Friday, March 19, 2010

பெங்களுர் தேர்தல்

பெங்களுரில் விரைவில் மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது. ஏற்பாடு என்றது, தேர்தல் கமிஷன் செய்வதை சொல்லவில்லை. வேட்பாளர்கள் பல விஷயங்கள் செய்து வருகிறார்கள். உதாரணமாக, நேற்று முன்தினம் கர்னாடகாவில் ஒரு விசேஷம். உகாதிக்கு அடுத்த நாள், கறி சோறு சமைத்து சாப்பிடுவார்களாம். அதனால், சில இடங்களில் வீட்டுக்கு வீடு மட்டனும், சிக்கனும் காலையிலேயே வந்திருக்கிறது.

இது ஒருபுறம் என்றால், இளைஞர்களை வளைத்துப்போட, ஐபிஎல் டிக்கெட்டுகளை சில வேட்பாளர்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆண்களுக்கு சரக்கு, பெண்களுக்கு சேலை என்று ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தேர்தல் பரிசு. எல்லா ஊரும் ஒரே மாதிரி தான் இருக்கு.

---

ஜனதா தளம், தனது வேட்பாளர்களுக்கு ‘பிரச்சாரம் செய்வது எப்படி?’ என்று வகுப்பு நடத்தியிருக்கிறது. ஒழுங்காக சட்டையில பட்டன் போட்டுட்டு போ, படிச்சவன் இருக்குற இடத்துல வெடி போடாதே; அது உனக்கே வெடிச்சிரும், எவன் என்ன திட்டுனாலும் சிரிச்சிட்டு வந்துரு என பல அரசியல் பாலப்பாடங்களை நடத்தியிருக்கிறார்கள் குமாரசாமியின் தலைமையிலான கட்சியின் தலைவர்கள்.

ஏதாவது பதிப்பகம் “30 நாளில் அரசியல்வாதி ஆவது எப்படி?”, “நீங்களும் பிரச்சாரம் செய்யலாம்” போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட்டால், இவர்களின் சிரமத்தை குறைக்கலாம்.

---

தேர்தல்’ன்னா போதும். எங்கிருந்து தான் இவ்ளோ பவ்யம் வருமோ?



நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா.

.

11 comments:

ஆயில்யன் said...

போட்டோ செம டாப்பு :)) பயமக்க எப்புடித்தான் இப்படி பம்முற மாதிரி நடந்துக்குவாங்களோ ? அரசியல்வாதியாகறதுக்கு யாராச்சும் காலேஜ் கட்டி பிராக்டிகல்ஸ்ல படிப்பு சொல்லிக்கொடுத்தா கூட இப்படி ஒரு பவ்யம் வராது சாமியோவ்வ்:)

Anonymous said...

ayyo andha kodumaya yen kekareenga

quarter-m biryani-yum chumma velayadudhu ..

thirundhave maatanga...

டக்கால்டி said...

இறுதி படம் செம காமெடியா இருக்குங்க...
இவரு தேர்தல்ல நிக்குறாரா?
வர்ற வழியில சுண்ணாம்பு சட்டிக்குள்ள விழுந்துட்டாரா?

Naresh Kumar said...

ஃபோட்டோ அருமை!!!

எங்கியாவுது கோர்ஸ் நடத்துறாங்களான்னு பாருங்க!!!

arivuindia said...

நல்ல போட்டோ, ஆளுக்கு தகுந்த வேஷம்
-Arivu

சரவணகுமரன் said...

நன்றி ஆயில்யன்

சரவணகுமரன் said...

ஆமாம் Sachanaa

சரவணகுமரன் said...

டக்கால்டி, ஹி ஹி... :-)

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்

சரவணகுமரன் said...

நன்றி அறிவு

Indian said...

நேத்து குமாரசாமி அடிச்சுவிட்டாரே, 'ரவுடிக்கு சீட்டு கொடுத்தா அவர் திருந்துவார்' அப்படின்னு.