விஜய் படங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. சமீபகாலமாக, பாடல்களும் இந்த குற்றச்சாட்டில் சேர்ந்துவிட்டது. சுறா பாடல்களை பார்ப்போம்.
சுறா பாடல்கள் எல்லாம் தெலுங்கில் மணிஷர்மா போட்டதுதான் என்று ஒரு செய்தி படித்தேன். சரி, தெலுங்குகாரர்கள் கேட்டாச்சு. நமக்கு புதுசா இருந்தா சரி என்று கேட்டால், நாமும் கேட்ட மாதிரி தான் இருக்கிறது.
'நான் நடந்தா அதிரடி' - இது பொதுவா மணிஷர்மா பக்கத்தில் விஷால் உட்கார்ந்தால் அவர் போடும் ட்யூன். மலைக்கோட்டை, தோரணை எல்லாம் கேட்டு, பார்த்து, இதை கேட்டால் மனக்கண்ணில் விஷால் தான் ஆடுகிறார்.
’தஞ்சாவூர் ஜில்லாக்காரி’ பாடல் இசை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது என்று நினைத்தால், ‘போக்கிரி மச்சான்’ என்று அவர்களே எடுத்துக்கொடுக்கிறார்கள். ஆனாலும் நல்லாத்தான் இருக்கு. அதேப்போல், ‘சிறக்கடிக்கும் நிலவு’ம் நல்லாயிருக்கு.
அப்புறம், ஆரம்பப்பாடல் என்று நினைக்கிறேன். ”வங்கக்கடல் எல்லை... நான் சிங்கம் பெத்தப்பிள்ளை...”. ’காதல்னா சும்மா இல்லை’ படத்தில் ரவிகிருஷ்ணா ஒரு கேள்வி கேட்பார். அதைப்பார்த்திருந்தால் கபிலன் இப்படியெல்லாம் எழுதித் தொலைக்க மாட்டார்.
இப்படியெல்லாம் சொன்னாலும், தற்போது என் மதிய தூக்கத்தை கலைக்கும் பாடல்கள் சுறா தான். அதற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இன்னொரு பாட்டு இருக்கிறது. நீங்கள் வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்றால், இந்த பாடல் வரிகளை கவனியுங்கள். வாலியும் இயக்குனரும் எழுதியிருக்கிறார்கள். (இப்படித்தான் சான்ஸ் வாங்கினாரா?) இது ஒரு டபுள் மீனிங் சாங்.
உங்களுக்காக இதோ,
இது நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டுப்பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை.
ஹீரோவை ‘இது’ன்னுட்டாங்க...
ஒளிரும் பனிமலை குமுறும் எரிமலை
இரண்டும் கலந்த இதயம்.
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே காலை உதயம்.
ஒரு மார்க்கமாத்தான் சுத்துறாங்க.
வெற்றிக்கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
வருங்காலம் நம்ம கையில் தான்டா...
எங்க? கையை காட்டு. - கவுண்டர்
கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா...
இப்படி காமெடி பண்றதுல, உங்கள மிஞ்ச யாரும் இல்லை!
ஒரு தாய் மக்கள்
ஒன்றாய் என்றும் நிற்கவேண்டும்
நாளை உலகம்
நம்மை பார்த்து கற்கவேண்டும்.
அய்யோ!
ஈர்க்குச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு
தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு.
விஜய் ரசிகர்கள் ஜாக்கிரதை.
இதுபோல, இன்னொரு பாட்டு இருக்கு.
தமிழன் வீரத்தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்.
ஆரம்பமே அட்டகாசமா இல்லை.
போதும். இதோட நிறுத்திக்கலாம் என்று வடிவேலு பாணியில் முடித்துக்கொள்கிறேன்.
---
பாட்டுல, படத்துல விஜய்க்கு இப்படி பில்டப் கொடுத்தாலும், பாடல் வெளியீட்டு மேடையில் எல்லோரும் காமெடியாக்கிவிட்டார்கள்.
சக்சேனா சொல்கிறார், “படத்தில் தமன்னா இருந்தால், நாங்கள் வாங்கிவிடுவோம்.” (இதுவும் அவருக்காகத்தானா?.)
வடிவேலு சொல்கிறார், “சாமியாரு படத்தையே சன் பிக்சர்ஸ் ஓட்டிடுவாங்க” (இதை விட்டுடுவாங்களா?)
என்னத்தான்யா நெனைச்சிக்கிட்டீங்க, எங்க ஆள?.
.
19 comments:
ஒன்றை பார்த்து விட்டு தப்பாய் சொல்லலாம் ஆனால் உங்களை போன்று விஜய் எதிர்ப்பு நோயால் பாதிக்கப்படவர்கள் எதை எழுதினாலும் இப்படி பைத்தியக்காரத்தனமாய் எழுதுவார்கள். மன்னித்துக்கொள்ளுங்கள். உங்கள் எழுத்தை படிக்கும் போது எனக்கு வந்த உணர்வு இது.
படம் பகவதி கதை போல் இருப்பதாக கேள்வி.சுராவில் உள்ள இரண்டு மூன்று பாடல்கள் போக்கிரியில் உள்ள பாடல்கள் போல் இருக்கு.
சதீஷ்,
இது கேட்டுவிட்டு எழுதியது. பார்த்துவிட்டும் எழுதுவோம்ல. அது அடுத்த வாரம். :-)
உங்களுக்கு இதை படிக்கும்போது வந்த உணர்வை போல, எனக்கு பாட்டு கேட்ட பின்பு தோன்றியதை எழுதியிருக்கிறேன்.
ஒரு விஜய் ரசிகராக உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து பதிவை தூக்க வேண்டுமென்றாலும், செய்து விடலாம். :-)
அம்மு,
பகவதி என்றெல்லாம் சொல்லக்கூடாது. அது நாகர்கோவிலில் நடக்கும் கதை. இது தூத்துக்குடி கதை. இடையில் 100 கிலோமீட்டருக்கு மேல் இருக்கிறது. :-)
யாரும் செய்யாதத நீங்க செஞ்சுடல...பதிவையெல்லாம் தூக்க வேணாம் சாமி. இங்க வந்து நம்ம விமரிசனத்தையும் படிச்சு பாருங்க....
http://www.sasariri.com/2010/03/blog-post_5670.html
கொஞ்ச நாளா ராமராஜன், விஜயகாந்த் போன்ற ஈடு இணையற்று காமெடியன்கள் எதுவும் படம் நடிக்காதனால, விஜய போட்டு எல்லாரும் தாளிக்கிறீங்க. நடத்துங்க நடத்துங்க.......
பாடல் விமர்சனம் நல்லாத்தான் இருக்கு...
நானும் சுறா பாடல்களை கேட்டேன். வேட்டைக்காரன் பாடல்கள் பிடித்த அளவிற்கு கூட சுராவை பிடிக்கவில்லை எனக்கு..
:-))
விஜய் அடுத்த தலைவருக்கான போட்டியில் தீவிரமாக இறங்கி விட்டார் போல் உள்ளது..பாடல் வரிகளை பார்க்கும் போது. சுட்டு போட்டாலும் பாடல்கள் நன்றாக உள்ளன.
ok cool sura release aanathum muthal dvd unkalukkuthaan
thanga mudiyalai...oru mudivoda thaan suthikittu irrukanga
ஹலோ... உங்களுக்கெல்லாம் என் தலைவன் விஜயை கலாய்கிறதே வேலையா போச்சு... உங்ககிட்ட என்னிக்காவது விஜய் என் படத்துல கதை இருக்குன்னு சொல்லி இருக்காரா... அப்புறம் எந்த அடிபடையில நீங்க கிண்டல் பண்றீங்கன்னு தெரியல... ஏதோ பாவம்.. பாட்டாவது விஜய் படத்துல நல்லா இருக்கும்.. இது 50 வது படம் ஸ்பெஷலா பண்ணனும்னு அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க... தெரியும்ல ... வாங்க கடல் எல்லை.. இது சிங்கம் பெத்த தொல்லை.. சீ சாரி.. பிள்ளை...
இந்த உலகத்துல அதர்மம் எப்பல்லாம் தலை தூக்குதோ அப்பல்லாம் நான் மறுபடி அவதரிப்பேன்னு கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கார்...அது மறுபடி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது!!!
ஏப்ரல் 30 சுறா வெளியீடு!!!
மே 1 அஜீத் பிறந்த நாள்!!!
நன்றி கிரி...
நன்றி சும்மாதான்
ஆமாம் கிரி
என்ன சொன்னாலும், நான் தியேட்டர்லேயே போயி பார்த்துடுவேன் :-)
ஆமாமாம் infopediaonlinehere
சுகுமார்,
சுறா ஸ்பெஷல் போட்டோ கமெண்ட்ஸ் எப்ப?
நரேஷ்,
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...
very nice
Post a Comment