பசங்களை விட பொண்ணுங்க நல்லா படிப்பாங்க என்பது உலக நியதியாகிவிட்டது. பெங்களூரிலும் தான். இங்கு பத்தாவதிற்கு பிறகு பியுசி. இதற்கான கட்-ஆப் மார்க்கை கல்லூரிகள் முடிவு செய்வதற்கு, எங்கு ரூம் போட்டு யோசித்தார்கள் என்று தெரியவில்லை. பையன்களை விட பொண்ணுகளுக்கு கட்-ஆப் மார்க் அதிகம் வைத்துவிட்டார்கள். ஒரு பெண்ணை விட, ஒரு பையன் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவனுக்கு இடம் கிடைத்துவிடும். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பசங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க மாட்டேங்கிறதாம்.
பசங்களா, மார்க் அதிகம் வரலை’ன்னு வருத்தப்பட வேண்டாம். உங்களுக்காக, திட்டமிட இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.
---
பெங்களூர் மடிவாளா ஐயப்பன் கோவில் அருகே அண்டர் பாஸ் அமைக்கிறார்களாம். திடீரென அந்த வழியை அடைத்துவிட, இன்று அந்த ஏரியா முழுக்க ட்ராபிக் ஜாம். இரண்டு கிலோமீட்டரை சர்வ சாதாரணமாக இரண்டு மணி நேரம் எடுத்துக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு வழிப்பாதையாக இருந்த மடிவாளா மார்க்கெட் சாலையை, இரு வழியாக மாற்றும்போதே மைல்டாக டவுட் வந்தது.
இன்று க்ளியர் செய்து விட்டார்கள். அந்த பக்கம் போகும் ஐடியா இருந்தால், மாற்றுக்கொள்ளுங்கள். குறைந்தது, மூன்று மாதத்திற்கு.
---
இந்த வாரயிறுதியில், பெங்களூரில் எஸ்.வி.சேகரின் ‘ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி’ நாடகமும், ’வால் பையன்’ நாடகமும் நடைபெறுகிறது.
மேலும் விவரங்கள் மற்றும் டிக்கெட் புக் செய்ய, இங்கு செல்லவும்.
.
10 comments:
ஐ மூணு மாசத்துல சரி செஞ்சிருவாங்களாக்கும். குறைஞ்சது ஒரு வருசமாவது ஆகும்.
thamizh manathula sethu ottu pottutten.
பெங்களூரு அப்டேட்ஸ் நல்லாயிருக்கு நணபா.
அது அப்படி தான், முகிலன். ஆனால், நேற்று காலை நிலவரத்தை விட இரவு பரவாயில்லை என்று சொன்னார்கள். ஏதாச்சும் செய்து, போக்குவரத்து நெரிசலை சரி செய்துவிடுவார்கள் என நினைக்கிறேன். அட்லீஸ்ட், அந்த பக்கம் போகாதீங்க என்று அறிவிப்பு கொடுத்தாவது.
நன்றி முகிலன் - இணைப்பிற்கும், ஓட்டிற்கும்.
நன்றி சரவணக்குமார் நண்பா
பெங்களூரு ! அட நம்ம தலைவர் ஊரு, கலக்குங்க.
மடிவாளா தகவலுக்கு நன்றி.
//ஐ மூணு மாசத்துல சரி செஞ்சிருவாங்களாக்கும். குறைஞ்சது ஒரு வருசமாவது ஆகும்.//
மந்திரப் பொட்டி டெக்னாலஜியா?
வாங்க எப்பூடி...
தெரியலையே கோரமங்களாவாசி
Post a Comment