நடு ரோட்டுல நின்னுக்கிட்டு போட்டோ எடுக்கணுமா? அப்படி ஒண்ணும் ரிஸ்க் எடுக்குற அளவுக்கு இதுல வொர்த் இல்லையே’ன்னு நினைக்குறீங்களா? இது காருக்குள்ள உட்கார்ந்து, கார் ரோட்டை கிராஸ் பண்ணும்போது எடுத்தது தான். ஸ்பெஷலா வரும்’ன்னு நினைச்சேன். ப்ச். வரல.
இது திருச்சி-மதுரை சாலையின் ஓரத்தில் நான் பார்த்த ஒரு கிணறு. எவ்ளோ தண்ணி!
ஒருநாள் காலையில் நண்பனுடன் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து காந்திபுரம் வரை நடந்தே பேசிக்கொண்டு சென்றோம். பேசியதை பார்த்துக்கொண்டே இந்த சைக்கிள் தாத்தா சென்றார். சென்றவரை, போட்டோவில் பிடித்து வைத்துக்கொண்டோம்.
கோவை காந்தி பார்க் பக்கமிருக்கும் முருகன் கோவில் இது. கோவிலில் இருந்த கதவின் மேல் ஆண்கள் என்று எழுதி வைத்திருந்தார்கள். மற்றொரு பக்கம், பெண்கள் என்றிருக்கும் என நினைக்கிறேன். எதுக்கு’ன்னு தெரியலை. சின்ன கதவு என்பதால் இடிச்சுக்கிட்டு போக கூடாது என்பதாலா?
திருவண்ணாமலை அருகே எடுத்தது. எங்கே கூட்டிக்கொண்டு செல்கிறார்களோ? :-(
முதல் பகுதியில் பார்த்த அய்யனாரின் குதிரை. அண்ணாந்து பார்த்து எடுத்தது.
அய்யனார் குதிரை - இன்னொரு கோணத்தில்.
வெளியே போகும்போது பூனை குறுக்கே போகக்கூடாது என்பார்கள். இங்கே செருப்பை எடுப்பதற்கே பூனைக்களுக்கு குறுக்கே செல்ல வேண்டியிருக்கிறது.
இப்போதைக்கு அவ்ளோத்தான்!
.
9 comments:
அய்யனார் குதிரையை வேறு கோணங்களிலும் எடுத்திருக்கலாமே?
படங்கள் அருமை.
அனைத்துமே அருமையான பதிவுகள் ...
நன்றி ராமலக்ஷ்மி
ராமலக்ஷ்மி,
அய்யனார் குதிரையின் இன்னொரு கோணத்தையும் சேர்த்துவிட்டேன்.
நன்றி டக்கால்டி
ஊர் ஊரா சுத்துவிங்களோ ... படமும் foot note-ம் அருமை.
photos are good. why dont u give me a chance to post my collection. yes nu sonna i feel happy. no nu sonna i think you are unlucky.
தோழன் மபா,
இவை வெவ்வேறு காலக்கட்டத்தில் எடுத்தது. தொடர்ந்தால், பார்ப்பதால் அப்படி தோன்றலாம். மற்றபடி, சுமாராக ஊர் சுற்றுபவன் தான்.
கிருஷ்ணா,
ரொம்ப ஆசைப்படுறீங்க. கொடுங்க. பார்த்துட்டு போடுறேன். :-)
Post a Comment