாத ஆரவாரம் தியேட்டரில் ரஞ்சிதாவுக்கு தான் இருந்தது.
விக்ரம் ஆரவாரத்தோடு நடித்திருக்கிறார். ஆனாலும், இதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதை எப்படி அபிஷேக் செய்திருப்பார் என காண ஆர்வமாக இருக்கிறேன்.
ஐஸ்வர்யாவுக்கு வயதாகிவிட்டது. எந்திரனில் தலைவர்தான் யங்காக இருப்பார் என நினைக்கிறேன். பாவம். இவரை தூக்கி போட்டு பந்தாடியிருக்கிறார் இயக்குனர்.
ராமாயண சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் படம் முழுக்க குறியீடுகளாக வைத்தது சரிதான். அதற்காக, கார்த்திக்கை அனுமனாக காட்டுகிறேன் என்று மரம் மரமாக தாவ விட்டது, சிறுப்பிள்ளைத்தனமாக இருந்தது.
படத்தின் ப்ளஸ்கள் - ஒளிப்பதிவு, இசை, கலை. படத்தின் ஆரம்பத்தில் வரும் ஷாட்கள் உலகத்தரம். உதாரணத்திற்கு, படகிலிருந்து கழுகு பறக்கும் காட்சி, தண்ணீருக்குள் இருந்து தோணியை படகு நொறுக்கும் காட்சி, மரக்கிளையில் இருக்கும் புட்டானை கடக்கும் காட்சிகளை சொல்லலாம். நாம் ஏற்கனவே வேறு படங்களில் பார்த்த இடங்களாக இருந்தாலும், உடைந்த சிலை, மண்டபங்கள் என செட் போட்டு புதியதாக ஒரு உலகத்தை காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர். உடைந்த பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி, நல்ல படமாக்கம்.
உடை வடிவமைப்பும், சில பின்னணி இடங்களும் ஹிந்தி டப்பிங் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. வசனங்கள் சுஹாசினி எழுதியிருந்தாலும், மணிரத்னம் எழுதியது போலத்தான் இருக்கிறது. அல்டிமேட் படங்களில் வருவதை போல, தலை தலை என்று திணிக்கபட்டிருக்கும் வசனங்கள்.
சிடியில் வந்ததை தவிர எக்ஸ்ட்ரா சில பாடல்களை வழக்கம்போல் படத்தில் அமைத்திருக்கிறார் ரஹ்மான். மிரட்டும் இசை. ஏற்கனவே சிலது கேட்ட மாதிரி இருந்தாலும். காற்று, மழை என காட்டுக்குள் ஈரமாக உட்கார்ந்திருக்கும் உணர்வு பல இடங்களில் வருகிறது.
இப்படி தொழில்நுட்ப சைடில் ஸ்ட்ராங்காக இருந்தும், தெரிந்த கதையென்பதால் சீட்டில் அழுத்தி உட்கார வைப்பது சிரமம்தான். வழக்கமாக மணிரத்னம் படங்களில், மற்றதில் இருக்கும் சினிமாத்தனமான காட்சிகளோ, வசனங்களோ இருக்காது. இதில் அப்படி சொல்ல முடியாது. எனக்கு சமீபகாலங்களில் மணிரத்னத்தின் எந்த படமும் முதல் முறை பார்க்கும்போது பிடித்ததில்லை. இதுவும் அப்படியே.
---
"எப்ப பாரு, மகாபாரதம், ராமாயணம்'ன்னே மணிரத்னம் படமெடுக்குறாரே?"
"இல்லாட்டி, ஒரு பையன் - ஒரு பொண்ணு லவ், ஒரு வீரமான ஹீரோ - கெட்ட வில்லன் சண்டை'ன்னு படங்கள் வரும். அதுக்கு இது ஒரு மாற்றம்."
"அதுவும் சரிதான்"
---
.
17 comments:
paathtudalaam
ஐஸ்வர்யாவுக்கு வயதாகிவிட்டது. எந்திரனில் தலைவர்தான் யங்காக இருப்பார் என நினைக்கிறேன்.
//// :-)
அருமை
நல்லாதான் சொல்லிருக்கீங்க. மனிரத்னம் மூவின்னா அது அந்த பிரசண்டேஷனுக்குத்தான கண்டிப்பாக கதைக்காக இல்லிங்க. இது என்னோட கருத்து.
அப்படின்னா ருவா வேஸ்ட் ன்னு சொல்றேள்
தப்பிச்சேன்
//எனக்கு சமீபகாலங்களில் மணிரத்னத்தின் எந்த படமும் முதல் முறை பார்க்கும்போது பிடித்ததில்லை. இதுவும் அப்படியே.
//
சரியா சொன்னீங்க.. நம்ம பார்வையும் இப்படியே தான்..
// ஐஸ்வர்யாவுக்கு வயதாகிவிட்டது. எந்திரனில் தலைவர்தான் யங்காக இருப்பார் என நினைக்கிறேன். "
இது உங்களுக்கே ஓவரா தெரியல.
இத விட கொடுமை ஒரு நிழல் ஹீரோவை தலைவர் என்பது தான்.
நடத்துங்க...
//
எந்திரனில் தலைவர்தான் யங்காக இருப்பார் என நினைக்கிறேன்.
//
இது உங்களுக்கே ஓவரா தெரியல.
ஒரு நிழல் ஹீரோவை தலைவர் என்பது தான்.
ஒன்னு தெரிஞ்சிக்கங்க. நம் எல்லோருக்கும் தலைவர் மழை தான்.
அது மட்டும் இல்லைன்னா கொஞ்சம் நினைச்சி பாருங்க.
இனிமே, எந்த நிழல் ஹீரோவையும் தலைவர் னு சொல்லாத.
இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.
அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?
சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.
இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?
nice review !
Read mine here!
Expecting ur feedback!
Raavanan-Ten heads but no brain!
http://theumeshblog.blogspot.com/2010/06/raavanan.html
ரமேஷ்,
பார்த்துட்டீங்க போல...
நன்றி இராமசாமி கண்ணன்
அப்படியெல்லாம் நான் சொல்லலீயே subra...
நன்றி லோஷன்
கே கே சாமி, சும்மா ஒரு ஜாலிக்கு சொல்றது தான்.
போராட்டம் பண்ணியிருப்பார்.
umesh, உங்களுடையது படித்தேன். நன்றாக இருந்தது.
படம் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது, படத்தில் நடிகர்கள் முதல் தொழில் நுட்பக் கலைஞர்கள் வரை தங்கள் பங்கு என்று ஏதாவது செய்திருக்கிறார்கள்...மணிரத்னத்தை தவிர... வசனம் அதுக்கு மேல...
Post a Comment