இந்த ஊர் கும்பகோணம் பக்கத்தில் இருக்கிறது. சுவாமிமலையில் இருந்து நடந்து போகும் தூரத்தில். இப்படி ‘நடந்து போகும் தூரத்தில்’ என்று சொல்வதற்காகவோ என்னவோ பஸ் இருந்தும் ஒரு புண்ணிய ஆத்மா என்னை நடத்தி கூட்டி சென்றது!
காவிரி இந்த ஊர் பக்கத்தில், வலதுபுறம் சென்று திரும்புவதால், இந்த ஊருக்கு இப்படி ஒரு பெயராம். இந்த கோவிலில் இருக்கும் விநாயகரின் தும்பிக்கையும் வலது பக்கமாக இருக்கிறது.
இந்த ஊர் பிள்ளையார் வெள்ளை நிறத்தில் இருக்கிறார். பாற்கடல் நுரையால் உருவான பிள்ளையார் என்பது அதற்கான புராணக்கதை.
கோவிலில் கூட்டமே இல்லாததால், ரொம்ப அமைதியாக இருக்கிறது. எப்போதுமே கூட்டம் வருவதில்லை போலும். ஆனால், கோவில் பெரிய கோவில். சோழர் காலத்துக் கோவில்.
ஐந்து அடுக்கு கோபுரம், ஐந்து பிரகாரங்கள், நுண்ணிய கலைநயத்துடன் கூடிய தூண்கள் என கோவில் அழகாக இருக்கிறது. பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
ஒரே கல்லில் செய்யப்பட்ட ஜன்னல் போன்ற சிற்பங்கள், இக்கோவிலின் மற்றொரு சிறப்பு.
கும்பகோணம், சுவாமிமலை போய்விட்டு, இங்கு போகாமல் வந்துவிடாதீர்கள்.
ஊர் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் இருக்கிறது. ரொம்ப சின்ன ஊர் தான். கொஞ்சம் மனிதர்களும், ஒரு யானையும் தான் இருக்கிறது. கோவிலுக்குள் ஒரு பசுவையும் பார்த்தேன்.
.
21 comments:
நானும் இந்தா கோயிலுக்கு போயிருக்கிறேன் நண்பா.
புகைப்படங்களைப் பார்க்கும்போதே இந்தக் கோவிலுக்குச் செல்லும் ஆர்வம் அதிகரிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
ஹய்யோ, அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க? போன வருஷம் வெக்கேஷன்ல நாங்க கும்பகோணம் பக்கத்துல இருக்கற முக்காவாசி கோவில்களுக்கு போயிட்டு, நாச்சியார் கோவில் எல்லாம் பார்த்துட்டு வண்டியைத்திருப்பினப்போ ட்ரைவர் சொன்னாரே.. அருமையான கோவில் இருக்கு. பாருங்கன்னு. நாங்க தான் நேரமாச்சுன்னு வந்துட்டோம். இவ்ளோ அருமையான கோவிலையா மிஸ் பண்ணி இருக்கோம்? ச்சே.. என்ன ஒரு முட்டாத்தனம்.. பொழைச்சுக்கிடந்தா அடுத்த வருஷ வெக்கேஷன்ல பார்க்கணும். அருமையான படங்களுக்கு நன்றி. பிள்ளையாரப்பனை பத்தி வேற ஒண்ணுமே சொல்லலையே?
//ஐந்து அடுக்கு கோபுரம், ஐந்து பிரகாரங்கள், நுண்ணிய கலைநயத்துடன் கூடிய தூண்கள் என கோவில் அழகாக இருக்கிறது. பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.//
அதே! அதே :)
வாவ் திருவலஞ்சுழி அழகான ஊரு அழகான கோவில் அக்கம் பக்கம் அழகான ஆறுகள் பசுமை கொஞ்சும் வயல்வெளிகள் + வாழைத்தோட்டங்கள் ! ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :)) எப்பவுமே லீவுக்கு ஊருக்கு போறப்ப கண்டிப்பா சுவாமிமலை டிரிப்பு உண்டு :)
//சுவாமிமலையில் இருந்து நடந்து போகும் தூரத்தில். இப்படி ‘நடந்து போகும் தூரத்தில்’ என்று சொல்வதற்காகவோ என்னவோ பஸ் இருந்தும் ஒரு புண்ணிய ஆத்மா என்னை நடத்தி கூட்டி சென்றது!/
அட அங்கே நடந்து போயி ரசிக்கறதுல இருக்கிறது தனி சுகம் பாஸ் அதான் அந்த புண்ணியத்மா அப்படி செஞ்சிருக்காங்க அவுங்கள போயி குறை சொல்லிக்கிட்டு....! :))
//ஊர் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் இருக்கிறது///
தாராசுரம் ஸ்டாப்பிங்க் சுவாமிமலை போற ரோட்ல இறக்கிவிடச்சொன்னா பஸ்ஸுக்காரங்க நிப்பாட்டாம போவமாட்டங்கோ:)
தாராசுரம் பஸ் ஸ்டாப்புலேர்ந்து ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் கிட்டத்தில இருக்கு இந்த கோவில்
தாராசுரம் பக்கம் ஒரு கோவில் இருக்கே அங்க கண்டிப்பா போயிருக்கணுமே? :)
சுறாவப் பத்தியும் எழுதுறிங்க.. சுவாமிமலை பத்தியும் எழுதுறிங்க..
யாருங்க நீங்க??
காவிரி தமிழ் நாட்டில் நுழைவதிலிருந்து வங்கக்கடலில் கலப்பது வரை
மேற்கிலிருந்து கிழக்காகவே பாயும்,, ஒரு சில இடங்களை தவிர..
தஞ்சைக்குள் நுழைந்த பிறகு, காவிரி பெருநதியைத்தவிர
இன்னும் ஐந்து கிளை நதிகளாக பிரிகிறது..
(வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு, குடமுருட்டி)
சுவாமிமலைக்கும், திருவலஞ்சுழிக்கும் இடையில் காவிரியும், அரசலாறும் காணலாம்
காவிரிக்கு இணையாகவே மேற்கினின்று கிழக்காக வரும் அரசலாறு, மீண்டும்
சுழித்துக்கொண்டு மேற்கு நோக்கி பாயும் ஒரு அற்புத இடம் திருவலஞ்சுழி.
நீங்கள் சொன்ன பிள்ளையார், ஸ்வேதவிநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
இறைவன் கபர்தீஸ்வரர் என்கிற செஞ்சடைநாதர், இறைவி ப்ருஹன் நாயகி என்கிற பெரிய நாயகி.
(இந்த சமஸ்கிருதப்பெயர்களின் தமிழ் பெயர்ப்பு, இத்தகைய கோவில்களில் இன்னும் சுவாரஸ்யமானது.
சிதம்பரம் அண்ணாமலை நகர், சற்குணாம்பாள் - நல்லநாயகி
சேலம் சுகவனேஸ்வரர் கோவில், ஸ்வர்ணாம்பிகை - திருச்செம்பொன்நாயகி..!!)
பக்தியை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டாலும், நுழைந்தவுடன் தென்னந்தோப்பின் குளுமையும்,
கொட்டியும் ஆம்பலும் மலர்ந்து நிற்குமொரு குளமும், கோடையில் காய்த்து குலுங்கும்
மாமரங்களும், பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் தவிக்கும் குருக்கள் உங்களை கண்டதும்
எதையுமே எதிர்பாராமல் இன்முகத்துடன் விளக்கும் ஸ்தலப்புராணமும் உங்கள் விடுமுறையை
அர்த்தமுள்ள தினமாக மாற்றுவது உறுதி...
உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்..!!
அன்புடன் நண்பருக்கு வணக்கம் திருவலஞ்சுழி கட்டுரை படங்களுடன் மிக்க அருமை. சிறுது அந்த ஸ்தல புராணமும் சேர்த்து எழுதுங்களேன் என்போன்றவர்களுக்கு தரிசித்து போல் இருக்கும். வினாயகரில் ஆரம்பித்து நவக்ராஹங்களில் வரை தொடர்ந்து கடைச்யாக ..பழனி இல் முடிங்கள் ...இதில் திருவலன்சுழி ஆரம்பித்து வரிசையாக சுவாமி திருவிடைமருதூர் ,திருவாவடுதுறை அம்பிகை ,தொடருங்கள்....அன்பரே...
நன்றி ரமேஷ்...
நன்றி சரவணக்குமார்
அநன்யா, அச்சச்சோ? சரி, கூடிய சீக்கிரம் பார்ப்பீங்க...
பிள்ளையார பத்தி கீழே நண்பர் மகேந்திரன் கூறியிருக்கிறார். பாருங்க.
வாங்க ஆயில்யன்.
கரெக்ட்டு, புண்ணியாத்மா செஞ்சது கரெக்ட்டு தான்.
//தாராசுரம் பக்கம் ஒரு கோவில் இருக்கே அங்க கண்டிப்பா போயிருக்கணுமே? :)//
போகாமலா?
பதிவு... போட்டாச்சு! போட்டாச்சு! :-)
விரிவான தகவலுக்கு நன்றி மகேந்திரன்.
நன்றி hamaragana.
அட டா. இந்தக் கோவிலைப் பார்கலையே. சுவாமி மலை, பட்டீஸ்வரம், பக்கத்திலே ஒரு கோவில் பேர் மறந்து போச்சு பார்வதி ஜ்வாலையாக இருக்கும் சிவனை அனைத்துக் கொண்டு இருந்தாள். இங்கு போய் விட்டு தாராசுரம் போகும் போது நடை சார்த்தப் பட்டு விட்டது. திருவலஞ்சுழி ரம்பா அழகா இருக்கே. அடுத்த முறை கண்டிப்பா பார்க்கணும்
நன்றி
http://www.virutcham.com
திருவலஞ்சுழி அழகான கோவில் தர்சித்தேன். நன்றி.
விருட்சம், அடுத்த முறை கண்டிப்பா போங்க.
நன்றி மாதேவி
படங்கள் அருமையா இருக்கு.
ஸ்வேத விநாயகரைத் தரிசிச்சதை இங்கே இந்தச் சுட்டியில் நாலுவரி எழுதி இருக்கேன். நேரம் இருக்கும்போது பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-6.html
தூணையெல்லாம் நேராக வைத்த புண்ணியவான் தரைக்கற்களை மட்டும் கோணலாக போட ஏதாவது காரணம் இருக்குமா? அல்லது அவையெல்லாம் சமீபத்தில் போடப்பட்டவையா? அப்படித்தான் இருக்கும்.
Post a Comment