Tuesday, April 27, 2010

மதராசப்பட்டிணம்

பீரியட் படங்கள் எடுப்பது ப்ரியதர்ஷனுக்கு பிடித்த வேலை. ஏதோ அவர் புண்ணியத்தில் தமிழில் சில படங்கள் பார்த்தோம். அவர் தமிழுக்கு ஒரு இயக்குனரை விட்டு சென்றிருக்கிறார். ப்ரியதர்ஷனிடம் பணிபுரிந்த விஜய்.

இயக்குனர் விஜய்யின் முதல் இரண்டு படங்களுமே (கீரிடம், பொய் சொல்லப் போறோம்) எனக்கு பிடித்திருந்தது. அதனால், அவர் அடுத்தது எந்த படம் எடுத்தாலும் பார்த்திருப்பேன். அவர் இப்போது எடுப்பதோ, சுதந்திரத்திற்கு முந்தைய சென்னையைக் களமாகக் கொண்டு ‘மதராசப்பட்டிணம்’. ஒரு சலவைக்காரனுக்கும் ஆங்கிலேய கவர்னர் மகளுக்கும் இடையேயான காதல் கதையாம்.



இசை - ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த குருவியின் தலையில் எப்போதும் பனங்காய் தான். அவருடைய நிலைக்கு ஏற்ப சுமந்திருக்கிறார். பீரியட் படமென்பதால் ரஹ்மானின் பீரியட் படங்களை ரெஃபெர் செய்திருப்பார் என நினைக்கிறேன்.

வாம்மா துரையம்மா

உதித் நாராயண் பாடியிருக்கும் பாடல். இந்திய பெருமையை வெள்ளைக்கார ஹீரோயினுக்கு விளக்கும் பாடல். ஹீரோ பாட, ஹீரோயின் கேட்கும் சந்தேகங்களுக்கு ஹனீபா விளக்கமளிக்கிறார். இந்திய பெருமைகளை நா. முத்துக்குமார் அழகாக எழுதியிருக்கிறார். உதித் குரலும், பாடலின் மெட்டும் லகானை ஞாபகப்படுத்துகிறது. “கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்” என்று உதித் நாராயணை பாட வைத்திருப்பது பெரும் காமெடி.

இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே அன்பை காணலாம்.

வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிதுயம்மா
இதை அடிமையாக்கித்தான் கொடுமை செய்வது நியாயமா?


மேகமே மேகமே

எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர்கள் விக்ரம், நாசர் இணைந்து பாடியிருக்கும் பாடல். பாடியவர்கள் லிஸ்ட்டில் நா.முத்துக்குமார், எழுத்தாளர் அஜயன் பாலா பெயர்களும் இருக்கிறது. விஸ்வநாதன், விக்ரம் தவிர பாடும்போது மற்றவர்கள் குரல் தெரியவில்லை. விஸ்வநாதனை பாட வைத்திருப்பதாலோ என்னவோ, பிரகாஷுக்கு சங்கமம் நினைவு வந்திருக்கும். நா.முத்துக்குமார் சலவைத்தொழிலாளர்களின் வாழ்வை இப்பாடலில் பதித்திருக்கிறார்.

சலவைக்காரன் வாழ்க்கைக்கூட சாமியைப் போலத்தான்
உங்களோட பாவ மூட்டை சுமப்போம்....


ஆருயிரே ஆருயிரே

மென்மையான மெலடி சோனு நிகாம் குரலில். உடன் பாடியிருப்பது சைந்தவி. சோனு நிகாம் தமிழில் வேறு என்ன பாடல்கள் பாடியிருக்கிறார்? ஹிந்தி பாடகர் என்றாலும், குறை சொல்ல முடியாத தமிழ் உச்சரிப்பு. இவரது குரலும் பாடலின் இசையும், கேட்க இதமாக இருக்கிறது. உயிரே உயிரே என்று பாடுவதைக் கேட்கும் போது, படத்தின் முடிவில் ஹீரோவின் உயிரை எடுத்துவிடுவார்கள் போலும்.

பூக்கள் பூக்கும்

புல்லாங்குழல் அருமையான இசைக்கருவி. எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் முழுக்க தபலாவுடன் சேர்ந்து புல்லாங்குழலின் இசை விளையாடியிருக்கிறது. ரூப்குமார், ஹரிணியின் பாடியிருக்கும் இந்த பாடலின் ’பீட்டர்’ வரிகளை ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். ரூப்குமாருக்கு குண்டு குரல். வார்த்தைகளை அழுத்திவிடுகிறது.

வேரின்றி, விதையின்றி
விண் தூவும் மழையின்றி
இது என்ன
இவன் தோட்டம் பூப்பூக்குதே...


காற்றிலே காற்றிலே

சுதந்திர போராட்டத்தையும், காதலையும் இணைத்திருக்கும் பாடல். ஹரிஹரன் உணர்வுகளைக் கொட்டி பாடியிருக்கிறார். பாடலின் இடையே ‘வந்தே மாதரம்’ வந்து செல்கிறது. உங்க லவ்ஸ்க்கு வந்தே மாதரம் தான் கிடைத்ததா? என்று யாரும் சண்டைக்கு வராமல் இருந்தால் சரி.

நிகழ்காலம் கண்முன் முன்னே
வருங்காலம் கனவின் பின்னே
விதி போடும் கணக்கிற்கு விடையில்லையே!


இந்த ஐந்து பாடல்களுடன் பீல் ஃஆப் லவ், டான்ஸ் தீம் என இரு தீம் இசைகளும் இருக்கிறது. எல்லாமே மென்மையான பாடல்களாக இருப்பதால், இரவு கேட்டுக்கொண்டே தூங்க வசதியாக இருக்கும்.

சென்னையைக் களமாகக் கொண்டு நடக்கும் கதைக்கு, மண்ணின் மணத்துடன் எந்த பாடலும் இல்லாதது பெரிய குறை. வட இந்திய பாடல் உணர்வே இருக்கிறது. மேலும், பெரும்பாலாக ஹிந்தி பாடகர்கள்.

மற்றபடி, இசைக்கு மொழி கிடையாது என்று நினைத்துக்கொண்டு கேட்டோமானால், முதல் நாள் தியேட்டர் வாசலில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

.

13 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மேகமே மேகமே எனக்கு பிடித்த பாடல்

உங்களை பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள்.

http://sirippupolice.blogspot.com/2010/04/2.html

Ananya Mahadevan said...
This comment has been removed by the author.
Ananya Mahadevan said...

//சோனு நிகாம் தமிழில் வேறு என்ன பாடல்கள் பாடியிருக்கிறார்//
ஜீன்ஸ் படத்தில் வாராயோ தோழி என்ற பாட்டை பாடி இருக்கிறார். மிக அருமையான குரல் வளம்!
தகவலுக்கு நன்றி!க்ளிப்பிங்க்ஸ் பார்த்தப்போவே எனக்கு ஆட்டோமேட்டிக்கா லகான் தான் நினைவுக்கு வந்தது.

Mc karthy said...

http://bluehillstree.blogspot.com/2010/04/blog-post_07.html


See The Link

Anonymous said...

Roop Kumar rathod song..Hear oru thevathai paarkum neramith in Vaamanan

For the MSV song hear Ganana Gannanu ghiru in laagan..

The costume the choreography even the location were very much inspired by the laagan song..

For Jodha Akbar rahman sir use the instruments which were widely used during that period..where us in this movie they can even try using the instruments widely used during that period..in that case..parai, thaarai thappatai...i am not saying to use all thru the songs atleast here and there...so the feel might be match with the time period of the movie....

Over all GV at this young age is amazing..and the album after AO might be much biiger than this..

Nice one sara...Hear raavan and review yaar.

க ரா said...

நல்லாருந்தது பாடல்கள் நானும் கேட்டேன்.

சரவணகுமரன் said...

ரொம்ப நன்றி ரமேஷ்

சரவணகுமரன் said...

இப்ப நினைவுக்கு வருகிறது, அநன்யா. ஆள் அழகாவும் இருப்பாரு. முன்னாடி, எம்டிவியில் நிறைய பாட்டு பார்த்திருக்கிறேன்.

சரவணகுமரன் said...

ராஜ், லிங்க் பார்த்தேன். நன்றி.

சரவணகுமரன் said...

//so the feel might be match with the time period of the movie....//

நானும் அதைதான் நினைத்தேன்.

சரவணகுமரன் said...

நன்றி இராமசாமி கண்ணன்

Ananya Mahadevan said...

yes, he is the one. His 'Tu' song was quite popular then. But when he sang in jeans, I was very excited. His tamil pronunciation of thozhi was superb. :-)

P.S: sorry, tamil font is not working

சரவணகுமரன் said...

அநன்யா, நீங்க சொன்ன பின்னாடி அந்த பாட்ட திருப்பி கேட்டேன். சொல்றது கரெக்ட் தான். நல்லாயிருக்கு.