ஒரு படத்திற்கு கிளைமாக்ஸ் ரொம்ப முக்கியம். படத்தின் ஆரம்பமோ, மற்ற பகுதிகளோ எவ்வளவு நன்றாக இருந்தாலும், பெரும்பாலும் படத்தின் முடிவை பொறுத்துத்தான் ரிசல்ட் அமையும். இந்த படத்திலும், என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் படம் முழுக்க ரசித்து பார்த்தாலும், வெளியே வந்தவுடன், படம் பார்க்க காத்திருந்தவர்களிடம், ‘படம் நல்லா இல்லை’ என்று சொல்லிவிட்டார். இதற்காகவே இந்த பத்தி முதலில்.
’காதல் கொண்டேன்’ பட விளம்பரத்தில் ‘A Selvaraghavan Film' என்று போட்டதை பார்த்து, ‘இதுல்லாம் ஓவர்’ என்று நினைத்திருந்தேன். அதற்கு பிறகு பல படங்களில், அதை நிருபித்து காட்டிவிட்டார். இப்போது டைட்டில் பார்க்காமலே சொல்லி விடலாம். ‘A Selvaraghavan Film'.
கடல் கடந்து, காடு கடந்து, ஏழு விதமான தடைகளைத் தாண்டி, பிரமாண்டமாக, விறுவிறுப்பாக சோழ பரம்பரையிடம் இருக்கும் ஒரு பாண்டிய நாட்டு சிலை நோக்கிய பயணம் இப்படத்தின் கரு. முதல் பாதி முழுக்க கலகலப்பு, பரபரப்பு, விறுவிறுப்பு. இரண்டாம் பாதி, தரித்திரம் கண்ட சரித்திரத்தின் சோகம்.
பல விஷயங்கள் இந்த படத்தில் புதுசு. இதுவரை இப்படி ஒரு தமிழ்படம் வந்ததில்லை என்று தைரியமாக சொல்லலாம். இந்த படத்தில் இருந்த சில காட்சிகளை இப்படி எடுக்கும் தைரியம் செல்வராகவனுக்கு மட்டுமே உண்டு என்றும் சொல்லலாம். மற்றபடி, கார்த்தியின் லோக்கல் வசனங்கள், ஹீரோவை உரசும் ஹீரோயின்கள், டப்பாங்குத்து ஆடும் சோழ மன்னன் என படமெங்கும் வழக்கம்போல் செல்வராகவன் டச்.
படத்தில் வெயிட்டான கேரக்டர், கார்த்தியுடையது என்று சொல்ல முடியாது. ரீமா சென்னும், பார்த்திபனும் தான் நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள்.
படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில், ’படம், ஆங்கில படத்திற்கு இணையாக இருக்கிறது’ என்றதற்கு ‘ஏன் எப்போதும் ஆங்கில படத்துடன் ஒப்பிடுகிறீர்கள்?’ என்று ஆளாளுக்கு பொரிந்தார்கள். கற்பனை திறன், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என பல விஷயங்களில் நாம் காலரை விட்டு கொள்ளலாம். குழுவுக்கான ஒப்பனை, கிராபிக்ஸ் என சில விஷயங்களில் இன்னமும் மெனக்கெட வேண்டும். படம் பார்க்கும்போது, பல ஆங்கில படங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இவ்வளவு கஷ்டப்பட்டு படமெடுத்திருக்கும் செல்வராகவன், இன்னும் கவனமாக கிளைமாக்ஸை செதுக்கி இருக்கலாம். சினிமாத்தனமாக இருந்தாலும், குழப்பமில்லாமல், தெளிவாக முடித்திருக்கலாம். சரி, இவ்வளவு உழைப்புக்கு பிறகு இப்படி சொல்லிக்கொண்டே போவது, பெரும்பாவம். இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
ஆயிரத்தில் ஒருவன் - புதுமை. துணிச்சல். பிரமாண்டம்.
13 comments:
படத்திற்கு வேறு ஒரு கிளைமாக்ஸ் நினைக்க முடியவில்லை. ஆனால் ரொம்பவும் இழுக்காமல் தெளிவாக முடித்திருக்கலாம். ஆனாலும் வெகுஜன ரசனைக் கொண்டவர்களிடம் இங்கிலீஷ் படம் போல இருக்கு என்றுதான் சொல்கிறேன். படம் நிச்சயம் வெற்றி பெற்றாகவேண்டும்.
குடும்பம். குழந்தைகளோட படம் பார்க்கப் போறதே என்ஜாய் பண்ணத்தான். செல்வா படம் பொறுத்தவரைக்கும் குடும்பத்தோட பார்கக் சான்ஸ் கொடுக்கறதே இல்லை, மத்தபடி 3 வருட உழைப்பு டிஸ்கரேஜ் பண்ண வேண்டாமே,
Bairave
//இவ்வளவு உழைப்புக்கு பிறகு இப்படி சொல்லிக்கொண்டே போவது, பெரும்பாவம். இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.//
சரியாத்தான் சொல்லி இருக்கிங்க.
//இவ்வளவு உழைப்புக்கு பிறகு இப்படி சொல்லிக்கொண்டே போவது, பெரும்பாவம். இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.//
அது..
உங்கள் விமர்சனம் பார்த்து விட்டு படம் பார்த்தேன். இறுதி காட்சி ஒன்றும் மோசமில்லை. ஆனால் வேறு ஏதோ திணிப்பது போல் இருக்கிறது. இலங்கை விவகாரமா என்று தெரியவில்லை. ஆனால் ரீமா சென் நச் என்று ( நடித்து )இருக்கிறார்.
naan innum aayirathil oruvan padam paarkalai paarthuvittu solren . aanaaal ithuvarai yaarum edukka thayangiya sarithira kadhayai eduthathukkaagavaavathu nichyam pdam hit aaganum.
ஆமாம் தர்ஷன்
ஆமாங்க மேனகா
நன்றி குட்டிபிசாசு
வாங்க வினோத் கௌதம்
சம்பத், என் நண்பர்களும் அப்படித்தான் சொன்னார்கள்.
பார்க்கலாம் செந்தில்குமார்
Namma makkal Indiana Jonesa tamil dubbingla paarkka aarambichu pala varusham aayiduchu ! so why copy that! just watch crystal skull again and then revert.
Post a Comment