அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்னொரு வருடம் ஒடிவிட்டது.
அப்பப்ப ப்ராஜெக்ட் ஸ்டேடஸ் பார்ப்பது போல், வாழ்வின் மைல்கல்களை இப்படி புத்தாண்டு சமயம் திரும்பி பார்த்துக்கொள்ளலாம். சரி பார்த்துக்கொள்ளலாம். என்ன செய்ய நினைத்தோம்? என்ன செய்திருக்கிறோம்? இப்படியெல்லாம்.
நான் செய்ய நினைத்ததை செய்திருக்கிறேன். என்ன செய்ய நினைத்தேன்? ஒண்ணும் பெருசா செய்ய வேண்டாம் என்று நினைத்தேன். அப்படியே ஆனது. :-)
பொதுவாக ஒரு மகிழ்ச்சியான சுதந்திரமான வருடமாக இருந்தது, சில ரகசிய இழப்புகள் இருந்தாலும்.
ரெகுலர் வேலைகளைத் தவிர, நிறைய புத்தகங்கள் படித்தேன். நிறைய படங்கள் பார்த்தேன். நிறைய பாடல்கள் கேட்டேன். சில ஊர்களுக்கு சென்றேன். சில புது நட்புகள் கிடைத்தது. சில பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட்டது. எப்பவெல்லாம் பிசியாக இருந்தேனோ, அப்பொழுதெல்லாம் நிறைய எழுதினேன். என்ன லாஜிக்கோ!
இதோ இந்த புத்தாண்டு தினம் போன்ற நாட்கள் கூட நட்பை புதுப்பித்துக்கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பம் தான். நண்பர்களுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பளிக்கிறதே! என் வாழ்த்து யாருக்காவது வேண்டுமென்றால், மெயில் ஐடிக்கு போன் நம்பர் அனுப்பவும். :-)
இனி வரும் ஆண்டு என்ன செய்யலாம்? நிறைய திட்டங்கள் இருக்கிறது. செய்ய வேண்டும்.
சரி, மணி பனிரெண்டு ஆகிவிட்டது. வெளியே வெடிச்சத்தம் கேட்கிறது. மொபைலில் எஸ்.எம்.எஸ்.கள் வந்து தொடர்ச்சியாக விழுந்துக்கொண்டிருக்கிறது.
திரும்பவும்,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருடைய கனவுகளும் மெய்பட வாழ்த்துக்கள்.
.
7 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி கண்மணி... உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
http://karthick-rahmanfan.blogspot.com/
ungal paarvaikaaga....
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
//சில பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட்டது. எப்பவெல்லாம் பிசியாக இருந்தேனோ, அப்பொழுதெல்லாம் நிறைய எழுதினேன். என்ன லாஜிக்கோ!//
இந்த லாஜிக் எனக்கும் ஒத்து வருது!!!
நரேஷ்,
அப்ப நீங்க இப்ப ப்ரீயா இருக்கீங்களா? :-))
//அப்ப நீங்க இப்ப ப்ரீயா இருக்கீங்களா? :-))//
இந்த வாரம் முழுக்க :))))
:-)
Post a Comment