Tuesday, March 23, 2010

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள்

இன்றைய தமிழ் சினிமாவின் நிதி நிலைமை, மூன்று ‘நிதி’களின் கைகளில் தான் இருக்கிறது. கலாநிதி, உதயநிதி, தயாநிதி.

தயாரிப்பாளர்கள் தான் பணம் போட்டு, ஒரு படத்தை எடுத்தாலும், தமிழ் சினிமா அவர்களை முதலாளிகள் போல் நடத்தியதில்லை. நடிகர்கள் வீட்டில் காத்து கிடப்பது, அவர்களது கால்ஷீட்டுக்காக தவிப்பது, பல தலைவலிக்கிடையே படப்பிடிப்பு நடத்துவது, பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிடுவது, லாபம் வந்தால் ஹீரோ, விநியோதர்கள், தியேட்டர் ஓனர்களுடன் பகிர்ந்துக்கொண்டு, அதுவே நஷ்டம் என்றால் மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு, தூக்கு வரை சென்ற தயாரிப்பாளர்களை கண்டு இருக்கிறோம். விதிவிலக்குகள் ஒரு சிலரே.

இந்த ட்ரெண்ட் ’நிதி’களின் திரையுலக வருகைக்கு பிறகு மாறியிருக்கிறது. அவர்கள் விஷயத்தில் மட்டும்.

---

ஒரு தற்காப்புக்கு படங்களை வாங்கி திரையிட ஆரம்பித்தார் கலாநிதி. அடிமாட்டு விலைக்கு படத்தை வாங்கி, விளம்பரம் செய்து வெளியிட்டு, படம் ஓடினால் சினிமா லாபம், இல்லாவிட்டால் டிவியில் போட்டு சேனல் லாபம் என்பது தான் இவரின் ஆரம்ப திட்டமாக இருந்தது. சன் பிக்சர்ஸின் விளம்பர யுக்தியும், படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங்கும், பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்களையே அசைத்து பார்த்தது.

பல வருடகால தயாரிப்பு அனுபவம் பெற்ற ஏவிஎம், தனது படத்தை சன் பிக்சர்ஸிடம் விற்றது. எந்திரன் தயாரிப்பாளர் பணக் கஷ்டத்தில் மாட்ட, ரஜினி ஷங்கருடன் ஓடி வந்து சந்தித்தது கலாநிதியை. தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த விஜய், தனது படத்தை இவர்களிடம் விற்றுவிட்டு, அவர்கள் சொல்படி தியேட்டர் தியேட்டராக சுற்றினார்.



மக்களிடம் இவர்கள் மேல் இருந்த மயக்கம் குறைந்துவிட்டாலும், இவர்கள் பேனரில் படம் வெளிவந்தால், படத்திற்கு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைப்பதாக திரையுலகத்தினர் இன்னமும் நம்புகிறார்கள். அப்படியே, படத்தை இவர்களிடம் விற்காவிட்டாலும், படத்திற்கு இவர்களது தயவு முக்கியம் என கருதுகிறார்கள். நல்ல கதைகளில் நடித்துக்கொண்டிருந்த ஜீவா கூட, இவர்கள் விளம்பரத்தில் சொன்ன பொய்யை நம்பிவிட்டாரா என்று தெரியவில்லை. மசாலா கதையை கேட்டு இன்னொரு படமும் நடித்துவிட்டார்.

ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உண்மையா, பொய்யா தெரியவில்லை. சக்சேனா பண்ணிய போன் காலை ஷங்கர் எடுக்காததால், இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடக்கவில்லையாம். இப்படி உபத்திரவம் இருந்தாலும், வியாபாரத்திற்காக இவர்களை சகித்துக்கொள்ள திரையுலகினர் தயாராகவே இருக்கிறார்கள்.

---

கலாநிதி படம் எடுத்தால் கூட, அது அவர் காசு, அவர் படம் எடுக்கிறார் என நினைப்பவர்கள், உதயநிதி, தயாநிதி விஷயத்தில் அப்படி நினைப்பதில்லை.

ரெண்டு பெரிய வீட்டு பசங்க பண்ணும் செலவுகளாக எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் நினைக்கிறார்கள். காரணம் - கலாநிதி மாறன் ஏற்கனவே பெரிய தொழிலதிபர். படம் எடுக்க தேவையான, நிதி நிலைமை உள்ளவர். மற்ற இருவரின், தந்தைகளும் அரசியல்வாதிகள் மட்டுமே. தொழிலதிபர்கள் அல்ல.

இந்த சின்ன வயசில், இவ்வளவு பெரிய முதலீடுகளுடன் படம் எடுப்பதற்கான அடிப்படை, அரசியலில் சம்பாதித்தது என சாதாரணமாகவே கருதுகிறார்கள்.

---

எனது சின்ன வயசில், பிடித்த ஹீரோ, பிடித்த ஹீரோயின், காமெடி நடிகர் என எனக்கு பிடித்த பல காம்பினேஷன்களில் படம் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்ப்பேன். பிறகு, நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் என பிடித்த காம்பினேஷனில் நினைத்து பார்த்திருக்கிறேன். இவரும் அவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அவரும் இவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? என. நீங்களும் நினைத்து பார்த்திருக்கலாம்.

நம்மால் நினைக்க மட்டும் முடிந்ததை செய்துக்கொண்டிருக்கிறார் உதயநிதி. கில்லி மாதிரி இன்னொரு படம் தயாரிக்க முடியுமா? ஏன் முடியாது என குருவி தயாரித்தார். சூர்யா-ரவிக்குமார்-ஹாரிஸ் என ஆதவன் தயாரித்தார்.

நாமெல்லாம் ஒரு படத்தின் பாடல் பிடித்தால், கேசட்டோ சிடியோ யோசித்து வாங்குவோம். இவர் படத்தை வாங்கினார். விண்ணைத்தாண்டி வருவாயா. அதுவும் போட்டிக்கு ஆளில்லாததால், நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு படம் வெற்றிவிழாவிற்கு நாயகன் படமோ, அல்லது ஒரு குருப் போட்டோவோ போட்டு விளம்பரம் வெளியிடுவார்கள். முதல்வன் வெற்றிவிழாவிற்கு, ஷங்கர்-ரஹ்மான்-மாதேஷ் மூவரும் கோர்ட்-சூட்டுடன் உட்கார்ந்திருப்பது போல் விளம்பரம் வந்தது. மற்றபடி, ஹீரோ-ஹீரோயின் இல்லாமல் விளம்பரம் பார்த்தது கிடையாது.

இங்க பாருங்க.



கமல்-ரவிக்குமார் காம்பினேஷனில் அடுத்த படம். கூடிய சீக்கிரம் கலைஞர் டிவியில், கமல் நின்றுக்கொண்டு, நேயர்கள் கேள்விக்கு பதில் சொல்லுவார்.

---

அடுத்து சின்னவர் - தயாநிதி. தொடக்கத்திலேயே, பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் இருந்து படத்தை வாங்கி வெளியிட்டார். அடுத்து, குறைந்த செலவில் ஒரு தமிழ்ப்படம் எடுத்து, நிறைய லாபம் சம்பாதித்தார். வேறு யார் அந்த படத்தை எடுத்திருந்தாலும், படத்தின் நிலை அதோ கதிதான். அடுத்து தயாரிப்பது - தூங்காநகரம். முன்னவர்கள் போல் இல்லாமல், இவர் கொஞ்சம் கதையும் கேட்பது போல் இருக்கிறது.



இது தான் இவர் ஸ்டைல் என்று சொல்லமுடியாத படி, அடுத்து பையாவை வெளியிடுகிறார். அதற்கடுத்தது, அஜித்-கௌதம்-ரஹ்மான் கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

தயாரிப்பாளர் சங்க, நடிகர் சங்க எச்சரிக்கையெல்லாம் சட்டை செய்யாமல், அஜித் காலரை தூக்கிவிட்டு கொண்டு துணிச்சலாக இருந்ததற்கு, தயாநிதிக்கு இவர் கொடுத்த கால்ஷீட்டும் ஒரு காரணம் எனலாம்.

---

ரஜினி, கமல், விஜய், அஜித் என நடிகர்களின் கைகளில் இருந்த தமிழ் சினிமா, இன்று இந்த மும்மூர்த்திகளின் கைகளில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. விஜய், தனுஷ், விஷால் ஆகியோரை தியேட்டர், தியேட்டராக சுற்ற வைத்தவர்கள், மற்றவர்களையும் விட போவதில்லை. அட்லீஸ்ட், சன் டிவி, கலைஞர் டிவி ஸ்டுடியோக்களுக்காவது வர வைத்துவிடுவார்கள்.

மக்கள் ஒரு விஷயத்திற்காக சந்தோஷப்பட வேண்டும். இவர்களும் அரசியலுக்கு வந்துவிடாமல், சினிமாவிற்கு வந்தார்களே என்று.

பணம் வரவும் செய்யணும், போகவும் செய்யணும் அல்லவா? அது தானே, பணபுழக்கத்திற்கு வழி செய்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும். அந்த வகையில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இவர்கள் சேவை, இன்னமும் தேவை.

.

28 comments:

மதன் said...

Pinreenga! Enjoy maadi!! :)

VISA said...

கடைசியில சொன்னீரே ஒரு கருத்து அது தான் டாப்பு.

Mohan said...

நல்ல அலசல். ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

unmaithaan saravan...

hai nanba how r u? sorry romba naalaachu blogs padichi. Im back

Mohan said...

நல்ல அலசல். ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

Karthick said...

Kalakura Saravanan...

K.S.Muthubalakrishnan said...

Good Review

K.S.Muthubalakrishnan said...

Good Review

Prasanna Rajan said...

ஒரு வேளை பொட்டி வாங்கிட்டீங்களோ? இல்லை வூட்டுக்கு எதனாச்சும் ஆட்டோ வந்துச்சா? ஒரே புகழாரமா இருக்கே??!!

Prathees R said...

//நாமெல்லாம் ஒரு படத்தின் பாடல் பிடித்தால், கேசட்டோ சிடியோ யோசித்து வாங்குவோம். இவர் படத்தை வாங்கினார்.

இது சூப்பர்!!!
மிகவும் ரசித்தேன் :-)

Anonymous said...

very nice.

S Maharajan said...

//பணம் வரவும் செய்யணும், போகவும் செய்யணும் அல்லவா? அது தானே, பணபுழக்கத்திற்கு வழி செய்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும். அந்த வகையில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இவர்கள் சேவை, இன்னமும் தேவை.//

"வஞ்சி புகழ்ச்சி அணி" மாதிரி தெரியுது

சரவணகுமரன் said...

நன்றி மதன்

சரவணகுமரன் said...

நன்றி விசா

சரவணகுமரன் said...

நன்றி மோகன்

சரவணகுமரன் said...

நல்லா இருக்கேன், ரமேஷ். எங்க போயிட்டீங்க?

சரவணகுமரன் said...

நன்றி முத்துபாலகிருஷ்ணன்

சரவணகுமரன் said...

இது புகழாரமாவா தெரியுது, பிரசன்னா?

சரவணகுமரன் said...

நன்றி கார்த்திக்... படத்துக்கும் ஒரு தகவலுக்கும்...

சரவணகுமரன் said...

நன்றி வெட்டி ஆபிசர்

சரவணகுமரன் said...

அப்படியா மகாராஜன்? ஹி ஹி...

DHANS said...

இதுவும் கடந்து போகும்

Anonymous said...

சரவணன்,

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

1) ஆதவன் பட முக்யஸ்தர்கள் (நடிகர்கள், இயக்குனர்..) வீட்டில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்ததே. யார் தலையீட்டால் நடந்தது.?

2) இந்த மூன்று நிதிகளில் ஒருவருக்கு கால்ஷீட் கொடுத்தால் இன்னோருவரால் மிரட்டப்படும் சாத்தியங்கள் அதிகமாகுமா?

3) கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என அழகிரி கூறியுள்ள நிலையில், என்ன ஆகும்?

4) அடுத்த தேர்தலில் ஜெ. அல்லது வேறு யாரோ முதல்வராகிவிட்டால் இவர்களின் நிலை ?

5) இவர்களை முறைத்துக் கொண்டால் சினிமா தொழிலிலேயே இருக்க முடியாத அளவிற்கு மற்றவர்கள் பின் தள்ளப்படுவார்களா?

6) இந்தப் பூனைகளுக்கு மணி கட்ட சினிமா/அரசியல் உலகில் யாருக்கு தைரியம் உள்ளது ?

மகேஷ்

manjoorraja said...

இந்த மும்மூர்த்திகள் மட்டுமல்லாது அரசியலை கலக்கும் இவர்களின் குடும்பங்கள் என அனைவருக்கும் மேல் உள்ள மூப்பரின் மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் ஏற்படும் நிலைகளை நினைத்தால் தான் பயமாயிருக்கிறது.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

மற்றவர்களுக்கு தயாநிதி அழகாக செய்கிறார். ஒட்டு மொத்த திரையுலகையும் கேலி செய்தது வேறு யாராக, (மற்ற நிதிகளாக) இருந்தாலும். குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்க திரையுலகம் கோரிக்கை வைத்திருக்கும்.

வாரணம் ஆயிரம் இவருடைய கையில் இருந்ததுதான் வந்தது. ரசனையுள்ளவர் என நினைக்கிறேன்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

சன் பிச்சர்ஸ் கலாநிதிமாறன் எல்லோரையும் தியேட்டர் தியேட்டராக சுற்ற வைக்கின்றார் என்று சொன்னீர்கள். எந்திரன் கலாநிதிமாறனையும் சேர்த்து சுற்ற வைத்துக்கொண்டு இருக்கிறான் என்பதை கவணித்தீர்களா நண்பரே!

tamil cinema said...

நல்ல பதிவு மிக நன்றாக சொல்லி இருக்கீங்க நன்றி

Anonymous said...

I see you spent a lot of time writing your website

[url=http://topmusclesupplements.org]Legal steroids[/url]