Thursday, January 28, 2010

நாட்டு சரக்கு - கேமரூன் அடிச்ச காப்பி

இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்மபூஷண். நிருபர்கள், ஒரு கேள்வியை இருவரிடமும் கேட்டார்கள்.

ரஹ்மானுக்கும் பத்மபூஷண் விருது தந்திருக்கிறார்களே?

இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

இளையராஜாவுக்கும் பத்ம பூஷண் விருது கிடைத்திருக்கிறதே?

இளையராஜாவுக்கும் எனக்கும் ஒரே நேரத்தில் பத்ம பூஷண் விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம். எங்க அப்பா சேகர் இசையில் இளையராஜா வாசித்திருக்கிறார். இளையராஜா இசையில் நான் வாசித்திருக்கிறேன். அந்த வகையில் விருது கிடைத்திருப்பது குடும்ப சந்தோஷம்.


---



ஐபாட், ஐபோனை தொடர்ந்து ஐபேட் வெளியிட்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஸ்லேட்டு போல இருக்கும் இதில் இணைய உலாவல், பாடல்கள், படங்கள், புத்தகங்கள், கேம்ஸ் என எல்லாம் சாத்தியம். புதுசு, புதுசா யோசிச்சு வெளியிடுறாங்க. ஆரம்பத்தில் அவர்களுடைய சிபியூ பாக்ஸ் பார்த்து வியப்படைந்திருக்கிறேன். சின்ன டிபன் பாக்ஸ் சைஸ் தான் இருக்கும்.

இப்ப, இன்னுமொரு புது சாதனம். இந்த வடிவத்தில் ஈ-புக் வாசிப்பது சரியாக, நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இனி, இந்த மாடலை வைத்துக்கொண்டு பிற நிறுவனங்களும் இதுபோல் வெளியிடும். இந்தியர்களுக்காக, ஏதேனும் சைனா நிறுவனம் உழைக்க ஆரம்பித்து இருக்கும்.

---

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்த நான்-வெஜ் ஹோட்டலில் இப்படி எழுதிவைத்திருந்தார்கள். “மாமிச உணவு சாலை”. படிக்கும்போது, என்னவோ போல இருந்தது. அசைவ உணவகம் என்று எழுதியிருந்தாலாவது பரவாயில்லை. அதனால் தானோ என்னவோ, நான் பார்த்தபோது, கடையில் கூட்டமே இல்லை.

---

அங்கிருந்து கிளம்பிய ஒரு ரயிலுக்குள் பார்த்தப்போது, ஒரே சிவப்பு நிற உடையாக இருந்தது. ஒரு கோச் என்றில்லாமல், எல்லா கோச்சிலும் அப்படியே. ரயிலே அப்படித்தான். ஈரோடு - மேல்மருவத்தூர் ஸ்பெஷல். சில நாட்கள் கழித்து மணியாச்சி ரயில் நிலையத்தில் பார்க்கிறேன். திருநெல்வேலி -மேல்மருவத்தூர் ஸ்பெஷல். எத்தனை?

கோவில் பற்றி தெரியாது. ஆனால், பெண்களை அதிகம் கவரும் கோவில் என்பதால் பெண்கள் கூட்டம் அதிகம் என நினைக்கிறேன். பெண்கள் போனப்பிறகு, வீட்டில் இருந்து ஆண்கள் என்ன செய்வது? வீட்டை பூட்டிவிட்டு எல்லோரும் போக வேண்டியது தான்.

ரயில்வே, ரயில் விட வேண்டியது தான்.

---

அவதார் பார்த்துவிட்டு வந்த கேரள நண்பர், வாயில் அடித்துக்கொண்டார். ”மோகன்லால் நடிச்ச ‘வியட்நாம் காலனி’ படக்கதையை (தமிழில் பிரபு நடித்தாரே! அதே தான்) அப்படியே காப்பி அடிச்சிட்டு, டைட்டிலில் ஒரு நன்றிக்கூட போடலியே” என்று புலம்பியவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு யோசித்து பார்த்தால், அட ஆமா!. ஒரு காலனியை அவுங்க பட்ஜெட்டுக்கு ஏத்தப்படி, வேற்றுக்கிரகமாக மாற்றியிருக்கிறார்கள்.

பாத்துக்கோங்க, ஹாலிவுட் டைரக்டர்களும் காப்பி அடிக்கிறாங்க.

---

’வியட்நாம் காலனி’ நல்ல ஜாலியான படம். படத்தை நினைச்சா, உடனே நினைவுக்கு வருற காமெடி இது.

கவுண்டமணி பசியோடு வீட்டுக்கு வருவார். வீட்டில் சாப்பிட உணவிருக்காது. தண்ணீர் குடிக்கலாம் என்று குடத்தின் அருகே இருக்கும் டம்ளரை எடுப்பார். உள்ளே கொஞ்சுண்டு தண்ணீர் இருக்கும். அதை குடிக்காமல், டம்ளரை அலசி வெளியே ஊற்றிவிட்டு, குடத்திற்குள் பார்த்தால் தண்ணீர் இருக்காது. அவருக்கே உரிய எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பார்.

பிறகு, கீழே மனோரமா வீட்டில் போய் சாப்பாடு இருக்கிறதா என்று கேட்பார். மனோரமா அதற்கு,

"இப்பத்தான் மாட்டுக்கு போயி கொட்டினேன்."

கவுண்டமணி பரிதாபமாக, "மாடு தூங்கியிருக்குமா?"

.

16 comments:

பாலா said...

கவுண்டமணி பரிதாபமாக, "மாடு தூங்கியிருக்குமா?"

Karthick said...

Thirukural with nice music and the meaning....see it will be usefull for you

http://www.raaga.com/channels/tamil/tagged.asp?tg=Thirukkural

malarvizhi said...

nice blog

Anonymous said...

Gounder comey excellent..

adhuvum andha expression superb...

I've also seen Erode Railways hotel so many times. No rush.

-Mohan

palPalani said...

/*
கவுண்டமணி பரிதாபமாக, "மாடு தூங்கியிருக்குமா?"
*/
செம்மையான timing comedy. அயோ ரொம்ப சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

சிங்கக்குட்டி said...

:-)

சாமக்கோடங்கி said...

மாடு இந்நேரம் குடிச்சிருக்குமா...?

இது தான் சரியான வரிகள்..
சில விஷயங்கள் காப்பி அடிக்கப் படாமலேயே, பலரின் மனதில் தோன்றலாம். குழந்தை தாயிடம் பால் குடிப்பதைப் போல...
உங்கள் சேகரிப்பு மிக அருமை..
நன்றி...

சரவணகுமரன் said...

வாங்க நெகமம்

சரவணகுமரன் said...

கார்த்திக், ஒண்ணே ஒண்ணு கேட்டேன்...

விண்ணைத்தாண்டி வருவாயாவிலும் ரஹ்மான் சில குறள்களை பாடலில் சேர்த்திருக்கிறார்.

சரவணகுமரன் said...

நன்றி மலர்விழி

சரவணகுமரன் said...

நன்றி மோகன்

சரவணகுமரன் said...

நன்றி பழனி

சரவணகுமரன் said...

வாங்க சிங்ககுட்டி

சரவணகுமரன் said...

ஆமாங்க பிரகாஷ்...

காப்பி விஷயம்-சும்மா காமெடியா சொன்னது...

நன்றி...

Karthick said...

Yes yes...Anbudamai..Anbirkum undo adaikkum thaal...Anbilar ellam thamakuriyar....

Naresh Kumar said...

வியட்நாம் காலணில்லாம் கவுண்டமணியோட அராஜகத்தோட உச்சகட்டம்!!!!

ஆனா அவதாரை விட வியட்நாம் காலணி இன்னும் நல்லாயிருக்குமே!!!!