இது போன வருடம் இந்நேரம் எழுதியது. இதோ இன்று இந்த பாலத்தை (Bangalore Elevated National Highway) திறந்துவிட்டார்கள். பாலு திறக்க வேண்டியது. ம்ம்ம். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல்நாத் துவங்கிவைக்க வேண்டியதாகிவிட்டது.
தேசிய நெடுஞ்சாலை அமைந்த இந்தியாவின் நீளமான பாலம் இது தான் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது - இந்தியாவின் நீளமான பாலம். ஆனால், அது தேசிய நெடுஞ்சாலை அல்ல.
2008 செப்டம்பரில் முடியவேண்டிய பாலம். 2009 ஏப்ரலில் திறக்கப்படும் என்று நீட்டிக்கப்பட்டு ஒரு வழியாக இன்று திறந்துவிட்டார்கள். கட்டி முடிக்க ஆன செலவு அதிகமில்லை. 776 கோடி தான். கூடுதலாக 100 கோடி ஆனது என்கிறார்கள். அவதார் என்கிற மூன்று மணி நேரம் ஓடுகின்ற பொழுதுபோக்கு சினிமா எடுக்கவே 1200 கோடி ஆகும் எனும்போது, நாட்டிற்கு தேவையான சாலைக்கு 800 கோடி என்பது ஓகே.
இந்த பாலத்தில் மடிவாளா தாண்டி பொம்மன்னஹல்லியில் ஏறிவிட்டோம் என்றால் ஒரே மூச்சில் பத்து கிலோ மீட்டர் தள்ளி எலக்ட்ரானிக் சிட்டியில் இறங்கிவிடலாம். ஓசூர் செல்லவேண்டி இருந்தால், இந்த பாலத்திற்கு பிறகும் எங்கும் நிற்க வேண்டியதில்லை. பொம்மசந்த்ரா, சந்தாபுரா, அத்திப்பள்ளி என தொடர்ந்து இருக்கும் பாலங்களால் நிமிடங்களில் ஓசூர் வந்து சேர்ந்துவிடலாம்.
இரவு பாலம் முழுக்க தகதகவென வெளிச்சத்தில் ஒளிர்கிறது. இன்று முதல்நாள் என்பதால், சீரியல் செட் வேறு. ஒரு போஸ்ட்டில் மூன்று விளக்குகள். மார்கழி மாத பனியில், காலை நேரங்களில் இந்த வெளிச்சம் தான் சாலையை காட்டுகிறது.
பெங்களூர் சாலைகள் எல்லா இடங்களிலும் ஏறி ஏறி இறங்கும். அதன் மீது கட்டப்பட்ட இந்த பாலமும் ஏறி ஏறி இறங்குகிறது.
நடுவே பார்க்கிங் செய்ய ஒரு இடம் இருக்கிறது. இன்று அது பிக்னிக் ஸ்பாட் போல இருந்தது. சிலர் நண்பர்களுடனும், சிலர் கேர்ள் பிரண்ட்ஸ்களுடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
அதிகப்பட்சம் 80 கிலோமீட்டர் ஸ்பீடில் போகலாம் என்கிறார்கள். ஆனால், மக்கள் பறக்கிறார்கள். இந்த படத்தை பாருங்கள்.
தகவல் சொல்ல எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேகள், வாகன ஓட்டத்தை கண்காணிக்க கேமராக்கள், ஏதேனும் வண்டி நின்று விட்டால் மேலிருந்து கீழிறக்க கிரென் என ஏற்பாடுகள் பல.
டோல் கட்டியே இந்தியன் நொந்துருவான் போல இருக்கே? இந்த பாலத்தில் போகவும் கட்டணம் தான். பைக்கிற்கு பத்து, காருக்கு முப்பது. ஒரு மாசத்திற்கு என்று பாஸ் வாங்கிக்கொள்ளலாம். இது ஸ்மார்ட் கார்டில் வருகிறது. எலக்ட்ரானிக் டோலும் இருக்கிறது. அதாவது உங்கள் காரின் உள்ளே ஒரு சின்ன சாதனத்தை நிறுவிவிடுவார்கள். நீங்கள் கேட் பக்கம் வரும்போதே, கேட்டில் இருக்கும் இன்னொரு சாதனம் உங்கள் காரில் உள்ள சாதனத்துடன் தொடர்புக்கொண்டு அதற்கேற்றாற்போல் கேட்டை திறந்துவிடும்.
மேலும் டீட்டெயில்ஸ் இங்கே.
ஓசூர் போறவங்க, மேலே போனாத்தானே காசு’ன்னு கீழே போனாலும், அத்திப்பள்ளியில் பிடுங்கிவிடுவார்கள். ஆனால், நல்லவேளை அங்கு பைக்கிற்கு கிடையாது.
இன்றும், இன்னும் சில நாட்களும் டோல் கிடையாது. எல்லாரும் ஜாலியா ஏறி இறங்கிட்டு இருக்காங்க. வழக்கமான சாலையாகத்தான் மேலே பாலத்தில் தெரிந்தாலும், ஓரத்தில் போகும்போது, பக்கமிருக்கும் உயர்ந்த கட்டிடங்களால், நாம் இருக்கும் உயரம் உணர்ந்து, ஒரு கிறுகிறு உணர்வு வரத்தான் செய்கிறது.
படங்களை பெரிதாக காண க்ளிக்கவும். ஏதேனும் உயரமான பில்டிங் மேலிருந்தோ, ஹெலிகாப்டரில்(!) இருந்தோ எடுத்தால், இன்னும் அருமையாக வரும்.
ஏர்போர்ட் ரன்வே என்று நினைத்து, பைலட் யாராவது ப்ளைட்டை இங்கு இறக்கிவிடக்கூடாது.
.
26 comments:
thanks for sharing, can you post photos taken at day time
புகைப்படங்கள் நல்லா வந்திருக்குங்க. பகிர்வுக்கு நன்றி. அங்கயும் வச்சிட்டாங்களா டோல்! நடத்தட்டும்
நான் சென்ற மாதம் பெங்களூர் வந்தபொழுது அந்த பாலத்தை படம் எடுக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். ஆனால் உங்கள் பதிவில் உள்ள படங்களை பார்த்த பொழுது நானே எடுத்தது போல் இருக்கிறது.
supern ganna
கடைசியில வெச்சீங்க பாருங்க பன்ச்சு. ஆமா, நம்ம பணத்துலேயே பாலத்தக் கட்டி, நம்ம கிட்டே பணம் புடுங்குரான்களே, இது என்னங்க அநியாயம்.அப்புறம் கவர்மென்ட் எதுக்கு?
இது பரவால்ல, பாலம், சூப்பரா பெருசா இருக்கு. 10 கிமி ன்னு சொல்லும்போது, வாகன நெரிசல் கொஞ்சம் கொறையும்.ஆனா, கோயம்புத்தூர் ஜிபி சிக்னல் கிட்ட ஒரு பாலத்த கடந்த 5 (எனக்கு தெரிஞ்சு) கட்டிகிட்டிருந்தாங்க)இப்பத்தான் ஒரு வழியா முடிச்சாங்க. கட்டத்தொடங்கும்போது இருந்த ட்ராபிக்க விட இப்ப 5 மடங்காயிடுச்சு. பாலம் கட்டினதுனால இப்ப அங்க நெரிசல் அதிகம். ஏன்னா, நுழைவு ரொம்ப குறுகல்.பாலத்து மேல போரவுக எல்லாம், தலைல அடிச்சுகுறாங்க.இதுல என்ன காமெடின்னா நேத்து அந்த கொடுமைக்கு திறப்பு விழா வேற. விழா மேடையோட அலங்கரிப்ப பாத்தா, பாலத்துக்கு ஆன செலவ விட அதிகமா ஆகும்போல.. என்ன கொடும சார் இது...
படங்கள் அருமை,
ஹைதைக்கு போட்டியா பெங்களூர். ம்ம்ம் நடக்கட்டும். எப்படியோ நாடு முன்னேறினா சரி
Photos are superb. thank are pictures.
நம்ம ஊருல எப்ப பாஸ் இது மாதிரி கட்டுவாங்க.
//மார்கழி மாத பனியில்,//
தை பிறந்து ஒரு வாரம் ஆச்சு..
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
அருமையான தகவல்கள்
ஊருக்கு வந்தே ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
தங்களின் வலைப்பதிவின் வாயிலாக பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.
நன்றி நண்பரே
நன்றி குப்பன்... விரைவில் பதிவிடுகிறேன். ஒரு வருடம் முன்பு எடுத்தது இங்கே இருக்கிறது.
http://www.saravanakumaran.com/2009/01/blog-post.html
நன்றி எட்வின்
// ஆனால் உங்கள் பதிவில் உள்ள படங்களை பார்த்த பொழுது நானே எடுத்தது போல் இருக்கிறது.//
அருண், நீங்க நல்லா எடுப்பிங்க தானே? :-)
பிரகாஷ்,
Build - Operate - Transfer model என்கிறார்கள். அப்ப நேரடியா நம்ம பணம் இல்லதானே?
//விழா மேடையோட அலங்கரிப்ப பாத்தா, பாலத்துக்கு ஆன செலவ விட அதிகமா ஆகும்போல//
:-))
ஆமாங்க புதுகைத்தென்றல்.
நன்றி நவநீதகண்ணன்
அக்பர், நம்ம ஊருலயும் இந்த அளவுக்கு ட்ராபிக் ஜாம் ஆகுதா? ரோடுகள் பரவாயில்லைதானே?
அரவிந்தன்,
ஒரு வாரம் தானே ஆகிறது! பாலத்தில் கடந்த ஒரு மாதமா இந்த விளக்குகள் எரிகிறது. அதான் சொன்னேன்.
நன்றி திகழ்
//Build - Operate - Transfer model என்கிறார்கள். அப்ப நேரடியா நம்ம பணம் இல்லதானே?//
எனக்கு ஒண்ணுமே புரியல...
பிரகாஷ்,
அதாவது, தனியார் நிறுவனங்களே கட்டி, பராமரித்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கட்டணம் வசூலித்து (செலவு செய்த பணத்தை லாபத்துடன் பெற்ற பின்)பிறகு அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள்.
http://en.wikipedia.org/wiki/Build-Operate-Transfer
நல்ல பதிவு!!!
நீங்க சொன்ன மாதிரி டோல்கேட்டுல காசு கொடுக்கறதுக்கே தனியா சம்பாதிக்கனும் போல....
இப்ப எந்த ஹைவேல போனாலும் புடுங்குறானுங்க!!!
எத்தனை ஹைவேக்கள்
எத்தனை டோல்கேட்டுகள்
வீடு தாங்காது சாமி!!!
நன்றி இந்தியன்
ஆமாம் நரேஷ்... கொடுமை தாங்க முடியலை...
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment