செல்போன்கள், நம்மிடையே ஒரு புது பய பழக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
செல்போன் பெருகிவிட்ட இக்காலத்தில் எல்லோரும் எப்போதும் நெருங்கியவர்களுடன் தொடர்பில் இருக்க பழகிவிட்டனர். இப்படி தொடர் தொடர்பு பழக்கம், சிலரை சிறிது நேரமே ஆனாலும், தொடர்புக்கொள்ள முடியாவிட்டால், ஏதேதோ எண்ணங்கள் தோன்றி, ஒருவித பய உணர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.
---
அலுவலக நண்பருக்கு கைக்குழந்தை இருக்கிறது. தினமும் ஆபிஸ் வந்தப்பிறகு, வீட்டில் இருக்கும் மனைவிக்கு போன் செய்து, குழந்தையை பற்றி விசாரிப்பார். ஒருநாள், இதுபோல் தொடர்புகொள்ள, அந்த பக்கம் போனை யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய, பலன் அதே.
இவருக்கு பல நினைவுகள். வேலையும் ஓடவில்லை. அச்சமயம் அக்கம்பக்கத்தில் இருக்கும் எவருடைய தொலைப்பேசி எண்ணும் இவரிடம் இல்லை. 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
அலுவலகம் வெளியே வந்து ஆட்டோ ஏறும் சமயத்தில், வீட்டில் இருந்து போன் வர, விசாரித்தால் ஏதோ சப்பை மேட்டர். கடுப்பாக இருந்தாலும், ஒரு வகையில் நிம்மதியுடன் சீட்டில் வந்து உட்கார்ந்தார்.
அன்று வீட்டுக்கு போவதற்கு முன்பே, சுற்றத்தார் தொலைப்பேசி எண்களை வாங்கி வைத்துக்கொண்டார்.
---
இன்னொரு நண்பரின் அத்தான், ஒரு வேண்டுதலுக்காக திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அவர் அச்சமயம் உடல்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கிறார். இவர் சென்ற மறுநாள் அவருடைய மனைவி இவருக்கு போன் செய்ய, போன் நாட் ரீச்சபுல். தொடர்ந்து போன் செய்து, செய்து சலித்துவிட்டார்கள். இது மறுநாளும் தொடர்ந்தது.
பெண்ணின் அப்பா, அம்மா என்று அனைவரும் அவருடைய வீட்டில் குவிந்துவிட்டார்கள். இங்கே என் நண்பருக்கும் டென்ஷன். எந்த பக்கம் இருந்து போன் போட்டாலும், ஒரே பதில். நாட் ரீச்சபுல். மேலும், ஒருநாள் கடந்தது.
என்ன செய்ய? ஹெலிகாப்டரை எடுத்து சென்று, பறந்துக்கொண்டே தேடவா முடியும்?
சும்மா அமைதியாக, நிம்மதியாகவும் இருக்க முடியாது. இதற்காக எதுவாவது செய்யவும் முடியாது.
பிறகுதான் தெரிந்தது, மொபைலில் ப்ராப்ளம். நாலு நாள் கழித்து, தரிசனம் முடித்து வீடு வந்தவருக்கு, ‘ஏன் போன் செய்யவில்லை?’ என்று வீட்டில் செம தரிசனம்.
---
நானும் சில சமயம் யாருக்காவது காத்திருக்கும் போது, இதுபோல் உணர்ந்திருக்கிறேன். வருபவர் வண்டியில் வந்துக்கொண்டிருப்பாராக இருக்கும். ”கொஞ்சம் எடுத்து பேசினால் தான் என்ன?” என்று காக்க வைப்பவர் மேல் கோபம் வரும்.
அதே சமயம், இதே கோபத்தை நானும் தெரிந்தே கிளப்பி இருக்கிறேன். நான் வண்டி ஓட்டும் போது, பெரும்பாலும் செல்போன் அடிப்பது கேட்காது. அப்படி கேட்டாலும், சமயங்களில், ‘இந்த நேரத்தில் இது வேறயா?’ என்று விட்டுவிடுவேன். ‘போய் சமாளித்துக்கொள்ளலாம்’ என்று சுய சமாதானத்துடன்.
வர வர, இதன் பாதிப்பின் தீவிரம் அதிகமாக, இந்த ‘பயணத்தின் போது செல்போன் எடுக்கக்கூடாது’ என்ற நல்ல பழக்கம், கெட்ட பழக்கமாகி வருகிறது.
---
நான் இன்றைக்கு இதைப் பற்றி எழுதினாலும், இந்த போன் உளவியல் பிரச்சினையை சிம்பு, தனது ப்ளாப் படமான ‘வல்லவனில்’ காட்டிவிட்டார்.
படத்தின் வில்லி ரீமா, சிம்புக்கு ஒரு போன் செய்வார். சிம்பு எடுக்கமாட்டார். ரீமா விடவே மாட்டார். தூங்காமல் காலை வரை போன் செய்வார். (சே! இந்த படம் பார்த்ததை மறக்க நெனச்சாலும் முடியலியே?)
இந்தளவுக்கு இல்லையென்றாலும், நம்மில் பெரும்பாலோர் ஒருகால் மிஸ்ஸாகி விட்டால், தொடர்ந்து 10-20 மிஸ்ட் கால்கள் தொடுப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். நொட் திஸ் பாயிண்ட். படத்தில் ரீமா இந்த காட்சியின் மூலமாக சைக்கோவாக சித்தரிக்கப்பட்டிருந்தார்.
---
இதற்கு என்ன செய்வது? செய்ய முடியும்? செல்போன் தரும் உபயோக பலனுடன் இந்த உபத்திரவத்தையும் சேர்த்து அனுபவிக்க வேண்டுமா?
மனரீதியாக சரி செய்து கொள்வது ஒரு வழி. செல்போனுக்கு அடிமையாவதை குறைக்க வேண்டும். எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பைத் தவிர்க்க வேண்டும். அப்படியே அதிகம் பேசினாலும், இம்மாதிரி சமயங்களில் செல்போன் இல்லாத காலத்தை நினைத்துக்கொள்ள வேண்டும். பொறுமை வேண்டும். தொடர்புக்கொள்ள வேறு வழியே இல்லாத போது, பொறுமை ரொம்ப அவசியம்.
---
இன்று சில நண்பர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தது. மற்ற நண்பர்களுக்காக, பதிவாக.
.
18 comments:
நல்ல பதிவு நண்பரே. செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்பு. நன்றி.
உண்மை தான்... இன்று பலரிடமும் இந்த வியாதி தோற்றி உள்ளது. :-)
உண்மைதாங்க,
என் நண்பர் ஒருவருக்கும் இதுபோன்ற பதட்டம் இருக்கு! வீட்டிலருந்து ஃபோன் வரலேன்னா உடனே பயந்துடுவார்... என்னமோ ஏதோன்னு நினைச்சி வருத்தப்பட்டு புலம்ப ஆரம்பிச்சுடுவார். இது போன்ற விஷயங்களை பேசிப்பாத்துதான் நாமளே கண்ட்ரோல் பண்ண முடியும். அந்த வகையில் உங்களின் பகிர்வு ரொம்பவும் உபயோகமாய் இருக்கிறது!
-
DREAMER
பயனுள்ள தகவல் நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உண்மை....
நல்ல பதிவு...
unmai than sir, romba kastapaturukom antha mathiri. nanum apadi than phone attend seyalana romba tension agituven. romba kastam than. postive thinking varathu ela phone nam pannum pothu avanga edukalana romba tension agithu.
எதுக்கும் இந்த விஷயத்தை எனக்கு போன் ல சொல்லிடுங்க... அப்பத்தான் நியாபகம் இருக்கும்.
நன்றி டாக்டர்.
நன்றி ரோஸ்விக்
ரொம்ப நன்றி DREAMER
நன்றி சசிகுமார்
நன்றி Sangkavi
சக்திப்ரியா, இனி டென்ஷன் ஆகாதீங்க... பீ கூல்...
ரமேஷ்,
போன் அடிச்சா எடுப்பீங்க இல்லை? :-)
Nidharsanamana Unmai!
Appa, romba naal kalichu yaraiyum attack pannama, postive aa oru comment pottachuu pottachu pottachu
vallavan padam example ok-ya
but simbu mattum thaan flop padam kodutthaara? mokkai vijay, tharuthala ajith ellam flop kodutthadhu illaiya?
mhmmmm okey otherwise ur article is good-ya
madhumidha
madhumidha1@yahoo.com
மதுமிதா,
சிம்பு மட்டும் தான் ப்ளாப் படம் எடுப்பாரு’ன்னு சொல்லலியே? வல்லவன் படத்த பத்தி சொல்ல வேண்டி இருந்தது. சொன்னேன். சரி, வல்லவன் ப்ளாப்பா, இல்லையா?
மற்றபடி, உங்க பாராட்டுக்கு நன்றி.
Find and select some good things from you and it aids me to solve a problem, thanks.
- Henry
Post a Comment