கொற்கை, பாண்டிய ராஜ்யத்தின் துறைமுக நகரம் என்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவரும் பாடப்புத்தகம் மூலம் படித்திருப்போம்.ஆனால் எத்தனை பேருக்கு அந்த ஊரின் தற்போதைய நிலை தெரியும்? கொற்கை, தற்போது ஒரு சிறிய கிராமம். நான் சிறு வயதில் இருந்து, பல முறை அந்த ஊருக்கு அருகே வரை சென்றிருக்கிறேன். ”கொற்கை - 3 கி.மீ.” என்று எழுதியிருக்கும் பலகையை பலமுறை கடந்தும், அந்த ஊருக்கு இதுவரை சென்றதில்லை.
சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அந்த 3 கி.மீ. போர்ட்டை கடக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை கண்டிப்பாக அந்த ஊரில் என்ன தான் இருக்கிறது? என்று பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
போன வேலையை முடித்துவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். எங்கே என்று கேட்டவர்களிடம், கொற்கை என்றால், அங்கு என்ன இருக்கிறது? என்பது பதில் கேள்வியாக இருந்தது. ”பழைய காலத்து ஊராச்சே, என்ன இருக்கிறது என்று பார்க்க போகிறேன்” என்றால், “அங்கு ஒன்றும் இல்லை” என்பது பதிலாக இருந்தது. இருந்தாலும், போகாமல் சும்மா இருக்க பிடிக்கவில்லை. அப்படி என்ன தான் அங்கு ஒன்றும் இல்லை என்று பார்க்க கிளம்பிவிட்டேன்!
---
கொற்கை முன்பு துறைமுகமாக இருந்தாலும், இன்று கடல் பக்கத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது எப்படி துறைமுகமாக இருந்தது என்பது என் பழைய ஆச்சரியம். இணையத்தில், தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களை வாசித்தப்போது சிறிது புரிந்தது. எவ்வளவு மாற்றங்கள்? இன்னும், எவ்வளவு மாறுமோ?
முன்பு, கொற்கை பக்கமாக தாமிரபரணி பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்று ஆறும் இல்லை. கடலும் இல்லை. ஆனால், ஊரில் எந்த இடத்தை தோண்டினாலும், கடல் இருந்ததற்கு அத்தாட்சியாக சிப்பிகள், சங்குகள் கிடைக்கிறதாம்.
---
போகும் வழி, வாழைத் தோட்டங்களால் நிறைந்திருந்தது. மண் வாசம் அருமையாக இருந்தது. கொற்கைக்குள் வந்துவிட்டேன். வழக்கமான கிராமமாகத்தான் இருந்தது.
ஒரு பெரியவர் அருகே சென்று நிறுத்தி விசாரித்தேன். அவர் சொன்னது,
“பழைய காலத்து அம்பு, வில், பானை பொருட்களை காட்சிக்கு வைத்து காட்ட ஒரு இடம் இருந்தது. ஒரு ஆபிசரும் இருந்தார். ஆனா, இப்ப கொஞ்ச நாள் முன்னாடி, யாரும் இங்கு வருவதில்லை என்பதால் அது திருநெல்வேலிக்கு இடம் மாறியது. இப்ப, இங்க எதுவும் கிடையாது. கொஞ்ச தூரம் போனா, ஒரு பழைய பிள்ளையார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான்.”
அந்த கோவிலுக்கு வண்டியை விட்டேன். சின்ன கிராமத்து சாலை. இடது பக்கம், வழக்கம் போல் வாழைத்தோட்டம். வலது பக்கம், நீர் இல்லாத குளம் போல் இருந்தது.
சிறிது தூரத்தில், வாழைத்தோட்டத்துக்கிடையே, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும்வாறு, ஒரு சிறிய வளைவு இருந்தது. அதில் “பழமையான கொற்கை அக்காசாலை ஸ்ரீஈஸ்வரமுடையார் திருக்கோவில் விநாயகர் ஆலயம்” என்று எழுதியிருந்தது. இதிலேயே ‘பழமையான’ என்று எழுதியிருந்தாலும், இந்த வளைவே ரொம்ப பழமையாக இருந்தது! வளைவின் இரு பக்கமும் பாண்டிய ராஜ்ஜியத்தின் சின்னமான மீன் இருந்தது.
உள்ளே இருந்த கோவில், மதிய நேரமென்பதால் சாத்தியிருந்தது. சிறிய கோவில் தான்.
வாசல் முன்பு, தோட்டத்தில் வேலை செய்பவர்கள், மதிய உணவருந்திக்கொண்டிருந்தனர். பிரதான வாசல் மூடியிருந்தாலும், வலது பக்கம் கோவில் வளாகத்திற்குள் நுழைய ஒரு வழி இருந்தது. இதை முன்னால் இருந்தவர்கள் சொன்னார்கள்.
ஏரியாவே அமைதி. கோவிலுக்குள் இன்னமும் அமைதி. பசுமை சூழ்ந்த ஒரு கோவிலுக்குள், அமைதியான சுழலில் நான் மட்டும். புராதன கோவில் என்று சொல்ல முடியாது. சிறியதாக இருந்ததை சுற்றி எழுப்பியிருக்கலாம். முன்பக்க சுவர் முழுக்க, கல்வெட்டுக்கள்.
பின்புறம் ஒரு பாதி மரம் இருந்தது. கேட்க கேள்விகள் நிறைய இருந்தாலும், பதில் சொல்ல ஆளில்லாததால், கேள்விகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன்.
---
திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு பாட்டி வந்துக்கொண்டிருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசினேன். அவர் குளம் போல் இருந்ததை காட்டி, இது தான் பாண்டிய காலத்தில் தோணித்துறையாக இருந்ததாக நம்பிக்கை என்றார்.
அதனுள் ஒரு கோவில் இருந்தது. அம்மன் கோவில். பாட்டி இந்த கோவிலும் பழமையானது என்றார். ஆனால், பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. நான் போன நேரம், இந்த கோவிலும் பூட்டி கிடந்ததால், உள்ளே செல்ல முடியவில்லை.
கோவில். கோவிலைச் சுற்றி தண்ணீர் இல்லாத குளம். ஒரு பெரிய மரம். மரத்தடியில் பெண்கள் கூட்டம் ஒன்று உட்கார்ந்து ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள். மரம் என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த ஊரில் 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு வன்னி மரம் இருப்பதாக படித்திருக்கிறேன். ஆனால், அதை நான் பார்க்க, கேட்க மறந்துவிட்டேன். ஒருவேளை, பார்த்திருக்கலாம். வன்னி மரம் எதுவென்று தெரியாததால், உறுதி செய்ய முடியவில்லை.
---
”என்னடா, கொற்கை பார்த்தியா? என்ன இருந்துச்சு?”
“முன்ன, ஒரு ஆபிசரும் பழைய காலத்து பொருட்களும் வச்சிருந்தாங்களாம். இப்ப, யாரும் வருறது இல்லன்னு, திருநெல்வேலிக்கு கொண்டு போயிட்டாங்களாம்.”
“ஆமா! இப்ப யாரு அதையெல்லாம் பாக்குறா? தமன்னா வந்திருக்கா’ன்னு சொல்லு, எங்கிருந்துனாலும் ஓடி வருவானுங்க!”
---
செல்லும் வழி - தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறினால், முக்காணியில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். இங்கிருந்து ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் இருக்கும். மினி பஸ் இருக்கும் என நினைக்கிறேன். முக்காணி வழியில் ஏரல் செல்லும் பஸ்ஸில் ஏறினால், உமரிக்காடு என்னும் ஊரில் இறங்கி செல்லலாம்.
.
31 comments:
Korkai enbathu tharkala Thothukudi endru kelvipattirukiren. Athu unmai illaya?
கொற்கை பாண்டியன் னு கூட ஒருத்தர் இருந்ததா படித்த ஞாபகம். உண்மையில் அருமையான பதிவு.
எண்ணி பார்க்கையிலே தான் தெரிகிறது நம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்று.
SUPER SIR
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN
superb stills. romba nalla iruku unga blog.
Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips
நேர்ல பாத்தா மாதிரியே ஒரு பீலிங் பா
நவ நாகரீக உலகில் இதைபற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை!!! இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்... தமன்னாவை பற்றி நினைக்கும் நம் இளைய தலைமுறை நமது கலாச்சாரத்துக்குரிய விசயங்களை யோசிக்க மறந்துகொண்டு இருக்கிறது... தங்களின் எழுத்து நடை அருமை.... இன்னும் இதுபோன்ற அரிய தகவல்களுக்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள் நண்பரே...!!!
Madhav,
கொற்கை வேறு, தூத்துக்குடி வேறு. துறைமுகமாக கடலோரத்தில் இருந்த கொற்கை, பூகோள மாற்றங்களினால், தற்போது நிலப்பரப்பினுள் வந்துவிட்டது.
தற்சமயம், தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் தான், கொற்கை.
நன்றி முகம்மது ஜமீல்
நன்றி வால்பையன்
நன்றி ஹென்றி
தேங்க்ஸ்பா, ரமேஷ்
நன்றி கார்த்தீஸ்வரன்
செல்லும் வழியையும் சேர்த்து எழுதலாமே
முக்காணியிலிருந்து சென்றீர்களா
நல்ல பகிர்வு!
கல்வெட்டு காணக்கிடைத்தது நன்று!
கோவில், வளைவு எல்லாம் இரண்டாம் தமிழ்க்கழகத்து, பாண்டியர்காலத்து பழமை வாய்ந்தது(கி.மு.5200) போல் தோன்றவில்லை.
சிறந்த பதிவு. தமிழன் தன்னை உணராதாவரை தலைநிமிர்ந்து வாழப்போவதில்லை. எங்கள் ஊரிலும் இரண்டாயிரம் ஆண்டு பழமையான “அரிக்கமேடு” துறைமுகம் உள்ளது.
மூவேந்தர்களின் துறைமுக நகரங்களில் தொண்டி'ய அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததால் பார்த்துவிட்டேன்.உம்மால் இன்று யாம் எமது கொற்கையை கண்ணுற்றோம் மிக்க நன்றி,அப்பிடியே கொஞ்சம் முசிறி பக்கம் போன ஒரு பதிவு எழுதிருங்க!!!!!
Pathil thanthamaiku nanri saravanan.
எழுதிவிடுகிறேன் புருனோ...
நான் முக்காணி வழியாக தான் சென்றேன்...
நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி. சரிதான். வளைவு பிறகு கட்டியதாக தான் இருக்கும்.
நன்றி பிரபாகரன்
நன்றி மருதா. முசிறி பற்றிய தகவலுக்கு நன்றி.
romba nalla iruku sir .ilike that. nanum oru history piriyan than.intha mathiri idngal nanum poganum nu ninipen. ennaku kalki oda ponniinselvan la varra kodiyakarai harbour patthi anupungalen. "vizzy"
Nice post.
Can you see korkai in wikipedia or google map?
I hope the place marked as korkai in google or wikimapaia is right. One of the current of the tamirabarani river runs just south of this village.
I feel it would have been inland earlier too. I think foreign sailors might have docked big ships in the river mouth and taken small boats in the lagoon to reach korkai. Isn't it strategically safe (from enemy attack) for a capital?
BTW, why there several fish bone type canal formations just south of korkai for in the small islands?
எத்தனையோ முறை திருச்செந்தூர் சென்றிருந்தாலும், கொற்கை இந்தப் பக்கம்தான் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
நல்ல முயற்சி நண்பரே..
எங்கள் குல தெய்வம் ஆசாகு முடி சாஸ்தா இந்தக் கொற்கை வாசி தான். வருடா வருடம் குடும்பத்தினர், உறவினர் என்று ஒரு பெரிய கூட்டமாக அடுப்பு, உணவுப் பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு போய், நைவேத்யம் தயார் செய்து, சமையல் செய்து, என்று அங்கு ஒரு நாள் பூரா இருப்போம். பின் சாயந்திரம் திருசெந்தூர் போய் விட்டு ஊர் திரும்புவோம். இப்போ நிறைய மாற்றங்கள். கொஞ்சம் வசதிகள் பக்தர்களால் செய்யப் பட்டு சிறப்பாக இருக்கு.
கோவிலின் படங்கள் இங்கே
http://www.virutcham.com/?page_id=1561
கொற்கையின் தற்போதைய நிலையை கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றிகள், சரவணன். தமிழ் ஆர்வலர்கள் கவனிக்க வேண்டிய விடயம் தான்.
you must see the "vanniya maram" which is 1000 years old. this is near the bus stop. this is also left abandoned and not noticed. the pool near korkai is connected with pazhayakayal now a fisherman's village with river thamirabarani.
அருமை ...
சின்ன கோவில் ( பழமையான கொற்கை அக்காசாலை ஸ்ரீஈஸ்வரமுடையார் திருக்கோவில் விநாயகர் ஆலயம் )பற்றிய தகவலை அளித்த உங்களுக்கு நன்றி
Thanks..I have used this info to mark the temple in Google Map.
http://www.google.com/mapmaker?gw=129&activity_src=2&activity_filter=0&activity_sort=0&ll=8.645509,78.059479&spn=0.001586,0.002489&z=19&vpid=1361618569415&t=h&lyt=large_map
http://tamizarpaarvai.blogspot.in/2008_12_01_archive.html
About Korkai
கொற்க்கை என்பது தூத்தூக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரமான காயல்பட்டணம்.
Post a Comment