ஒரு வருஷத்துக்கு பிறகு, ஒரு தமிழ்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் தான், அவரை பற்றி தமிழகம் அதிகம் பேசியிருக்கிறது.
நம்மூர் இயக்குனர்கள் சிலருக்கு தங்கள் படத்தில் ரஹ்மான் இசை இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கு வாய்ப்பு அமையாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் வேறு இசையமைப்பாளர்களிடம் சென்று, எப்படியாவது தங்களுக்கு வேண்டிய இசையை தரமாக பெற்றுக்கொள்வார்கள். ரஹ்மான் இசையை ரசிக்கும் இவர்கள், வேறு இசையமைப்பாளர்களிடம் பெறும் இசையும், ரஹ்மான் இசையை ரசிப்பவர்களுக்கு பிடிப்பதாக இருக்கும்.
எஸ்.ஜே.சூர்யாவின் ஆரம்ப படங்களுக்கு தேவாதான் இசை. தேவா இசை இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. இயக்குனர் எப்படி கேட்டாலும், அப்படி கொடுப்பார். வசந்த், சூர்யா போன்றவர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும். வாலிக்கு இசை இவர்தான் என்றாலும், படத்தில் சிம்ரன் வாக்மேனில் கேட்கும் பாடலாக ரஹ்மானின் ’அக்கடா’வை சேர்த்திருப்பார்கள். குஷியிலும் இப்படித்தான். நாயகிக்கு பிடித்த இசையமைப்பாளராக ரஹ்மானை வசனத்தில் சொல்லியிருப்பார்.
அதன் பிறகு, எஸ்.ஜே.சூர்யா ரஹ்மானுடன் சேர்ந்துவிட்டாலும், இவர் தேவாவிடம் பணியாற்றிய படங்கள் போல் வெற்றியடையவில்லை. இதேப்போல், மற்ற இசையமைப்பாளர்களிடம் சேர்ந்து வெற்றி கொடுத்த வசந்த், சரண் போன்ற இயக்குனர்கள் கூட ரஹ்மானுடன் இணைந்து தோல்வியடைந்தார்கள்.
ஏற்கனவே தொட்டுவிடும் தூரத்தில் இல்லாவிட்டாலும், இன்றைய ரஹ்மானின் உலகளாவிய வளர்ச்சியால் எட்டாகனியாகிவிட்டார். விண்ணைத்தாண்டி வருவாயா என ரஹ்மானை பார்த்து படைப்பாளிகள் பாடும் நிலை. இன்றைய நிலையில், இளம் முன்னணி இயக்குனர்களுக்கு ரஹ்மானின் ஆல்டர்னெட்டிவ் - ஹாரிஸும், யுவனும்.
யுவனின் ஹிட் ஜோடி செல்வராகவன், ஹிந்தியில் இயக்கும் படத்திற்கு ரஹ்மான் இசை என்றொரு செய்தி முன்பு வந்தது. அமீரும் ரஹ்மானுடன் பணிபுரியும் ஆசையை யுவனுக்கு முன்பே மேடையில் ரஹ்மானுடன் சொன்னார். அதேப்போல், முருகதாஸ் ஹிந்திக்கு கஜினியை கொண்டு சென்றபோது, ரஹ்மானை சேர்த்துக்கொண்டார். இப்படி, எந்நேரமும் ரஹ்மான் சிக்கினால், மற்றவர்களை கைவிடும் நிலையிலேயே இயக்குனர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுவர்தனும் இந்த லிஸ்டில் சேர்வார் என்று கணிக்கிறேன்.
இப்போது ஹாரிஸை விட்டு பிரிந்து, கௌதம் ரஹ்மானுடன் சேர்ந்திருக்கிறார். ஹாரிஸை பிரிந்ததால், ரஹ்மானுடன் சேர்ந்தாரா? இல்லை, ரஹ்மானுடன் சேர ஹாரிஸை பிரிந்தாரா? என்று தெரியவில்லை. ரசிகர்களுக்கு தேவை, நல்ல இசை.
இந்த படத்தின் பாடல்களை லண்டனில் வெளியிட்டு இருக்கிறார்கள். ”வொய் லண்டன்?” என்ற ரஹ்மானின் கேள்விக்கு, “வொய் நாட் லண்டன்?” என பதில் கூறி சமாளித்திருக்கிறார் கௌதம். தமிழ் பட பாடல்களை வெளிநாட்டினர் கவனிக்க செய்யும் ஒரு முயற்சிதான் இது. ரஹ்மானின் புகழ் எல்லை தாண்ட தாண்ட, இனி தமிழ்நாட்டில் வெளியிட்டாலும் கவனம் பெறும். பாடல், படத்தின் தரம் இயக்குனரின் கையில் இருக்கிறது.
ரஹ்மானின் டிஜிட்டல் இசையை ரசிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும், ஹாரிஸின் இசை உடனே பிடித்துவிடும் சாத்தியகூறுகள் இருக்கின்றன. ஆனால், ரஹ்மானை போல புதுப்புது முயற்சிகள் ஹாரிஸிடம் குறைவு. இன்ஸ்டண்ட் ஹிட், ஒரளவுக்கு கியாரண்டி.
விண்ணைத்தாண்டி வருவாயா ஆல்பத்தில் சில பாடல்கள் தான் கேட்டவுடன் எனக்கு பிடித்தது. இது செண்டிமெண்ட் ப்ராப்ளமா? அல்லது, புதிய முயற்சிகளை உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இல்லாமையா? என்று தெரியவில்லை.
கேட்டவுடன் பிடித்த பாடல், சின்மயி, தேவன் பாடிய ”உயிரே உயிரே”. உற்சாகத்துடன் மகிழ்ச்சியை கொண்டு வரும் பாடல் இது. இதில் நடுவில் வரும் பீட்டுடன் கூடிய நாதஸ்வர இசை ரொம்பவும் பிடித்தது.
அடுத்தது, ஸ்ரேயா கோஷலுடன் ரஹ்மான் பாடிய “மன்னிப்பாயா”. இதில் ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தின் “கண்டுக்கொண்டேன்” பாடலின் தாக்கம் சிறிது உள்ளது. இந்த பாடலின் ஸ்பெஷல், பாடலின் இடையில் வரும் திருக்குறள். ரஹ்மான் இசையை ரசித்துக்கேட்கும் எனக்கே, ‘ரஹ்மான் திருக்குறளுக்கு இசையமைக்கப் போகிறார்’, ‘ரஹ்மான் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைக்கப் போகிறார்’ எனும் செய்திகளைக் கேட்கும் போது, மெல்லிய பயம் வரும். அது எவ்வளவு தவறென்பது, இந்த பாடலில் ரஹ்மானின் ட்யூனில் திருக்குறளை கேட்கும்போது தெரிகிறது. அவ்வளவு அழகு.
இளையராஜாவும், ரஹ்மானும் தங்களது குரலில் டூயட் பாடிய பாடலுக்கு நடித்திருக்கும் ஒரே இளம் நடிகர் எனும் பெருமையை இந்த படத்துடன் சிம்பு பெறுகிறார். நடிகர் என்றுக்கூட சொல்லலாம். அட... ரஜினியும் இருக்கிறாரே! இந்த படத்துடன் யங் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார். அடுத்தது, மிடில் ஏஜ், ஓல்ட் என்று செல்லுமோ? எது எப்படியோ, ‘ஒரு இயக்குனரின்’ படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த மணிரத்னத்தின் படத்தில் நடிக்க போவதாக வேறு செய்திகள் வருகிறது. ஒரு ‘டண்டணக்கா’, ‘டணக்குணக்கா’ ஆகிறதே!
மற்றபடி, ’ஓமணப்பெண்ணே’, ’ஹோசான்னா’, ‘கண்ணுக்குள்’ பாடல்கள் ரெகுலர் பாடல்களாகத்தான் தெரிந்தது. ஏதோ க்ரிப் இல்லாதது போல் இருக்கிறது. கார்த்திக் பாடிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தீம் - கொட்டாவி விடும் வகை. ரஹ்மான் என்பதால் உண்டான அதிக எதிர்ப்பார்ப்பினால் கேட்பதால் இருக்கலாம். அல்லது, படத்தின் தன்மைக்கேற்றாற் போல் இருக்கலாம். தமிழ் சினிமா பாடல் என்கிற இலக்கணத்திற்குள் எங்கும் வராத ‘அரோமலே’ பாடலையும், உடனே புரிந்துக்கொள்வதும், ரசித்துக்கேட்பதும் உண்மையிலேயே எனக்கு கடினமானதாகத்தான் இருந்தது.
ஆனால், எல்லாமுமே மென்மையான பாடல்கள். படத்துடன் கேட்கும்போதும், அதற்கு பிறகு கேட்கும்போதும் வேறொரு அனுபவத்தை கொடுக்கலாம். அதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
.
11 comments:
simple saravanan... do listen to the songs for a while(a week)...pls post review about the same album after a week..it will be different comparing to this post....give a try na...
இயக்குனர் வசந்தை இந்த லிஸ்டில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.ஏனென்றால் 'ரிதம்' படத்தின் பாடல்கள் நல்ல ஹிட்டான பாடல்கள்.ரகுமானின் Top-5 தமிழ் படங்களில் 'ரிதமை' தாரளமாகச் சேர்க்கலாம்.
தொடர்ந்து கேட்கும் போது பிடித்துவிடும், கார்த்திக். முதல் முறை கேட்கும் போது முழுமையாக பிடிக்காமல் போனதற்கான காரணத்தை தான் சொல்லியிருக்கிறேன்.
மோகன், பாடல்கள் ஹிட்தான். நான் படங்களின் தோல்வியை சொன்னேன்.
ரிதம் , நீயூ பாடல்கள் வெற்றி பெறவில்லயா என்ன
படங்களை சொன்னேன், பேநா மூடி... அதுவும் இயக்குனர்களின் முந்தைய படங்கள் அளவிற்கு வெற்றிப்பெறவில்லை என்றே கூறியிருந்தேன்...
Charan+ARR - Which movie?
Latest News:
Ajith's 50th film, music by ARR.
Ajith + Gautham + ARR + Dayanithi
ஒரு டண்டனக்கா டனக்குனக்கா ஆகிறதே...
ஆஹா.. என்ன தலைப்புங்க...
“வி.தா.வ” படத்துக்கு நான் விமர்சனம் எழுதும் போது இந்தப் பேர்தான் வைக்கப் போறேன்.. வைக்கலாம்ல??? தப்பில்லியே????
மிச்சபடி “வி.தா.வ” இசை பற்றி நீங்க போட்டிருக்கும் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லீங்க!!~!!
ஷாஜி,
சரணும், ரஹ்மானும் இணைந்தது ‘அல்லி அர்ஜூனா’
தாராளமா யூஸ் பண்ணிக்கோங்க, கடைக்குட்டி...
Post a Comment