முதலாவதோ, இரண்டாவதோ படிக்கும் போது சென்றது. அதன் பிறகு, தஞ்சைக்கு இப்போது தான் செல்கிறேன்.
நான் சென்ற தினம், நல்ல கூட்டம். எல்லாம் பக்தி வரவழைத்த கூட்டம்.
கோவில்கள் வெறும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. முக்கியமாக, நம்முடைய முன்னோர்களின் திறமையை பறைசாற்றும் சின்னங்கள்.
நிறைய சிறப்புகளை கொண்ட கோவில் இது. உயரமான கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி, தரையில் விழாத கலச நிழல் என.
இது போட்டோ ஷாப்பில் மெருகேற்றிய புகைப்படம்.
கோவிலில் நூதனமுறையில் இளநீர் சுமந்து செல்லும் ஒருவர்.
மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுதுறையின் வசம் இருப்பதால், கோவில் சுத்தமாக இருக்கிறது. புல் தரையில் மல்லாந்து படுத்து கிடந்து, கோபுரத்தை பார்ப்பதில் என்னா சுகம்?
கோவிலின் கோபுரத்தில் ஏறிய அனுபவத்தை ஒருவர் இங்கு பகிர்ந்திருக்கிறார். பாருங்கள்.
.
15 comments:
நம் பாட்டன் கட்டிய கோவில்
நானும் போயிருக்கேன். இந்த கோயில்தான விஜயகாந்தின் பதவி பிரமாணம் படத்தில் வரும்.
ஒரு சிறந்த பதிவு... நானும் எனது பால்ய காலத்தில் சென்ற பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனது நண்பர் ஒருவருடன் சென்றேன்.... காலத்தால் அழிக்க முடியாத நமது வரலாற்று சான்று... பிரமிக்க வைக்கும் கட்டிட கலையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே உலகிற்கு உணர்த்திய கோவில் இது... உங்களது புகைப்படங்கள் அருமை நண்பரே...
தரையில் விழாத கலச நிழல்
சரவணன்! திருத்தி கொள்ளுங்கள்! கலச நிழல் தரையில் விழும்!
மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுதுறையின் வசம் இருப்பதால், கோவில் சுத்தமாக இருக்கிறது.
100% உண்மை
தஞ்சை கோபுரத்தோட சிறப்பே கலச நிழல் விழாதது தான். இது எப்படி முடிந்தது, ராஜா ராஜா சோழன் இந்த கோபுரம் கட்டும் போது ஒரு பெண் மார்பகம் காம்பு[ தவறாக நினைக்க வேண்டாம்] நிழல் விழாத அந்த திசையில் கட்டியது இந்த கோபுரம். ராஜா ராஜா சோழன் கோபுரம் கட்டிய புத்தகத்தில் படித்தது. நன்றி கவிதா தஞ்சை
@Manion
தயவு செய்து தஞ்சை கோபுர வரலாற்றை படிக்கவும்,பெரிய கோவில் மற்ற சிறப்பை படிக்கவும்.
கவிதா தஞ்சை
மன்னிக்கவும் சரவணன்,
மன்னிக்கவும் தஞ்சை கவிதா,
கோபுர கலச நிழல் தரையில் விழாது.
கோபுர நிழல் தரையில் விழும்.
என் தவறான கருத்துக்கு வருந்தகிறேன்.
இது வரை தவறாக புரிந்துகொண்டேன்.
தவறை உணர்த்தியமைக்கு நன்றிகள்!
இராசராச சோழன் மன்னிப்பாராக!
நன்றி செந்தில். அப்படி தான் எல்லோரும் நினைக்கணும்.
அப்படியா, ரமேஷ்?
நன்றி கார்த்தீஸ்வரன்
நன்றி Manion
நன்றி கவிதா
எனது நீண்ட நாள் ஆசையை வெறியாக மாற்றியமைக்கு மரியாதைக்குரிய நன்றிகள்
எனது நீண்ட நாள் ஆசையை வெறியாக மாற்றியமைக்கு மரியாதைக்குரிய நன்றிகள்
நன்றி மருதா
Post a Comment