Wednesday, January 27, 2010

நைட்டி!



என் ஆறு வயதில் அம்மா சொன்னாள்...
அந்த சிலோன்லருந்து வந்துருக்குற
ஸ்டெல்லா போட்டிருக்குறா...
துணியா அது... அங்கி மாதிரி...
நைட்டியாமா...
என் பதினொரு வயதில் திரும்பவும் சொன்னாள்...
எல்லாருமிப்ப போட்ட நைட்டியோடையே
கடை வரைக்கும் வராளுங்க...
அதுங்களுக்கிருக்கோ இல்லையோ...
நமக்கு வெக்கமா இருக்கு...
ஓரிரு வருடத்தில் திரும்பவும் சொன்னாள்...
அக்காவுக்கு நைட்டி போட்டா
நல்லா இருக்கு...
புள்ள துணி வெலகாம தூங்குறா...
கடை வரை வந்த அக்காக்களும்,
ஆரம்பித்து வைத்த ஸ்டெல்லாவும்
கண்காணாத தூரத்திலிருக்க...
சென்ற முறை ஊருக்கு போயிருக்கையில்
கதவு திறந்த அம்மா நைட்டியில் நின்றாள்...!!!

-மகேந்திரன்.

.

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கருத்து..

pudugaithendral said...

இதைப்பத்தி நான் ஏற்கனவே புலம்பி தீத்தாச்சு :( :)

நரேஷ் said...

நல்லாயிருக்கு!!! வாழ்த்துக்கள் மகேந்திரன்...

Anonymous said...

Krish:
CHANGE: THE ONLY THING THAT NEVRE CHANGES... super kavithai ithai life kudavum compare panalam super...........:)

மகேந்திரன் said...

நன்றி முத்துலெட்சுமி, புதுகைத் தென்றல், நரேஷ், கிருஷ்.

vidivelli said...

கவிதை.பிடிச்சிருக்கு........

அன்புடன் நான் said...

நல்லது....

புதிய கண்ணோட்டத்துக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

Naan kalyanathukku potta oreee condition. Ponnu nighty podak koodathu. Innaikku varaikum, appdiye poittu erukku. Nalakku en ponnu periyavalana... Enna nadakumnnu teriyillai....