கோவா
-கோவா ஆடியோ ‘சிம்பிள்’ வெளியீடு
-சௌந்தர்யாவிற்கு திருமணம்
ரஜினி மேற்கண்ட இரண்டு முடிவுகளையும், கோவா படம் பார்த்துவிட்டு எடுத்திருப்பார்.
எவ்வளவு தைரியம் இருந்தால், வெங்கட் பிரபு இப்படி உண்மையை சொல்லியிருப்பார்? ‘A Venkat prabhu holiday' என்று படம், போஸ்டர் எங்கும் உண்மையை சொல்லியிருக்கிறார்.
முதல் படத்தின் கதை, வேறொரு இயக்குனருடையது என்றார்கள். இரண்டாவது, ஆங்கில படத்தின் தழுவல் என்றார்கள். சொல்லவே நல்லாயில்லை. இருந்தாலும்...
இதிலும், அப்படி ஏதாவது செய்திருக்கலாம்.
---
தமிழ்ப் படம்
படத்தின் ஆரம்ப டைட்டிலில் இருந்து, இறுதிவரை இப்படி சிரித்து சிரித்து பார்க்கும்படி ஒரு தமிழ்ப்படம் வந்திருக்கிறதா?
ரஜினியில் இருந்து சிம்பு வரை, மணிரத்னத்தில் இருந்து ஷங்கர் வரை, ஏன் கேமராமேன், டான்ஸ் மாஸ்டர் என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.
ஒரு படம் பார்க்கும்போது, தியேட்டரில் இங்கு இங்கு சிரித்தார்கள் என்று கைவிட்டு எண்ணி சொல்லிவிடலாம். இதில் படத்தின் எல்லா காட்சிகளையும் சொல்லவேண்டும்.
வெண்ணிற ஆடை மூர்த்தியை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன். இவர் ஒரு காலேஜ் ஸ்டுடண்ட். ஜாவா புத்தகத்துடனேயே அலைகிறார். டபுள் மீனிங் பேசும் போதெல்லாம் தலையில் வந்து காக்கா கொத்துகிறது.
என்ன, படத்தின் இறுதி கொஞ்சம் இழுவையாகிவிட்டது. ஆனாலும் இறுதிவரை சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள்.
மற்ற படங்களில், ஒரிரு சீன்களில் தமிழ் சினிமாவை கிண்டல் செய்வார்கள். இதில் படம் முழுக்க. இது போல் ஒரு புது வெரைட்டியை தமிழில் அறிமுகம் செய்ததற்கு அறிமுக இயக்குனர் அமுதனுக்கு வாழ்த்துக்கள்.
---
ஜக்குபாய்
ஒரே வாரத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகியிருப்பதால், சரத்-கவுண்டமணி-கே.எஸ்.ரவிக்குமார் என இருந்தும் சுமாரான திரையரங்குகளில் மட்டும் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது. நான் பார்க்கவில்லை. பார்க்கவும் போவதில்லை.
ஸ்ரேயாவிற்கு அப்பாவாக நடித்ததற்கு சரத்குமாருக்கு பாராட்டுக்கள். ஒரு பேட்டியில், இது பற்றி கேட்டதற்கு, “எனக்கும் அந்த வயதில் ஒரு பெண் இருக்கிறாரே?” என்றார். நல்லவேளை, ஸ்ரேயாவுக்கு அம்மாவாகவும் டபுள் ஆக்ஷனில் ஸ்ரேயாவை நடிக்கவைக்கவில்லை.
இறுதியில் வழக்கம்போல், கே.எஸ்.ரவிக்குமார் வருவதால் மட்டுமே இது கே.எஸ்.ரவிக்குமார் படம் என்று தெரிகிறது. மற்றபடி, ஏதோ புதுமுக இயக்குனரின் முதல் படம் போல் இருக்கிறது என்கிறார்கள்.
இந்த வாரம், ஒரே திரையரங்கில் இரண்டு வேறுவேறு புதிய படங்கள் ஓடுவதால், தொலைவில் இருந்து வந்திருந்த நண்பர் குழுக்கள், இருந்து இரண்டு காட்சிக்கள் பார்த்துவிட்டு சென்றார்கள்.
.
6 comments:
அப்படின்னா இந்த ஆண்டின் முதல் உண்மையான வெற்றி படம் அது "தமிழ்படம்" சரிதானே
:))
தமிழ்ப் படம் பாத்துட்டேன்...பதிவும் போட்டுட்டேன்...
எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது!!!!
கோவா இனிமேதான்....
ஜக்குபாய் - சாரி பாய் - திருட்டு விசிடி கூட வேண்டாம்....
ஆமாம் arumbavur
வாப்பா ஜெட்லி
//ஜக்குபாய் - சாரி பாய் - திருட்டு விசிடி கூட வேண்டாம்....//
:-)
Post a Comment