ஜெமினிக்கு பிறகு அவருடைய டெம்ப்ளேட் காட்சிகள் சலிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, நகைச்சுவை என்று தாமு, சார்லி யாரையாவது வள வளவென பேச விடுவது. வசூல்ராஜாவும், அட்டகாசமும் கமலுக்காகவும், அஜித்துக்காகவும் பார்த்த படங்கள். அதன் பிறகு சாக்லேட் ஹீரோக்களை வைத்து அவர் எடுத்த எந்த படத்தையும் பார்க்கவில்லை. அசலுக்கு அவர் இயக்குனர் என்றபோது ‘அய்யய்யோ’ என்றிருந்தது. இது அவ்வளவுதான், இதற்கு அடுத்தது என்ன என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவர் படங்களின் மீது தான் ஆர்வமின்மை என்ற போதிலும், ஒரு மனிதராக பரிதாபத்திற்குரியவராக இருந்தார். இவர் இவரது படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளரையும், கலை இயக்குனரையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டு, ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார். ஆரம்பம் நன்றாகத்தான் சென்றது. பின்பு, என்ன நடந்ததோ, நிறுவனத்தின் ஒரு பார்ட்னரான கலை இயக்குனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார். கமல் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை என்று புகார் கூறினார். செக் பவுன்ஸ் ஆன கேஸில் சிக்கினார். மனுசன் தொடர்ந்து கஷ்டக்காலத்தில் தவித்தார். படங்களும் எதுவும் ஓடவில்லை.

இந்த நேரத்தில் அஜித் தனது பழைய நண்பருக்கு அசல் மூலம் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சரணுக்கு மீண்டும் வெற்றி அமையுமா? பாடல்களை கேட்கும்போது அமையும் என்றே தோன்றுகிறது.
---
அஜித் ஒரு ஆச்சரியம். லவ்வர் பாயாக அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக நிற்பவர். பெரிய வெற்றிகளுக்கு பிறகு வரும் இவரின் சில படங்களை பார்க்கும்போது, கதையை கேட்கவே மாட்டாரோ? என்று தோணும். இவருடைய வெள்ளை தோலுக்கும், பாலிஷ் முகத்திற்கும் பெண் ரசிகைகள் எக்கச்சக்கமாக இருக்கலாம். எப்படி இவ்ளோ மசாலா பட ரசிகர்கள்? இதற்கும், நிஜத்தில் ஏதாவது சொல்லி உசுப்பேற்றுபவர் இல்லை. சினிமாவை வெறும் தொழிலாக, தொழிலில் ப்ரோபஷனலாக ஈடுபடுபவர். பிறகு எப்படி?
தனி ஆளாக மேலே வந்தது, அவ்வப்போது நன்றாக நடித்து பேர் வாங்குவது, தோன்றுவதை மட்டும்/அப்படியே சொல்லுவது, சினிமாவை விட்டு மற்ற பிரச்சினைக்களுக்கு போகாதது போன்ற காரணங்களால் இவரை தமிழகம் கவனித்துவருகிறது. தவிர, கொஞ்சம் அனுதாபமும் உண்டு.

களிமண்ணு தான். இவருடைய நடிப்பு - இயக்குனரை பொறுத்தது. சில படங்களில் ‘அட’, சில படங்களில் ‘அடச்சே’. பேசுனாத்தானே பிரச்சினை என்று இந்த படத்தில் அவருக்கு வசனம், இரண்டு பக்கம் தானாம். படம் ஹிட்டாக இந்த ஒரு காரணம் போதாது? படத்தின் கதை, திரைக்கதையில் வேறு உதவியிருக்கிறாராம். படம் வந்தபிறகு தான் தெரியும், அது உதவியா என்று.
---
அஜித்துடன் மட்டுமில்லை. தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜுடனும் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறார் சரண். பரத்வாஜ்-வைரமுத்து-சரண் கூட்டணியின் ஏழு பாடல்களில் நாலு சுலபமாக ஹிட்டாகிவிடும். சமீபகாலங்களில் மாஸ் ஹீரோக்களுக்கென எடுக்கப்படும் படங்களில் நாலு குத்து, ஒரு லைட் மெலடி என்ற பார்முலாவில் தான் பாடல்கள் அமையும். இதில் சில சிச்சுவேஷன் பாடல்கள் தெரிகிறது. அது மட்டுமில்லாமல், ரசிகர்களுக்காக ‘தல போல வருமா?’, ‘டொட்ட டொய்ங்’ என எகிறி அடித்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் வெஸ்டர்ன் இசைதான். மறக்காமல், பரத்வாஜ் தனது எலக்ட்ரிக் கிட்டாரை எடுத்து வந்திருக்கிறார். இந்த கிட்டாரை வைத்து மட்டும் தான், பரத்வாஜ் இசை என்று கண்டுப்பிடிக்க முடியும். மற்றபடி, நிறைய மாற்றங்கள்.
ஜேம்ஸ் பாண்ட் தீம் போல ஆரம்பிக்கும் ‘காற்றை நிறுத்தி’ பாடலில் அட்டகாசம் படத்தின் ‘தல போல வருமா’ பிட், செமையா ஃபிட் ஆகியிருக்கிறது.
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை இழிவென ஏசுவான்
உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான்
தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான்
மாயமா... மந்திரமா...
தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...
பிப்ரவரியில் தமிழ்நாட்டில் எங்கும் ‘டொட்ட டொய்ங்’காகத்தான் இருக்க போகிறது. நவீன இசையில் பழைய தாளத்தில் ஆட்டம் போட வைக்கும் பாடல்.
பணயக்கைதி போல என்னைய ஆட்டி படைக்கிற!
பங்கு சந்தையை போல என்னை ஏத்தி இறக்குற!
ஹேய்! நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்குற
கத்தி கண்ணு வத்தி வச்ச என் உச்சி மண்டையில
டொட்ட டொய்ங்! டொட்ட டொய்ங்!
’ஏய் துஷ்யந்தா’வும் கேட்டவுடன் பிடிக்கும் பாடல். பழைய டைப் ராகமும், தாளமும், வரிகளும் இந்த பாடலின் பலமென்றால், பாடகி சுர்மிகியின் குரல் பாடலை இன்னமும் உயரத்திற்கு ஏற்றி செல்கிறது.
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே வெகு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள் சுக நினைவு
இது போதும். மீதியை அப்புறம் கேட்டுக்கலாம்.
.
13 comments:
எனக்குப் பிடித்த சரண் படம் வட்டாரம்
அவரது வசனங்கள் அருமையாக இருக்கும்
:-)
பாட்டு எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஏகன் மாதிரி வராது எண்டு நம்புவோமாக
தமிழ் படம் பாட்ட கேட்டு பாரு...
பட்டைய கிளப்புது ...
தர்ஷன்,
அப்படியா? ஏனோ அந்த படம் பார்க்கும் ஆர்வமே வரவில்லை.
வாங்க ராஜு
ஆமாம் சங்கர்
அப்படியா? கேட்டுருவோம், ராஜேஷ்...
அசல் பாட்டு எனக்கும் புடிச்சிருந்தது!!!
அதிலும் சரணுடன் பரத்வாஜ் கூட்டணி என்பது எப்பொழுது ஓரளவு வெற்றியையே தேடித் தரும்...
எல்லாப் பாடல்களையும் விட இதில் எனக்கு மிகப் பிடித்தது துஷ்யந்தாதான்...பாடகியின் குரல் என்னே வசீகரம்??? காதலும் காமமும் வழிகிறது!!!
நரேஷ்,
எனக்கும் அதே.
padam tavusar
asal tavusar
tavusar padam
Post a Comment