ஹரி தனது மசாலா பார்முலாவில் இருந்து சிறிதும் அச்சு பிறழாமல் எடுத்திருக்கும் கார காவியம் தான் - சிங்கம். சில நாட்களுக்கு முன்பு எழுதிய ஹரி பற்றிய பதிவைப் பார்த்தால் தெரியும். அப்படியே இருக்கிறது.
கிட்டத்தட்ட அனைத்துக்காட்சிகளுமே, ஏதோவொரு ஹரி படத்தில் பார்த்ததுபோல் தான் இருக்கிறது. ஆரம்பக்காட்சி ‘ஐயா’வை, தொடங்கி இறுதிக்காட்சி ‘ஆறு’, ‘சாமி’ வரை. படத்தின் இரண்டாம் பாதியை விட, முதல் பாதி எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக, சூர்யாவுக்காக ஊர் மக்கள் பிரகாஷ்ராஜுடன் சீறும் காட்சி. இதிலும் பேருக்கு சில காட்சிகள் தூத்துக்குடியில் எடுத்துவிட்டு, காரைக்குடி சென்றுவிட்டார். அந்த பாண்டியன் தியேட்டர் எந்த ஊரு?
சூர்யா படம் முழுக்க விறைத்துக்கொண்டு, நரம்பு புடைக்க சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆக்ரோஷ வசனங்கள் பேசி, மனித சிங்கமாகவே சீறுகிறார். இப்படிபட்டவருக்கு அனுஷ்கா அறிவுரை சொல்லி, வீரம் வருவது கொஞ்சம் ஓவர். சூர்யா-அனுஷ்கா ஜோடிக்காட்சிகளில் அவர்களின் உயர இடைவெளி சமாளிப்பைப் பார்ப்பதிலேயே நேரம் போய்விடுகிறது. அனுஷ்காவின் தங்கையாக வருவது, விஜய் டிவி கனா காலங்களில் வருபவரா?!!!
விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிறிது சிரிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க கெட்ட வார்த்தைகளை இவர் பேசாமல், படம் பார்க்க வந்தவர்களை பேச வைத்திருக்கிறார். பத்மஸ்ரீக்கு நல்லா பெருமை சேர்க்கிறார்.
தகவல்கள் சேர்த்து சேர்த்து வசனங்களை அமைத்திருப்பதால், ஹரி நிறைய இடங்களில் கைத்தட்டல் பெற்றார். உதாரணத்திற்கு, பேசியே நிழல்கள் ரவியை ரோட்டுக்கு தள்ளி வரும் காட்சி. ‘ஒன்றரை டன் வெயிட்’ வசனத்தை டிவியில் போடாமல் இருந்திருந்தால், இன்னும் வெயிட்டாக இருந்திருக்கும்.
படமெடுத்துக்கொண்டிருக்கும் போது, இது சாமி மாதிரி இருக்குமா, காக்க காக்க மாதிரி இருக்குமா? என்று கேட்டதற்கு புது மாதிரியாக இருக்கும் என்றார்கள். இது சாமி மாதிரி தான். ஒரு தேவையில்லாத என்கவுண்டர் காட்சி மட்டும் 'காக்க காக்க’வை நினைக்க வைத்தது.
வருஷம் பூரா மசாலா படங்கள் வந்தாலும், ஹரி படங்கள் மட்டும் எப்படி ஒரளவுக்கு எடுபடுகிறது என்று யோசித்து பார்த்தால், அவர் வைக்கும் குடும்பக்காட்சிகள், கொஞ்சம் புத்திசாலித்தனமாக அமைக்கும் ஆக்ஷன் காட்சிகள் காரணங்களாக தெரிகிறது. ஆக்ஷன், காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட், பாடல்கள் என்று வழக்கம்போல் எல்லா மசாலாவும் இதிலும் இருக்கிறது.
கிளைமாக்ஸில் ஹீரோவுக்கு கோபம் தலைக்கேறி வில்லனைப் போட்டு தள்ளுவதற்கு காரணமாக, ஹீரோ சைடில் ஒரு கேரக்டரைப் போட்டு தள்ளுவார். இதில் ஹரிக்கு அப்படி மாட்டியிருப்பது - போஸ்.
கிளைமாக்ஸ் பெரிதாக இம்ப்ரஸ் செய்யாவிட்டாலும், மாஸ் எண்டர்டெயின்மெண்ட் ரசிப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.
.
18 comments:
சாமீ படம் பார்த்தாச்ச... சாரி சிங்கம் பார்த்தாச்ச கேட்டேன்
பாக்கணுமா பாஸ்?
இன்றுதான் நானும் படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது படமும் உங்களின் விமர்சனமும் . பகிர்வுக்கு நன்றி
படம் பார்க்கணுமா? வேணாமா?
நண்பரே,
இன்று நடிகை ஜோதிகாவின் புருஷனாகிய சூர்யா நடித்த "சிங்கம்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை சிங்கத்தை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.
சிங்கம் - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்
ஏஏஏய்ய்ய்.................! படம் தானா? ஆறுதலா நெட்ல பாத்துக்கலாம்.
விமர்சனம் அருமை. படம் பார்க்க வேண்டும்.
surya than punch pesam erunthar avaraiyum pesa vechutangale oh goddddddddd
//அந்த பாண்டியன் தியேட்டர் எந்த ஊரு?//
அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே...காரைக்குடிக்கு போயிட்டாருன்னு. அந்த ஊர் தியேட்டர்தான்.
singam suryakku asingam
சௌந்தர்,
சாமி படம் ஸாரி சிங்கம் படம் பார்த்தாச்சு!
பார்க்கலாம், ரமேஷ்
நன்றி சங்கர்
அப்துல் காதர், அது உங்கள் டேஸ்டைப் பொறுத்தது. மசாலா படம் பார்க்க பிடிக்கும் என்றால் பார்க்கலாம்.
நன்றி காமிக்ஸ் ரசிகன்
நன்றி சரவணக்குமார்
நன்றி சரண்
அப்படியா வித்யாசாகர்?
Post a Comment