கோவா படத்தின் லேட்டஸ்ட் ட்ரெய்லரில், ஆங்கிலத்தில் கம்பீரமாக ஒரு வாய்ஸ் வருகிறதே? ரஜினியுடையதா? ரஜினியுடையதாக இருந்தால்...
சூப்பர் ஸ்டார் வாய்ஸை இப்படி ஒரு மொக்கை பசங்க படத்துக்கு யூஸ் பண்ணிட்டாங்களே! என்ன பண்றது? ஒரு படத்தை தயாரிச்சு, வெளியிடுறதுக்குள்ள என்னல்லாம் பண்ண வேண்டி இருக்குது? சென்னை-28 ஆரம்பத்துல எஸ்.பி.பி. (அவருதான் அதுக்கு தயாரிப்பாளர்) பேசுனாரு. இதுல தலைவர் பேசுவாரோ?
கிராமத்து பசங்க கோவாவுக்கு போறதும், அங்க நடக்குற விஷயங்களும் தான் கதை’ன்னு தெரியுது. எனக்கு பயணம் பிடிக்கிற மாதிரி, பயணக்கதைகளும் பிடிக்கும். தவிர, வெங்கட் பிரபுவின் முந்தைய இருபடங்களுமே பிடித்திருந்ததால், இதையும் பார்க்கும் ஆர்வம் அதிகமிருக்கிறது. இல்லனாப்புல, விட்டுடவா போறோம்?
வெங்கட் பிரபுவிடம் ”படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்களே?” என்று கேட்டதற்கு, ”படத்துல வல்கரா எதுவும் இருக்காது. படத்தோட கன்டென்ட் அப்படி” என்றார். எப்படியோ!
”சின்ன பசங்க வர மாட்டாங்களே?” என்றதற்கு,
“ஹி... ஹி... யாரு சொன்னா? இப்பத்தான் வருவாங்க.” என்று சிரித்தார். இப்படி ஒரு இயக்குனர பார்க்க முடியாது!
---
இளையராஜா-கங்கை அமரன் குடும்ப வாரிசுகள் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். 5 பாடகர்கள் ஒவ்வொரு வரியையும் தங்களுக்குள் ஒற்றுமையாக பிரித்துக்கொண்டு பாடியிருப்பது நன்றாக இருக்கிறது. இளையராஜாவின் ஜீன் பாட்டின் மெட்டில் தெரிகிறது.
எஸ்.பி.பி.யின் வாரிசும், மலேசியா வாசுதேவனின் வாரிசும் இன்னொரு பாடலை பாடியிருக்கிறார்கள். அப்புறம் இளையராஜாவும், எஸ்.பி.பி.யுமே இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். "வாலிபா வா வா" என்ற இந்த பாட்டின் நடுப்பகுதி, முதல்வன் "அழகான ராட்சசி" போல் எனக்கு படுகிறது. ராகரீதியாக ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதோ?
"ஏழேழு தலைமுறைக்கும்" பாடல் கேட்டவுடன் பிடித்தாலும், போக போக அஜிஸ், ஆண்ட்ரியா பாடிய "இது வரை இல்லாத உணர்வு" பாடல்தான் பிடிக்கும் என தோன்றுகிறது.
"பட்டிக்காட்டை விட்டுபுட்டு பட்டணத்தில் குடிபுகுந்து
மெட்டுகளை கட்டித்தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு"
"வயலுல விளைஞ்ச நெல்லு, நகரத்த தேடி வந்து
பசிகளை தீர்ப்பதுபோல் பாரு எங்க கதை!"
என்று இந்த பாடலில் கங்கை அமரனின் அருமையான வரிகள் இருக்கிறது.
ராஜா பெருமையையே இங்க பல பேரால தாங்க முடியலை. இதுல குடும்ப பெருமை வேறயா?
---
வெங்கட் பிரபு, சென்னை-28 யிலும், சரோஜாவிலும் ”பாரதிராஜாவின் வெள்ளை உடை தேவதைகள்”, “என்ன கொடுமை சரவணன்?”, “ஐ யம் கார்னர்டு, ஹெல்ப் லெஸ்” போன்ற வசனங்கள் மூலம் பல தமிழ் படங்களை, கலைஞர்களை கிண்டல் அடித்திருப்பார்.
அதையே முழுக்களமாக எடுத்துக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள், ஒரு நக்கல் கும்பல். இயக்குனர் அமுதன், மிர்ச்சி சிவா, எம்.எஸ். பாஸ்கர் என இந்த படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சேர்ந்து பேசினாலே செம காமெடியாக இருக்கிறது.
ட்ரெய்லர் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. பாட்டு கேட்டாலும் சிரிப்பு வருகிறது. படத்தில் சிவாவுடன் வரும் யூத் ப்ரெண்ட்ஸ் - எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி & மனோ பாலா. ஜீப்பில் நாயகியுடன் சிவா போகும் போது, ஒரு கோக் டின் வந்து விழுகிறது. முன்னால் செல்லும் வண்டியை பார்த்து சிவா கத்துகிறார். “மிஸ்டர் அன்புசெல்வன் ஐஏஎஸ்....”
நக்கல் படம் என்று அமெச்சுராக எடுக்கவில்லை. காட்சிகள் ரிச்சாக இருக்கிறது. தயாநிதி அழகிரி தயாரித்திருக்கிறார். ஷங்கரிடம் கேட்டாலும் தயாரித்திருப்பார். என்ன, அவர் படத்தை இப்படி கிண்டல் அடித்திருக்கமுடியாது. ஷங்கர் எந்திரனுக்கு அழைத்த நிரவ் ஷா, இதற்கு ஒளிப்பதிவு. அறிமுக இசையமைப்பாளர் கண்ணன் போட்டிருக்கும் மெட்டுக்கள் அனைத்தும் சட்டென்று பற்றிக்கொள்ளும் வகை.
ஹீரோ டைட்டில் சாங்கில் “தயிர்ல போட்ட தயிர் வடை, போடலைன்னா மெது வடை... ஓட்டை இருந்தா ஓட்டை வடை” என அரிய தத்துவங்கள் வருகிறது. பாடல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஹீரோ எந்த கலர் தமிழன் என்று இப்படி சொல்கிறார்கள்.
”பச்சை மஞ்ச கறுப்பு தமிழன் நான்...”
”பச்சை எல்லோ பிங்க் தமிழன் நான்...”
”பச்சை மஞ்ச ஒயிட் ரோஸ் தமிழன் நான்...”
”பச்சை மஞ்ச ஆரஞ்சு தமிழன் நான்...”
“எல்லா கலரு தமிழனும் நான்...”
இன்னொன்று, தமிழ் படங்களில் வந்த புரியாத பாடல் வரிகளை சேர்த்துவைத்து ஒரு பாடல்.
”ஓ! மஹசியா ஓ! மஹசியா
நாக்க முக்க நாக்க, ஒ ஷக்கலாக்கா
ஓ! ரண்டக்கா”
அதிகமாக அடி வாங்கி இருப்பது, ஹாரிஸ் தான். ஹரிஹரன், ஸ்வேதா பாடியிருக்கும் இந்த பாடல், அருமையான மெலடி. நியூசிலாந்தில் எடுத்திருக்கிறார்கள். கேட்க கேட்க முணுமுணுக்க வைக்கிறது. நம்மையறியாமல் முணுமுணுக்கும்போது, வந்து விழும் வார்த்தைகளை யோசித்துப் பார்த்தால் கிண்டல் செய்யப்பட்டிருப்பது தமிழ்ப்பட இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல, ரசித்து கேட்கும் ரசிகர்கள் நாமும் தான் என்று தெரிகிறது.
காமெடிக்கு கியாரண்டி கொடுத்தப்படி இந்த வாரம் வெளியாகும் இவ்விரு படங்களும், கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் படத்தில் ஹாலிவுட் தரத்தையும், பேண்டஸி கதையில் சீன்-பை-சீன் லாஜிக்கையும் தேடிக்கொண்டிருக்கும் சிலருக்கு மன உளைச்சலிருந்து ஒய்வு கொடுக்குமா என்று பார்ப்போம்.
.
15 comments:
சிரிக்க மறந்த திரையுலகம் மீண்டும் சிரிக்க இந்த படங்கள் உதவி புரியும் என நினைக்கிறேன்
இந்த படங்களின் வெற்றிதான் சிலஅரை குறை நடிகர்களின் கொட்டதை அடக்கும் அவர்கள்
mrX,& mrY
இந்த வாரம் காமெடி சரவெடிதான். :-)
உண்மைதான் நண்பரே...நானும் டிரெலர் பார்த்தேன்..
omagasiya location is not New zealand. its Sri lanka
கடைசி 'பாரா' வை மிகவும் இரசித்துப் படித்தேன்!
arumbavur,
ரொம்பத்தான் தெளிவா சொல்லியிருக்கீங்க, x, y'ன்னு... :-)
ஆமாங்க மை பிரண்ட்
நாடோடி, ரஜினிதானா?
அனானி,
நான் பாட்டு ஷூட் பண்ணின இடத்தை சொன்னேன். நீங்களும் அதைத்தான் சொல்றீங்களா?
It's remake of Hang Over, a hit hollywood movie
வெள்ளிக்கிழமை தமிழ் படத்துக்கு புக் பண்ணிட்டோம்ல!!! படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும், முக்கியமாக பாடல் ரிலீசில் அந்த கும்பல் பண்னிய அழிச்சாட்டியமும் இதை நம்ம ஆளுங்க விமர்சனம் பண்றதுக்குள்ள பாக்கனும்னு போல இருக்கு!!!
மின்னல்லாம் ஒரு படம் பாக்கனும்னா வலைப்பதிவுல விமர்சனம் படிச்சிட்டு போவேன்...
இப்பல்லாம் படத்துக்கு போற வரைக்கும் வலைப்பதிவுகளை பாக்காம இருக்க வேண்டியிருக்கு!!! என்ன கொடுமை சரவணன் இது:))))))
////காமெடிக்கு கியாரண்டி கொடுத்தப்படி இந்த வாரம் வெளியாகும் இவ்விரு படங்களும், கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் படத்தில் ஹாலிவுட் தரத்தையும், பேண்டஸி கதையில் சீன்-பை-சீன் லாஜிக்கையும் தேடிக்கொண்டிருக்கும் சிலருக்கு மன உளைச்சலிருந்து ஒய்வு கொடுக்குமா என்று பார்ப்போம்.////
;)
//It's remake of Hang Over, a hit hollywood movie
, ஹேங் ஓவர கொத்து புரோட்டோ போடாம இருந்தா சரி
கோவா - காமெடி கலாட்டா. இரண்டாம் பாதி சற்றே இழுவை, இருந்தாலும் நீண்ட நாட்களுக்குப் பின் மனம் விட்டு சிரித்தேன்..! இங்கே தமிழ் படம் ரிலீஸ் ஆகவில்லை
intha padaththai paarthapiragaavathu nam tamil herokkal thirunthuvaarkala...!?!?!
Post a Comment