Tuesday, March 30, 2010

சோழனின் பழைய கோவில்

திருப்பத்தூரில் இருந்து மதுரை சென்றுக்கொண்டிருந்தபோது, நண்பனின் மொபைல் அடித்தது. எடுத்து பேசியவன், சரியென முடித்தான்.

"யாரு?"

"வீட்டுல இருந்து"

"என்னவாம்?"

"போற வழில ஒரு கோயில் இருக்காம். போயிட்டு வர சொன்னாங்க".



சரியாக சொல்வது என்றால் திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை போகும் வழியில் இருக்கிறது, அந்த கோவில். திருக்கோஷ்டியூர் எனும் ஊருக்கு பக்கத்தில்.

கோவில் வாசல் பக்கத்தில் ஒரு துருப்பிடித்த போர்டு இருந்தது. கண்ணை விரித்து, வாசிக்க முயற்சி செய்ததில், ராஜ ராஜ சோழன் என்பது மட்டும் குத்துமதிப்பாக தெரிந்தது.



ராஜ ராஜ சோழன் எதுக்கு இங்க வந்தாரு? என்று யோசித்துக்கொண்டே உள்ளே சென்றோம். கோவில் பூசாரியிடம், ராஜ ராஜ சோழன் விவகாரம் குறித்து விசாரித்தோம்.



அவர் சொன்னது, “இந்த கோயில் பல வருஷம் பழமையானது. (எத்தனை வருஷம்’ன்னு சொன்னாரு. மறந்து போச்சு!) ராஜ ராஜ சோழனோட குலத்தெய்வம் இந்த ஈஸ்வரர். ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதற்கு முன்பு வணங்கியது இவரைத்தான். இந்த கோயிலில் தான்.”



ஆதாரத்திற்கு கல்வெட்டை காட்டினார். நாம் கல்வெட்டிற்க்கே ஆதாரம் கேட்போம் என்றாலும், அப்போது கேட்கவில்லை.



ரொம்ப காலமா, எந்த பராமரிப்பும் இல்லாமல், புதர், பாம்புகள் சூழத்தான் இந்த கோவில் இருந்திருக்கிறது. சமீபத்தில் தான், பராமரிப்பு வேலைகள் நடந்திருக்கிறது. மதுரையில் இருக்கும் சில வியாபாரிகள் தயவில், மாத மாதம் ஹோமம் வளர்த்து, அன்னதானம் நடக்கிறதாம்.



பராமரிப்பு பண்ணுவது நல்ல விஷயம் தான். அப்படியே பழமை மாறாமல், சீராக்கினால் நன்றாக இருக்கும்.



பூசாரி இன்னும் நிறைய பேசினார். கேட்டுவிட்டு கிளம்பினோம். சிறிது தூரத்தில், ஒரு பெரிய பெருமாள் கோவில் இருந்தது. நடை சாத்தியிருந்ததால், போக முடியவில்லை.

.

6 comments:

DREAMER said...

பகிர்வுக்கு நன்றி..! புகைப்படங்களும் அருமை..! அந்த பக்கம் போகும்போது கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போகிறேன்!

-
DREAMER

Naresh Kumar said...

ஆன்மீகத்துல ஈடுபாடு அதிகமோ!!!

S Maharajan said...

சோழனின் குலதெய்வம்
பாண்டிய மண்ணிலா!
தெரியாத தகவலை தெரிய வைத்மைக்கு நன்றி
முகிலன்

சரவணகுமரன் said...

நன்றி ட்ரிமர்...

சரவணகுமரன் said...

நரேஷ்,

அப்படி ஒன்றும் பெரிய ஆன்மீக ஈடுபாடு கிடையாது. பயணங்கள் பிடிப்பது போல், புராதன இடங்களை பார்ப்பது பிடிக்கும்.

சரவணகுமரன் said...

நன்றி மகாராஜன். நான் இந்த ஆங்கிளில் யோசிக்கவில்லை.