ஒரு மனிதன் எல்லோருக்குமே நல்லவனாக இருக்க முடியாது. அது எம்.ஜி.ஆராக இருந்தாலும். அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு அமைச்சர் பெருங்குடி மக்கள் வரை அனைவரின் கண்களுக்கும் வள்ளலாக தெரிந்தவர், சந்திரபாபுவின் கண்களுக்கு மட்டும் ஏன் அப்படி இருக்கவில்லை?
---
குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரை தவிர.
“என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர், சிரிச்சா முத்தா உதிர்ந்திரும்?” (எல்லோரையும் மிஸ்டர் என்றுத்தான் அழைப்பார்)
“உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்”
இதற்கு அவமானமாக உணர்ந்த சந்திரபாபு, மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டது. அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும்.
அதை பற்றி சந்திரபாபு சொன்னது,
“அன்று அவர் வளர்த்துக்கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை, இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன்.”
---
குலேபகாவலி, புதுமைப்பித்தன் வெற்றிகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர் படங்களில் காமெடிக்கு சந்திரபாபுதான் வேண்டும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘சந்திரபாபுவின் காமெடிக்காகவே படத்தை பார்க்கலாம்’ போன்ற பேச்சுக்கள் எம்.ஜி.ஆரின் காதுக்களுக்கு சென்றது.
அதில் இருந்து, “சந்திரபாபு வேண்டாம். அவன் இருந்தால், நான் கால்ஷீட் தரமாட்டேன்” என்று எம்.ஜி.ஆர். கூறியதாக வந்த செய்திகள் சந்திரபாபுவுக்கு தெரிய வந்தது.
ஆனால், அதற்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
---
அடிமைப்பெண் ஷூட்டிங்.
சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் ஏறி குதிப்பதுப்போல் காட்சி. முதலில் ஏறிய சந்திரபாபு, நிலைத்தடுமாறி கீழே விழப்போக, ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்.
சாப்பாட்டு நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட, சந்திரபாபுவுக்கு மட்டும் வரவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடைய சாப்பாட்டை, சந்திரபாபுவுக்கு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிட்டார். கேட்டதற்கு, பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
ஏன் இப்படி உம்மென்று இருக்கிறார் என்று ஜெயலலிதாவிடம் சந்திரபாபு கேட்டதற்கு, ஜெயலலிதா சந்திரபாபுவை விழாமல் தாங்கி பிடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாராம்.
இதை கேட்டவுடன் சந்திரபாபுவுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஏனெனில் சந்திரபாபுவிற்கும், ஜெயலலிதாவின் குடும்பத்திற்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போதே, அவர்கள் வீட்டுக்கு சந்திரபாபு செல்வாராம். ஜெயலலிதாவும் ‘அங்கிள்’ என்று ஓடி வந்து பழகுவாராம்.
---
சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்றொரு படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர், சம்பளத்தின் ஒரு பகுதியை கருப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டதாக சந்திரபாபு, பின்னர் பிலிமாலயா பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்., பூஜைக்கும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கும் மட்டுமே வந்திருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்கவே இல்லை.
நேரே சென்று பேசி பார்க்கலாம் என சென்ற சந்திரபாபுவை, அரை மணி நேரம் கண்ணேதிரே காக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ’நான் நடிகன், நான் கதாசிரியன், நான் வசனகர்த்தா, நான் டைரக்டர் என பெருமைப்பட்ட என்னை, டேய் நீ புரொடக்ஷன் பாயும் கூடத்தான்’ என அப்போது உணர வைத்ததாக கூறியிருக்கிறார் சந்திரபாபு.
கடைசியில் அவரை பார்த்தபோது, கால்ஷீட் பற்றி கேட்டிருக்கிறார். கால்ஷீட் சம்பந்தமாக அண்ணனிடம் பேசிக்கொள்ளும்மாறு எம்.ஜி.ஆர் சொல்ல, அண்ணன் சக்ரபாணியை பார்க்க சென்றார் சந்திரபாபு.
அங்கே அவர்களுக்குள் நடந்த உரையாடல், ஒருகட்டத்தில் முற்றிப்போய், சேரைத்தூக்கி அடிக்கும் நிலைக்கு போய்விட்டார் சந்திரபாபு. இந்த விஷயம் வெளியே பரவி, படம் நின்று போய், அடமானம் வைத்திருந்த சந்திரபாபுவின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்தது. பெயரும் கெட்டுப்போனது. குடி இன்னும் அதிகமாக, குடி கெட்டது.
---
ஒரு பேட்டியில் சந்திரபாபுவிடம் இப்படி கேட்டார்கள்.
எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.
---
கண்ணீரும் புன்னகையும்
முகில்
174 பக்கங்கள்
கிழக்கு பதிப்பகம்
.
20 comments:
புத்தகத்தை மீண்டும் படித்த உணர்வு. நன்றி குமரன் ;)
முன்பே அறிந்த செய்திகள் தான் என்றாலும் தெளிவாக விளக்கமாக இருக்கிறது.
என்னை பொறுத்தவரை எம்.ஜி.ஆரின். பெயரும் புகழும் மீடியாக்களால், சினிமா காரர்களால் மற்றும் அவரது கைக்கூலிகளால் உண்டாக்கப்பட்ட மாயத்தோற்றமே. கருணாநிதியின் மேல் கசப்ப்புணர்வு கொண்டவர்களையும், பிராமனர்களியும் சற்று அதிகமாகவே இக்காரியங்களுக்கு இவர் பயன்படுத்தினார்.
மற்றபடி இவர் ஏழைகளின் பங்காளர் என்ற பெயர் எடுத்தது வெறும் media hype தவிர வேறு ஒன்றுமில்லை.
இவரிடம் பிடிக்காதவர்களை பழிவாங்கி சீரழிக்கும் குணம் இருந்ததை அவர் கூட இருந்தவர்களே சொல்லுவார்களே!
நல்ல பதிவு.
எம்.ஜி.ஆர். திரைத்துறையில் பலரின் வாழ்க்கை சோகத்துக்குக் காரணமானவர். ஆனால் அவர் முதல்வரான பின் ஏழைகளுக்கு பல நன்மைகளும் செய்தவர்.
சந்திரபாபு (பனிமயதாஸ் பர்ணாண்டோ) தூத்துக்குடுக்காரர் என்பதால் இப்பதிவா?
இருவரும் பெரிய நடிகர்கள் ஒரே காலகட்டத்தில். ஒருபடத்துக்கு ஒரு இலட்சம் சம்பளம் கேட்டார் பாபு என்று சொல்வார்கள். அக்காலத்தில் அது ஒரு மாபெரும் தொகை.
இருவருக்கும் மிகப்பெரிய ஈகோ இருப்பது இயற்கையே.
அந்த ஈகோவை வைத்துக்கொண்டும் எம்.ஜி.ஆர பிழைத்தேறி புகழுச்சிக்குச் சென்றார்.
பாபு அந்த ஈகோவினாலே பாதளத்தில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டார்.
கடைசி காலத்தில் தன் தாய்க்கு ஒருவேளை உணவு கூட வாங்கிக்கொடுக்க முடியாமலிருந்தார் என்பது சோகம்.
கக்கு- மாணிக்கம் சொல்வது மிகவும் சரி. ஊடககங்களின் பலத்த ஆதரவு இவருக்கு இருந்தது. இப்போதைய கலைஞர் போல் இல்லாமல் அப்போது கலைஞர் கொள்கை பிடிப்போடு இருந்தார். அதனால் அவருக்கு எதிரான ஊடககங்களின் தூண்டுதலும் ஒரு காரணம். அது மட்டும் இல்லாமல் போகிற இடமெல்லாம் 100, 500 நோட்டுக்களை வீசி மக்களை கவர்ந்து விட்டார்.
இன்னும் எம் ஆர் ராதா எதனால் சுட பார்த்தார் என்று தெரிய வில்லையே?
M.R.Radha ozhunga sutturundha thamizhnadu thappichirukkum.Nalla velai, latha,sarojadevi,venneradai nimmi,manjulavellam mudalamaichar aagale!!!
அவர் முதலமைச்சராக இருந்த கட்டத்தில் தமிழகத்தின் எந்த பகுதியிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை (இப்போதாவது சென்னையை சுற்றி சில தொழில் முன்னேற்றங்கள் தெரிகிறது) இதை இப்போதுகூட யாரும் சொல்வதில்லை. அதேபோல இன்னும் அவருக்கு வாக்கு வங்கி உள்ளது என்பதும் ஒரு மாயையே!!
ஒரு படத்தில் நடிக்கும்போது தயாரிப்பாளரின் மனைவியை சந்திரபாபு “கரக்ட்” செய்யப்போய், தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் முறையிட்டாராம்! தயாரிப்பாளரும் எம்.ஜி.ஆருக்கு வேண்டப்பட்டவராம்! அதனாலேயே சந்திரபாபு படத்தில் நடிக்காமல் கழுத்தறுத்ததாக என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்!
இரண்டு விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை.
ஒன்று எம்ஜியாரை வைத்து படம் எடுப்பது சுலபமான விஷயமில்லை. அதைத் திறம்பட செய்த ஒரே நபர் ஆர்.எம்.வீ மட்டுமே.
சந்திரபாபு யாரைப் பற்றி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் காமென்ட் அடிக்கிற பழக்கம் உள்ளவர் என்று படித்திருக்கிறேன். அந்தக்கால பிரபல ஹீரோயின் ஒருவர் பெரிய பொட்டு வைத்துக் கொண்டு வந்ததைப் பார்த்து,'ஓ... தயிர்க்காரி டோய்' என்று அவர் காமன்ட் அடித்ததாகவும், அதனால் அவர் கோபித்துக் கொண்டு போக, தயாரிப்பாளர் சமாதானம் செய்ய என்று ரகளை ஆகி விட்டதாம்.
இப்படி ஏதாவது தன்னையும் மரியாதைக் குறைவாகப் பேசி விடப் போகிறாரே என்கிற எச்சரிக்கை எம்ஜியாருக்கு இருந்திருக்கலாம்.
http://kgjawarlal.wordpress.com
முகில்,
நான் படித்த உங்களுடைய முதல் புத்தகம் இது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ரொம்ப நன்றி, முகில்.
நன்றி கக்கு - மாணிக்கம்
வருகைக்கு நன்றி சதீஷ்
Jo Amalan Rayen Fernando,
//சந்திரபாபு (பனிமயதாஸ் பர்ணாண்டோ) தூத்துக்குடுக்காரர் என்பதால் இப்பதிவா?//
அப்படியெல்லாம் இல்லை. வாசிக்கும் புத்தகங்கள் எல்லாவற்றை பற்றியும் எழுதும் பழக்கம் உண்டு.
தகவலுக்கும் வருகைக்கும் நன்றி.
நன்றி சம்பத்
வருகைக்கு நன்றி கார்த்திக்கேயன்.
நன்றி ரவிஷா
நன்றி ஜவஹர் சார்
உண்மையா சொல்றதா நெனச்சு கண்டத கக்க கூடாது, அந்த காலத்துல சன் டிவி, தினகரன் பத்திரிகை எல்லாம் இல்லை, எப்பவும் கழிஞர் பாடு பாட..
கக்கு - மாணிக்கம்,
உண்மையா சொல்றதா நெனச்சு கண்டத கக்க கூடாது, அந்த காலத்துல சன் டிவி, தினகரன் பத்திரிகை எல்லாம் இல்லை, எப்பவும் கழிஞர் பாடு பாட..
சந்திரபாபிற்கும் பிரபல நடிகை சாவித்திரிக்கும் இருந்த நட்பினை பற்றி ஒன்றும் இல்லையே ?
Post a Comment